TN Governor: நான் காந்தியை அவமதிக்கவில்லை – சர்ச்சைக்குள்ளான பேச்சுக்கு ஆளுநர் விளக்கம்


<p>சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளம் தொடங்கி வெகுஜன ஊடகங்களிலும் பரபரப்பான செய்தியாக மாறியது. இது தொடர்பாக ஆளுநர் ரவி இன்று அதாவது, ஜனவரி 27ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தன. காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>

Source link