Tamil Thalaivas: ஹாட்ரிக் வெற்றி பெற்று நம்பிக்கை கொடுக்கும் தமிழ் தலைவாஸ்; ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ப்ரோ கபடி லீக் மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் மொத்தம் 12 அணிகள் களமிறங்கியுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் லீக் போட்டியில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். லீக் போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் தலா 22 லீக் போட்டிகளில் விளையாடும். லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களை பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

கடந்த சீசனில் அரையிறுதி வரை முன்னேறிய தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணியின் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணிக்கு இந்த சீசனின் முதல் பாதி படு சொதப்பல் என்றே கூறவேண்டும். இதனால் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் தேங்கிவிட்டது. இதனால் கபடி ரசிகர்கள் மத்தியில் இருந்த எண்ணம் தற்போது மெல்ல மெல்ல மாறி தமிழ் தலைவாஸ் அணி மீது தனி நம்பிக்கையே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி மூன்று போட்டிகளில் தொடர் வெற்றியப் பெற்று ப்ரோ கபடியின் ஒட்டுமொத்த சீசனில் தனது முதல் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி மூன்று போட்டிகளில் பட்னா பைரேட்ஸ், பெங்களூரு புல்ஸ் மற்றும் தெலுகு டைட்டன்ஸ் அணிகளுடன் மோதியது. பட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக 41 – 25 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 45 – 28 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடையாக தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 54 – 29 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த மூன்று போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர்களும் டிஃபெண்டர்களும் கடந்த போட்டிகளை விட சிறப்பாக விளையாடினர். அதிலும் சிறப்பாக டிஃபெண்டர்கள் தங்களின் முழு பலத்தையும் வெளிப்படுத்தி ஆடினர். டிஃபெண்டர்களின் இந்த ஆதிக்கம் தமிழ் தலைவாஸ் அணியின் அடுத்துள்ள போட்டிகளில் நடைபெற்றால் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.

கடந்த மூன்று போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியின் டிபெண்டர்கள் ஜெய்ப்பூர் அணிக்கு எதிராக 21 புள்ளிகளும், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 15 புள்ளிகளும், தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 24 புள்ளிகளும் எடுத்தனர். இந்த மூன்று போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியின் டிஃபெண்டரகள் எடுத்த புள்ளிகள் மட்டும் மொத்தம் 60 புள்ளிகள் எடுத்துள்ளது. ரைய்டு பாய்ண்டுகளைப் பொறுத்தவரையில், தெலுகு அணிக்கு எதிராக 23 புள்ளிகளும், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 25 புள்ளிகளும், பட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக 16 புள்ளிகளும் எடுத்துள்ளது. கடந்த மூன்று போட்டிகளில் ரைடெர்கள் எடுத்த புள்ளிகள் 64 புள்ளிகள் எடுத்துள்ளது. கடைசி மூன்று போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி எதிரணிகளை மொத்தம் 7 முறை ஆல் – அவுட் ஆக்கியுள்ளது. அதேநேரத்தில் தமிழ் தலைவாஸ் அணியும் ஒரு முறை மட்டும் ஆல் அவுட் ஆகியுள்ளது. பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக  விளையாடும்போது இந்த ஆல் அவுட் நிகழ்த்தப்பட்டது.

தமிழ் தலைவாஸ் அணிக்கு அடுத்துள்ள போட்டிகள் இந்த சீசனில் மிகவும் பலமான அணிகளாக விளங்கி வரும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், யு.பி. யோதாஸ், புனேரி பல்தான், தபங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு எதிராக களம் காணவுள்ளது. இந்த போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினால் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் கட்டாயம் நுழைந்துவிடும்.

ரெய்டர்களில் அஜங்கியா பவார், நரேந்தர் ஆகியோரது ஆட்டமும், டிஃபெண்டர்களில் சாகர், ஷகில் குலியா, அபிஷேக், மோகித் ஆகியோரது ஆட்டமும் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றது. இவர்களின் ஆட்டம் வரும் போட்டிகளிகளில் சிறப்பாக அமைந்தால் தமிழ் தலைவாஸ் அணியின் ப்ளே-ஆஃப் உறுதி.

அடுத்துள்ள 7 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றுவிட்டால் ப்ளே ஆஃப் உறுதிதான். அதே நேரத்தில் வெற்றி வித்தியாசம் கடந்த போட்டிகளில் இருந்ததைப் போல் அதிகமாக இருந்தால், நிச்சயம் ப்ளே ஆஃப் உறுதி. அதேநேரத்தில் ஒரிரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தால் மீதமுள்ள போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி வித்தியாசம் போட்டிக்கு போட்டி குறைந்தது 20 முதல் 25 புள்ளிகள் அளவிலாவது இருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படும்.

Source link