Tamilnadu Latest Headlines News Update 10th January 2024 Tamilnadu Flash News TN Bus Strike | TN Headlines: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்; பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்


TRB Annual Planner 2024: நோட் பண்ணிக்கோங்க! ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட 7 வகைப் பணிகள்: தேர்வு அட்டவணையை வெளியிட்ட டிஆர்பி!

1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை இந்த மாதமே வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.  அதேபோல அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை 2024 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது. மேலும் படிக்க

TN Bus Strike: பொங்கல் பண்டிகை வருது.. ஸ்டிரைக் எல்லாம் தேவையா? – போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை விடுவிப்பு, பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய வேலை நிறுத்தம் இன்று 2வது நாளாக தொடர்கிறது. கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது. அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை தற்காலிகமாக நிறுத்தி  வைக்க தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விதமாக,  ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதில் அரிசி மற்றும் சர்க்கர ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. மேலும் படிக்க

முருகன் பக்தர்கள் கவனத்திற்கு! தை பூசத்திற்கு ஆஃபர்? – அமைச்சர் சேகர்பாபு சொன்ன தகவல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட துறை நிலை ஓய்வூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். இப்புதிய திட்டத்தின் மூலம் 2,646 துறை நிலையிலான ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர். மேலும் படிக்க

Source link