Sheikh Hasina: அதிக காலம் ஆட்சி செய்த முதல் பெண் பிரதமர்.. 5வது முறையாக அசத்தும் ஷேக் ஹசீனா!

வன்முறை, எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் புறக்கணிப்புக்கு மத்தியில் நேற்று வங்கதேசத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, வங்கதேச தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்தது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராவது உறுதியானது. ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமர் பதவியை வகித்து வரும் நிலையில், முதல் முறையாக அவர் கடந்த 1996 முதல் 2001 வரை பிரதமராக பதவி வகித்தார்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்தது. விதிமீறல் காரணமாக 7 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக சட்டோகிராமில் ஆளும் கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. டாக்காவின் ஹசாரிபாக் மற்றும் சட்டோகிராமில் உள்ள வாக்குச் சாவடி அருகே இரண்டு பெட்ரோல் குண்டுகள் வெடித்தன. இதில், ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா:

அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா, கோபால்கஞ்ச்-3 தொகுதியில் இருந்து எட்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 76 வயதான ஹசீனா 249,965 வாக்குகள் பெற்றதாக BD News24 தெரிவித்துள்ளது. வெற்றிக்கு பிறகு பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, ”நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா நமது நம்பகமான நண்பன். விடுதலைப் போரின் போது (1971), 1975 க்குப் பிறகு இந்தியா எங்களுக்கு ஆதரவளித்தது. போரின்போது நான் என் முழு குடும்பத்தையும் இழந்தேன். அந்த போரின்போது எனது அப்பா, அம்மா, சகோதரர், அனைவரையும் இழந்தேன். நாங்கள் இருவர் மட்டுமே (ஹசீனா மற்றும் அவரது தங்கை ரிஹானா) உயிர் பிழைத்தோம். அப்போது எங்கள் இருவருக்கும் இந்தியாதான் அடைக்கலம் கொடுத்தது. எனவே இந்திய மக்களுக்கு நன்று உள்ளவராக இருப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

அதிக காலம் ஆட்சி செய்த முதல் பெண் பிரதமர் ஹசீனா:

நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா, உலகின் அதிக காலம் ஆட்சி செய்த பெண் பிரதமர் என ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். ஹசீனா இதற்கு முன்பு முதல்முறையாக 1996 முதல் 2001 வரை வங்கதேசத்தின் பிரதமராக பதவி வகித்தார். அதன் பிறகு, 2009 முதல் தற்போது வரை நாட்டின் பிரதமராக உள்ளார். இலங்கையின் பண்டாரநாயக்கா மற்றும் இந்தியாவின் இந்திரா காந்தி போன்ற பெண் தலைவர்களை விட இவரது பதவிகாலம் அதிகமாக உள்ளது. இலங்கையில் பிரதமராக பதவி வகித்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அதிகபட்சமாக 17 வருடங்கள் 208 நாட்களும், முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி 16 வருடங்கள் 15 நாட்களும், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் 11 வருடங்கள் 208 நாட்களும் பிரதமராக இருந்துள்ளனர். தற்போது 20 ஆண்டுகளை கடந்து பிரதமராக ஜொலித்து வருகிறார் ஷேக் ஹசீனா.

அதிக வாக்கு சதவீதம்:

கடந்த இரண்டு தேர்தல்களிலும் முறையே 84 சதவீதம் மற்றும் 82 சதவீத வாக்குகளுடன் ஹசீனா வெற்றி பெற்றது. வங்கதேச நாட்டை சேர்ந்த வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு இருந்த புகழுக்கு சான்றாகும். தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 80 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link