விழுப்புரம் : ஒரு துரும்பு அளவுக்கு கூட மோடி தவறு செய்யவில்லை. மோடி பரிசுத்தமானவர், அன்பிற்கு இலக்கணமானவர் என திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வானூர் அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராமதாஸ்:
எனக்கு மக்கள் மனதில் இடம் இருந்தால் போதும்
”மக்கள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி 108 சாதிகளுக்கு எம்.பி.சி இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தேன். நான் எந்த பதவியிலும் இருந்ததில்லை. பதவி சுகம் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் சத்தியம் செய்து இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என எந்த பதவிக்கும் செல்ல மாட்டேன். சிலர் எனக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என சொல்கிறார்கள். எனக்கு எந்த பாரத ரத்னா விருதும் தேவையில்லை. எனக்கு மக்கள் மனதில் இடம் இருந்தால் போதும். பாரத ரத்னா அதைவிட பெரிய விருது ஒன்றும் இல்லை.
நான் குடியரசுத் தலைவராகியிருக்கலாம், மத்திய மந்திரியாக ஆகி இருக்கலாம். ஆனால் நான் சத்தியம் செய்துள்ளதால் எந்த பதவிக்கும் போக மாட்டேன். இன்று உலகத்திலேயே பல வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் தலைவர் மோடி. உலக தலைவர்கள் கண்டு வியக்கும் அற்புதமான தலைவராக மோடி உள்ளார். மூன்றாவது முறையாக மோடியை நீங்கள் பிரதமர் ஆக வேண்டும். ஒரு துரும்பு அளவுக்கு கூட மோடி தவறு செய்யவில்லை. மோடி பரிசுத்தமானவர், அன்பிற்கு இலக்கணமானவர் மோடி. நானுறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள் என கூறுகிறார்கள். நம்முடைய வேட்பாளர் 401-வது வேட்பாளர். இவர் ஓட்டளித்து மோடியை பிரதமராக தேர்ந்தெடுப்பார். எனவே அதற்கு நீங்கள் மாம்பழ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
மேலும் காண