Actor Karthik: அரசியலில் ராமதாஸ் மாதிரி வரவேண்டியவர்.. தென்மாவட்டத்தின் ராஜா கார்த்திக் சறுக்கியது எப்படி?

மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரான கார்த்திக் சரியாக அரசியலில் செயல்பட்டிருந்தால் வேற லெவலில் இருந்திருப்பார் என தயாரிப்பாளர் சௌந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 1980 மற்றும் 90களில் காலக்கட்டத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்தவர் கார்த்திக். மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடைமொழியுடன் வலம் வந்த அவர், தனது சிறப்பான நடிப்பால் நவரச நாயகன் என்ற பட்டத்தைப் பெற்றார். முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த கார்த்திக் 2006 ஆம் ஆண்டு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து 2009 ஆம் அக்கட்சியில் இருந்து விலகி   நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கினார். அதுவும் பெரிய அளவில் கார்த்திக்கிற்கு கைகொடுக்கவில்லை. இதன்பின்னர் அந்த கட்சியை கலைத்து விட்டு 2018ல் மனித உரிமைகள் காக்கும் கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான சௌந்தர பாண்டியன் கார்த்திக்கின் அரசியல் பயணம் பற்றி பேசியுள்ளார்.

அதில், “நான் கார்த்திக்குடன் பயணப்பட்டு அரசியலுக்குள் சென்றேன். சாதாரணமாக இருந்த என்னை கருணாநிதி, ஜெயலலிதாவை சந்திக்க வைத்தார். சௌந்தர் என்னுடைய தம்பி என்று தான் சொன்னார். கார்த்திக் கட்சி ஆரம்பித்தவுடன் முதல்முறையாக அவரை வைத்து விருதுநகரில் மாநாடு நடத்தினேன். காரும், பணமும் கொடுத்து ஊர், ஊராக அவருக்காக சென்று அவருக்காக ஆதரவு திரட்ட அனுப்பினார். 2003ல் முதலில் ராஜபாளையம், அதன்பிறகு மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாடு நடத்தினோம். மிகப்பெரிய எழுச்சி மாநாடாக அந்நிகழ்ச்சி நடந்தது. 2006ல்  அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

நான் கட்சியின் தலைமை நிர்வாக செயலாளராக இருந்தேன். என் வீட்டில் தான் கட்சி அலுவலகம் தான் இருந்தது. அந்த ரோட்டில் மட்டும் கட்சி தொடங்கியதும் சுமார் 5 ஆயிரம் பேர் கூடினார்கள். தமிழ்நாடு முழுவதும் எம்.எல்.ஏ. சீட்டுக்காக விண்ணப்பங்கள் விநியோகித்தோம். அதேசமயம் ஜெயலலிதா, கருணாநிதி இடையே கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தினோம். எங்களுக்கு அதிமுகவில் 10 சீட் கேட்டோம். முடியாது என சொல்லவும் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தென் மாவட்டங்கள் முழுவதும் சுயேட்சையாக 111 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார்.

அன்னைக்கு நயினார் நாகேந்திரன் தோற்றார். அவர் இன்றைக்கும் சரியாக இருந்திருந்தாலும் பாமக நிறுவனர் ராமதாஸ் மாதிரி வந்திருப்பார். அவர் கொஞ்சம் அசந்ததால் அது  மிஸ்ஸாகி விட்டது. கார்த்திக் பொய் பேசமாட்டார், நேர்மறையாக இருப்பார். அவருக்கு அரசியல் சூதுவாது தெரியவில்லை. அது தெரிந்திருந்தால் இன்று தென் மாவட்டங்களுக்கு ராஜாவாக இருந்திருப்பார். முத்துராமலிங்க தேவருக்குப் பின், முத்து ராமனுக்குப் பின், கார்த்திக்கிற்கு தான் பணம் கொடுக்காமல் மக்கள் கூடும் கூட்டம் இருந்தது. இன்றைக்கும் அவர் களத்தில் இறங்கினால் நிச்சயம் ஜெயிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

Source link