IPL 2024 MS Dhoni Arrived in Chennai Chennai Super Kings CSK Indian Premier League | MS Dhoni: “அலப்பறை கிளப்புறோம்” சென்னை வந்தார் தல தோனி


 
ஐ.பி.எல் 2024:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியே சென்னையில் நடைபெற உள்ளது ஐபிஎல் ரசிகர்கள் மட்டும் இன்றி தோனி ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல் தொடராக இந்த தொடர் தான் இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், தோனி 40 வயதை கடந்தாலும் பிட்னஸ் உடன் இருப்பதால் அவர் கண்டிப்பாக இன்னும் ஒரு சில ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் அடுத்த சீசனில் விளையாடுவது பற்றி தோனி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
 

#THA7A Dharisanam! 🦁💛#DenComing pic.twitter.com/dJbdsDd6wf
— Chennai Super Kings (@ChennaiIPL) March 5, 2024

அதன்படி, ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள சூழலில் சி.எஸ்.கே அணி வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர் என்ற தகவல் வெளியானது.  அதன் பிறகு பயிற்சியை தொடங்க இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.  இந்நிலையில், முதல் கட்டமாக சி.எஸ்.கே கேப்டனான எம்.எஸ்.தோனி இன்று சென்னை வந்துள்ளார். அதன்படி, சேப்பாக்கத்தில் தனது பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறார். தோனி எப்போது சென்னை வருவார், அவரை எப்போது பார்ப்போம் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் சென்னை வந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சென்னை விமானநிலையத்திற்கு வந்துள்ள அவரை சென்னை அணி ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். 
 
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
 
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 

மேலும் காண

Source link