IPL 2024: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாறும் ஐ.பி.எல். 2024? மக்களவை தேர்தல்தான் காரணமா? விவரம் உள்ளே!

ஐபிஎல் 2024ன் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

ஐ.பி.எல்.

ஐ.பி.எல்.2024ல் ஆரம்ப கட்ட அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சீசனில் இரண்டாம் கட்ட அட்டவணையை இன்னும் ஐ.பி.எல். நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில், கிடைத்த தகவலின்படி, ஐ.பி.எல். 2024ன் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு காரணம் இந்தியா முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதையடுத்து, ரசிகர்களின் பாதுகாப்பை கருதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏன்..?

தற்போது வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஐ.பி.எல். 2024ன் இரண்டாம் கட்ட போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடப்படலாம் என்றும், ஐ.பி.எல். போட்டியின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகள் மட்டும் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் போட்டி அட்டவணை மற்றும் தேர்தல் தேதி கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வரும்போது மட்டுமே இந்த முடிவு எடுக்கப்படும்.

ஆனால், ஐ.பி.எல். இரண்டாம் கட்ட அட்டவணை இன்னும் வரவில்லை. அதே சமயம், மக்களவை தேர்தல் தேதிகள் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அதன் பின்னரே ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா? இல்லையா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஐ.பி.எல். 2024ன் முதல் 21 போட்டிகளின் அட்டவணையை பி.சி.சி.ஐ. சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு அடுத்த மீதமுள்ள போட்டிகளே மக்களவை தேர்தல் தேதி தேர்வுக்கு பின்னர் துபாய்க்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்

இதற்கு முன்னரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டன. ஐ.பி.எல். 2020 போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன. கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதியின்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை அப்போது எடுத்துள்ளது.

அதேசமயம், 2014ல் தேர்தல் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட்டன. 2014 சீசனின் முதல் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்தடுத்த போட்டிகள் அனைத்தும் ஷார்ஜா மற்றும் துபாயில் போட்டிகள் நடந்தன. 2014 சீசனின் 20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற நிலையில், மற்ற அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2024ன் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை:

ஐ.பி.எல். 2024ன் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சென்னையில் ஐ.பி.எல். தொடக்க விழாவுடன் நடைபெறுகிறது. இந்த சீசனின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டும் பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. இதில் சென்னைக்கு 4 போட்டிகள் உள்ளன. சென்னையின் இரண்டாவது ஆட்டம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வருகின்ற மார்ச் 26ம் தேதி எதிர்கொள்கிறது. தற்போதைய அட்டவணைப்படி, 21வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Source link