பிரபல நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் நீண்ட நாள்களாகக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று இவர்கள் இருவரும் தெலங்கானா, ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும், இன்று மாலை இருவரும் தங்கள் திருமணம் குறித்த தகவலை அறிவிப்பார்கள் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது முதல் இருவரும் காதலித்து வருவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், நேரடியாக இருவரும் இதுவரை தங்கள் காதலை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண