சேத்துப்பட்டு மகளைபாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது 
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் வயது  (38). இவருடைய மனைவி கீர்த்திக்கும்  இரண்டு மகள்கள் உள்ளனர். பாண்டியன் குடி போதைக்கு அடிமையானவர். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பாடு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்தி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனை பிரிந்து வெளியே சென்றுள்ளார்.
பாண்டியன்  இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்தார். அதன் பிறகு மூத்த மகள் (10, ) 2வது மகள் (7) திண்டிவனத்தில் உள்ள விடுதியில் படித்து வருகிறனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் பள்ளியில் விடுமுறை விட்டுள்ளனர். இதனால் பாண்டியன் இரண்டு மகள்களையும்  விடுதியில் இருந்து விடுமுறைக்கு  வீட்டுக்கு அழைத்து வந்தவர். பொங்கல் விடுமுறை முடிந்த பிறகும் மகள்களை மீண்டும்  பாண்டியன் விடுதிக்கு கொண்டு சேர்க்கவில்லை.

தாய் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
இதற்கிடையில்  தான் பெற்றெடுத்த மகள் என்று கூட நினைக்காமல், பாண்டியன் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து  மகள்கள் இந்த சம்பவம் குறித்து என்ன செய்வது அறியாமல் பயத்தில் இருந்து வந்துள்ளனர். உடனடியாக இரண்டு சிறுமிகளும்  செஞ்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பாட்டியை கண்டவுடன்  தந்தை தகாத முறையில் நடந்து கொண்டதை கூறி சிறுமி கதறி  அழுது உள்ளார். உடனடியாக  பாட்டி அவருடைய மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய பெண்ணிற்கு நடந்த சம்பவத்தை குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் சிறுமிகளின் தாய் புகார்  அளித்துள்ளார். உடனடியாக மாவட்ட ஆட்சியர்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

 
போக்சோ சட்டத்தில் தந்தை கைது  
இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து கூறியுள்ளனர். காவல்நிலைய ஆய்வாளர்  பிரபாவதி மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து  சேத்துப்பட்டு வந்து பாண்டியனை காவல்நிலையத்திற்கு  அழைத்துச் சென்றனர். பின்னர் 10 வயது சிறுமி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு மருத்துவ  சிகிச்சை அளித்தனர்.
அப்போது சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதன்  அடிப்படையில், பாண்டியன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய  சிறையில் அடைத்துள்ளனர். தந்தையே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம், 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.

மேலும் காண

Source link