முத்து, மீனா, மனோஜ் ஒருவழியாக ரோகிணியை தேடி குமாரபாளையம் வந்து சேர்கின்றனர். மனோஜ் ரோகிணியின் ஃபோட்டோவை அங்குள்ளவர்களிடம் காண்பித்து விசாரிக்கிறார். மறுப்பக்கம், ரோகிணி தன் அம்மா வீட்டிற்கு சென்று தன் அம்மாவிடம் மனோஜ் வேலைக்குச் செல்லாமல் பொய் சொல்லி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அழுகிறார்.

ரோகிணியின் அம்மா, ”இதுக்காக மாப்ள கிட்ட நீ சண்டை போட்டு வந்திருக்க வேணாம். நல்லா படிச்சிருக்காரு ஒரு வேலை கிடைக்காமலா போய்ட போகுது” என்கிறார். மேலும், குடும்பம்னா ஆயிரம் சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும்” என்கிறார். ”அவனே என்கிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைச்சி இருக்கான்” என்கிறார் ரோகிணி.

ரோகிணியின் குழந்தை ரோகிணியிடம் வந்து, ”அத்தை நீ ஏன் இப்போலாம் போனே பண்ண மாட்டிங்குற. நான் செகண்ட் ரேங்க் வாங்கி இருக்கேன்” என கூறுகிறது. மேலும் ”அத்தை உன் கண்ணு ஏன் சிவந்து இருக்கு? தூசி விழுந்து இருக்கா?” எனக்கேட்டு ஊதி விடுகிறான். உடனே ரோகிணி தன் குழந்தையை கட்டிப்பிடித்து அழுகிறார்.

ரோகிணியின் அம்மா, கோவத்துலையும், கவலையிலயும் எந்தவொரு முடிவு எடுத்தாலும் அது தப்பா தான் இருக்கும் என்கிறார். திரும்ப அங்க போகவும் எனக்கு பிடிக்கல என்கிறார் ரோகிணி. அதற்கு அவரின் அம்மா, உட்கார்ந்து யோசி என்கிறார்.

விஜயாவின் வீட்டிற்கு, அவரின் தோழி பார்வதி வருகிறார். ரோகிணி எங்க இருக்கானு எதாவது தெரிஞ்சதா என பார்வதி கேட்கிறார். ”யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் அவ, அவள போய் தொலச்சிட்டிங்களே” என்கிறார் பார்வதி. அதற்கு விஜயா, அந்த முத்து செஞ்ச வேலைதான் இதெல்லாம் என்கிறார். ”அவனை குறை சொல்லி என்ன பண்றது. மனோஜ் பார்க் போய்ட்டு தூங்கிட்டு வறான். அவன் மேலதானே தப்பு” என்கிறார் பார்வதி.

அதற்கு விஜயா, ”முத்துவால தான் இந்த குடும்பத்துல நிம்மதியே இல்லை”என்கிறார். மேலும் இந்த ரோகிணி வேற எங்க போனான்னே தெரியல என புலம்புகிறார் விஜயா. ”மனோஜ் பண்ணத தாங்கிக்க முடியாம ரோகிணி எதாவது எக்குத்தப்பா முடிவெடுத்துட்டா?” என கேட்கிறார் பார்வதி. அதற்கு விஜயா, அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. இது சின்ன சண்டை தானே என்கிறார்.

இந்த ரோகிணி எப்படியாவது வீட்டுக்கு வந்து சேர்ந்தா போதும் என்கிறார் விஜயா. மறந்துடாதே அந்த ரயில்வே ட்ராக் அங்கேயும் போய் பாரு என்கிறார் விஜயா. முத்து மனோஜை கலாய்த்து கொண்டே வருவதால், உன்னால தாண்டா அவளுக்கு இப்படி ஆச்சி, என்கிறார். நீ வண்டி நிறுத்து நானே இறங்கி போறேன் என்று கூறி மனோஜ் இறங்கி விடுகிறார். அப்போது ரோகிணியின் குழந்தை முத்துவின் கார் மீது பந்து அடித்து விடுகிறது. உடனே மனோஜை சமாதானப்படுத்தி, அந்த குழந்தையையும் கூட்டிக் கொண்டு ரோகிணி வீட்டுக்குச் செல்கின்றனர். மனோஜை பார்த்து ரோகிணி வீட்டின் பின்புறம் சென்று விடுகிறார். அவர் அம்மாவிடமும் ”நீ எதுவும் வாய விட்றாத” என்கிறார். பின் அனைவரும் வீட்டிற்குள் செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.