Ramadan 2024: தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் ரமலான் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் சிறப்பு தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
TN Rains: வாவ்.. சட்டென மாறும் வானிலை? அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 11) முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளதாவது. மேலும் படிக்க
திராவிட மாடலே இந்தியாவுக்கு வழிகாட்டி; எதிலும் முதலிடத்தில் தமிழ்நாடு- திமுக பெருமிதம்!
இந்தியாவின் எழுச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே வழிகாட்டி என்று திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது. பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள் சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள், மகப்பேற்றுக்குப் பின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன.
டிராக்டரில் பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர்..! “விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததாக ” பேச்சு..!
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும்.
விசிக கொடியுடன் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஊருக்குள்ளே வரக்கூடாது – விழுப்புரத்தில் பரபரப்பு…
விழுப்புரம் (Villupuram) : திருவெண்ணைநல்லூர் அருகே திமுக கூட்டணியில் உள்ள விசிக வேட்பாளர் ரவிகுமாரை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற உளுந்தூர்பேட்டை திமுக எம்.எல்.ஏவின் பிரச்சார வாகனத்தை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய இளைஞர்கள், பிரச்சார வாகனத்தில் இருந்த விடுதலை சிறுத்தை கட்சி கொடியை அகற்ற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
Amit Shah Road Show: காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து.. காரணம் என்ன..?
காரைக்குடியில் நடக்க இருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து அமித்ஷா காரைக்குடியில் ரோடு ஷோ நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் காண