விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் கோயிலுக்குச் பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து பக்தர்கள் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழாவையொட்டி இருமுடி விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா கடந்த 1ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இருமுடி விழாவிற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் இருமுடி அணிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு ரயில், விமானம், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சிவகிரியில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு பக்தர்கள் திண்டிவனம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பக்தர்கள் சென்ற வேன் திண்டிவனம் அருகே உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை சின்ன நெற்குணம் லேபர் அருகே சென்று கொண்டிருந்த போது வேனின் பின் சக்கரம் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 வயது சிறுவன் மற்றும் பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படும்காயங்ம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் சிறிது நேரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.