Zomato: சுத்த சைவமா? சாதி குறியா? போட்டு தாக்கிய நெட்டிசன்கள் – அடிபணிந்த சொமாட்டோ!

சோமேட்டோ சேவை:

இந்தியாவில் உணவுகளை டெலிவரி செய்வதில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது சொமாட்டோ மற்றும் ஸ்விகி ஆகியவைதான். இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி மட்டும் இல்லாமல் தற்போது மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றையும் டெலிவரி செய்து வருகின்றன.

தொடக்கத்தில் இந்த நிறுவனங்களில் இந்தியாவில் கணிசமான அளவே உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் இணையம் வளர வளர இந்தியாவில் 24 மணி நேரமும் இந்நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் சொமாட்டோ நிறுவனத்திற்கு சுமார் 58  மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சுமார் 647 மில்லியன் ஆர்டர்கள் செய்துள்ளனர்.

விவாதத்தை கிளப்பிய ப்யூர் வெஜ் டெலிவரி:

இந்த நிலையில், சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு புதிய பச்சை நிற உடையை நேற்று சோமோட்டோ அறிமுகப்படுத்தி இருந்தது. சைவ உணவுகளை டெலிவரி செய்வதற்கு புதிய ஆட்களை நியமித்து, அவர்களுக்கு  பச்சை நிற உடை,  பைகள் போன்றவை அளிக்கப்பட்டன. அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இவர்கள் டெலிவரி செய்யமாட்டார்கள் என சோமாட்டோ சிஇஓ தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி இருந்தது. ஒரு தரப்பினர் சோமேட்டோ நடவடிக்கைகளைப் பாராட்டினர். அதேநேரம், மற்றவர்கள் உணவில் இதுபோல பாரபட்சம் காட்டப்படுவதை ஏற்க முடியாது என்றும் சாதி குறியை சோமேட்மோ பயன்படுத்துவதாக கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

பச்சை நிறத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சோமேட்டோ:

இந்த நிலையில், சோமேட்டா நிறுவனத்தின் சிஇஓ தீபீர்ந்தர் கோயில் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதன்படி, "சுத்த சைவ உணவு ஆர்டர்களுக்கான தனி டெலிவரி சேவை தொடர்ந்து இருக்கும். சைவ உணவு விரும்பிகளுக்காக நியமிக்கப்பட்ட பிரத்யேகமான ஆட்களும் தொடர்ந்து வேலை செய்வார்கள்.

ஆனால், அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் மட்டும் திருத்தம் செய்யப்படுகிறது. அதாவது, சைவ உணவை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அனைத்து சோமேட்மோ ஊழியர்களை போலவே சிவப்பு நிற ஆடையை அணிந்து தான் வேலை செய்வார்கள்.

இதன் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் சைவ உணவை வழங்குகிறாரா என்பது அடையாளம் காண முடியாது. இருவேறு நிற உடையில் செல்லும்போது சில குடியிருப்பு வாசிகளால் அவர்கள் தடுக்கப்படுவார்கள். இதை தவிர்க்கும் வகையில் மொத்த டெலிவரி செய்யும் ஊழியர்களும் சிவப்பு நிற ஆடை அணிவார்கள்.

எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் அவசியம். இதை நாங்கள் புரிந்துக் கொண்டு பச்சை நிற உடையை ரத்து செய்கிறோம். நேற்று இரவு இதைப் பற்றி பேசிய அனைவருக்கும் நன்றி. இதனால், உண்டாகும் எதிர்பாராத விளைவுகளை எங்களுக்கு புரிய வைத்தீர்கள்.

எவ்வித பெருமையும், தலைக்கணமும் இல்லாமல் உங்களது கருத்துகளை நாங்கள் கேட்கிறோம். உங்களுக்கு சேவையை நாங்கள் தொடர்ந்து செய்வோம்" என்றார். இதன் மூலம் சோமேட்டோவின் பச்சை நிற உடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Source link