<p>நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் தொடங்குவதே மரபு ஆகும். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.</p>
<p>இந்த நிலையில், இன்று காலை சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநராக பதவி வகிப்பவர்கள் வாசிப்பது மரபு. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தார். மேலும், அவை தொடங்கும் முன்பே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.</p>
<p>இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்த பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டார். அப்போது, சபாநாயகர் அப்பாவு இருங்க.. இனிதான் ஆளுநர் ஜனகனமண பாடுவோம் என்று கூறினார். இதனால், அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.</p>