சென்னை அண்ணாநகரில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 35 வயதான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார.

35 வயதான பெண் ஒருவர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருவதாகவும் திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் உறவினர் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த பெண் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் முகப்பேரை சேர்ந்த சத்யஜித் (வயது 35) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சத்யஜித் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் நெருங்கி பழகியுள்ளார். ஒரு நாள் சத்யஜித் கோயம்பேட்டில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துள்ளார். இளம்பெண்ணும் அவரை நம்பிச் சென்றுள்ளார். ஆனால் சத்யஜித் உறவினர் வீடு இல்லாமல் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும், அவர் எடுத்த வீடியோவை வைத்து மிரட்டி, தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என அச்சுறுத்தியுள்ளார்.

அப்படி வர மறுத்தால் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்வார் என மிரட்டியுள்ளார். சத்யஜித்தின் இந்த செயலால் மனம் உடைந்த அந்த பெண் அண்ணாநகர் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, இளம்பெண் கூறியது உண்மை என தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் சத்யஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.