This week OTT release: ஜோ முதல் அனிமல் வரை.. பொங்கல் விடுமுறைக்கு ஓடிடியிலும் வரிசைகட்டும் ரிலீஸ்!

திரையரங்கில் படங்களைப் பார்த்த பிறகு ஓடிடி தளங்களில் குடும்பத்துடன், நண்பர்களுடன் உட்கார்ந்து நினைக்கும் போதெல்லாம் படங்களை பார்த்து ரசிப்பது என்பது திரை ரசிகர்களின் மிக முக்கியமான பொழுதுபோக்காக இருந்து வருகிறது. அதற்கு உதாரணம் தான் ஓடிடி தளங்களின் அசுர வளர்ச்சி.
பெயருக்கு ஒன்று இரண்டு ஓடிடி தளங்கள் இருந்த காலகட்டம் போய் இப்போது எக்கச்சக்கமான ஓடிடி பிளாட்பாரம் வந்துவிட்டது. போட்டிபோட்டு படங்களையும், வெப் தொடர்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் ஏராளமான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. அதன் லிஸ்ட் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க…

தி கேரளா ஸ்டோரி :

சுதிப்டோ சென் இயக்கத்தில் பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும்  இடையே வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஆதா ஷர்மா, சித்தி இத்னானி, யோகிதா- பிகானி, சோனியா பலானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து இருந்தாலும் 240 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் வெளியான இப்படம் இன்று முதல் ஜீ 5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மிஷன் இம்பாசிபிள் 7:

மிஷன் இம்பாஸிபிள் படங்களின் வரிசையில் கிறிஸ்டோஃபெர் மெக்கரி இயக்கத்தில் இயக்கத்தில் டாம் க்ரூஸ், ரெபெக்கா ஃபெர்குசன், ஹேய்லி ஆட்வெல் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘மிஷன் இம்பாஸிபிள்: டெட் ரெக்கனிங் பார்ட் 1’ திரைப்படம் ஜனவரி 11ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஜோ :

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர்  ஹரிஹரன் ராம் இயக்கத்தில் வெளியான இதமான காதல் கதை தான் ‘ஜோ’. ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா நடிப்பில் வெளியான இப்படத்தில் கல்லூரி காதலும் திருமணத்திற்கு பிறகு அந்த காதலில் ஏற்படும் விரிசல்களும், காதலின் வலியை இன்றைய இளைஞர்கள் மத்தியில் அழகாக கடத்தி இருந்தது. இப்படம் ஜனவரி 12ஆம் தேதியான இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது.

சேரனின் ஜர்னி :

சேரன் இயக்கத்தில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்ய பாரதி, காஷ்யப் பார்பயா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெப் தொடராக சோனி லைவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

அனிமல் :

சந்தீப் ரெட்டி வாங்கவின் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் தன்னுடைய தந்தையின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் ஒரு மகன், அந்த தந்தையின் அன்பபையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக எந்த எல்லை வரை செல்வான் என்ற கருவை வைத்து வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 900 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்கிறது.

கோடபொம்மலி பிஎஸ்:

தேஜா மார்னி இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ரீகாந்த், ராகுல் விஜய் மற்றும் ஷிவானி ராஜசேகர் நடிப்பில் வெளியான கோடபொம்மலி பிஎஸ் நேற்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

கில்லர் சூப் :

அபிஷேக் சவுபே இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், கொங்கனா சென் சர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி கிரைம் திரில்லர் தொடர் ‘ கில்லர் சூப் ‘. இப்படம் ஜனவரி 11ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

Source link