TN Rain Alert: இன்று மதியம்வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 21 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை கனமழை இருந்தாலும் இன்று மதியம் வரை மழை பெய்ய வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடதமிழக  கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (செண்டிமீட்டரில்):

மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) 19, செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) 13, மதுராந்தகம் (செங்கல்பட்டு மாவட்டம்) 12, திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம்) 9, செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) 7, வானூர் (விழுப்புரம் மாவட்டம்), செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்), கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு மாவட்டம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம் மாவட்டம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு மாவட்டம்) தலா 6, ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்), வல்லம் (விழுப்புரம் மாவட்டம்), செங்கல்பட்டு, உத்திரமேரூர் (காஞ்சிபுரம் மாவட்டம்), நெமூர் (விழுப்புரம் மாவட்டம்), வாலாஜா (ராணிப்பேட்டை மாவட்டம்) தலா 5, திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்), பெரியாறு அணை (விருதுநகர் மாவட்டம்), குன்னூர் (நீலகிரி மாவட்டம்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்),  முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம்), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர் மாவட்டம்), காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டம், மயிலாடுதுறை, சேத்பேட்டை (திருவண்ணாமலை மாவட்டம்), வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை மாவட்டம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்), காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர் மாவட்டம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம்), திருப்போரூர் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Source link