top news India today abp nadu morning top India news March 26 2024 know full details | Morning Headlines:இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த முதல்வர்



இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (26 மார்ச்) தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் மற்றும் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. 
இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது. மேலும் படிக்க..

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால்  அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்-முக ஸ்டாலின் விமர்சனம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராபர்ட் ப்ரூஸ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.. இந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விளவங்கோடு பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசும் பொழுது, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தாரகை போட்டியிடுகிறார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த வேட்பாளர் தாரகை. மேலும் படிக்க..

 “முதல்ல தேர்தல் பிரச்சாரம் அப்புறம்தான் தக் லைஃப்” எல்லா பட வேலைகளையும் ஒதுக்கி வைத்த கமல்ஹாசன்

வரும் மக்களவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடப் போவதில்லை எனவும், அதற்கு பதிலாக மாநிலங்களவையில் ம.நீ.ம-க்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று தி.மு.க.வுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்ஹாசன்.  இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வரும் மார்ச் 29 ஆம் தேதி முதல் பிரச்சார வேலைகளை தொடங்க இருக்கிறார் கமல். தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்ததும் தான் ஒப்பந்தம் செய்துள்ள படங்களில் அவர் நடிப்பார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கமல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..

ஆறு முறை எம்.பி.யா இருந்தாலும் இதான் கதி! அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை கருத்து – பா.ஜ.க. அதிரடி!

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே, 5 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சிலருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link