anna serial today zee tamil april 2nd written update | Anna Serial: கதறி அழும் ஷண்முகம்.. வெளிவந்த இசக்கியின் தியாகம்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சௌந்தரபாண்டி கழுத்தில் அரிவாளை வைக்க, முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் அரிவாளை வைத்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது முத்துப்பாண்டி “என் அப்பாவை விடுடா, இல்லனா உன் தங்கச்சி கழுத்தை அறுத்துடுவேன்” என்று சொல்ல, இசக்கி “என்னைப் பத்தி கவலைப்படாதே அண்ணே, அவன் கழுத்தை அறு” என்று அதிர்ச்சி கொடுக்க, ஷண்முகம் சௌந்தரபாண்டியை தள்ளி விட்டு இசக்கியை காப்பாற்றி முத்துபாண்டியை அடித்து கீழே தள்ளுகிறான். 
இசக்கி “உனக்காகவும் நம்ம குடும்பத்துக்காகவும் தான் நான் வந்தேன், நீ இவங்களை கொன்னுட்டு கொலைகாரனாகி ஜெயிலுக்கு போயிடக் கூடாது, ரத்னா அக்காவுக்கு அவளுக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை அமையனும்னு தான் வந்தேன்” என்று குடும்பத்திற்காக செய்த தியாகத்தை உடைக்கிறாள். “என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க” என்று சொல்ல, ஷண்முகம் “உன்ன இப்போ எல்லாம் கூட்டி போக மாட்டேன். உன்னை கூட்டி வந்ததற்காக இவங்க படாத பாடு படணும், உன்னை பார்த்தாலே தெறித்து ஓடணும். அப்பறம் என் தங்கச்சியாக வீட்டிற்கு கூட்டி போறேன்” என்று கிளம்பிச் செல்கிறான். 
இசக்கி சொன்ன வார்த்தைகளை நினைத்து ஷண்முகம் கண்ணீருடன் வண்டியை ஓட்ட, காற்றில் அவன் கண்ணீர் பரணி மீது பட அவளும் வருத்தப்படுகிறாள். இங்கே இசக்கி எதுவும் நடக்காதது போல தட்டு நிறைய சாப்பாட்டை போட்டு சாப்பிட, “இவ்ளோ கலவரம் நடந்திருக்கு, சாதாரணமாக சாப்பிடுற” என்று பாக்கியம் கேட்க, “இவனுங்கள ஓட ஓட விரட்டணும், அதுக்கு உடம்புல தெம்பு வேண்டும்” என்று சாப்பிடுகிறாள். 
மறுபக்கம் ஷண்முகம் வீட்டிற்கு வர தங்கைகள் என்னாச்சு என்று கேட்க, ஷண்முகம் “ஒன்னும் ஆகல” என்று ரூமுக்குள் சென்று விடுகிறான். பரணி தப்பா எதுவும் நடக்கல என்று சொல்லிக் கொண்டிருக்க, ரூமுக்குள் ஷண்முகம் இசக்கி போட்டோவை வைத்து கொண்டு சத்தம் போட்டு கதறி அழ எல்லாரும் பதறி உள்ளே ஓடுகின்றனர். 
“உன்ன நான் தப்பா நினைச்சிட்டேன், என் தங்கச்சி இந்தக் குடும்பத்தோட குல தெய்வம்” என்று அழ, தங்கைகளும் சண்முகத்தை கட்டி பிடித்து அழுகின்றனர். இப்படியான நிலையில் பாசப் போராட்டத்துடன் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது,.
மேலும் படிக்க: VJ Adams: அட.. சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ நியாபகம் இருக்கா.. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இதுதான்!
Hotspot: படம் பிடிக்கலனா செருப்பால் அடிங்க.. ஹாட்ஸ்பாட் பட இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் வேதனை!

மேலும் காண

Source link