கேரளாவில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021,டிசம்பர் 19-ம் தேதியன்று பா.ஜ.க. OBC Morcha பிரிவின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான ரஞ்சித் சீனிவாசன் வீட்டில் நுழைந்த 15 SDPI (Social Democratic Party of India) – PFI (Popular Front of India) உறுப்பினர்கள் அவரை கொடூரமான முறையில் படுகொலை செய்தனார். ரஞ்சித் சீனிவாசன் மனைவி, குழந்தைகள் முன் அவர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 15- பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் (Additional Sessions Court Mavelikara) விசாரணைக்கு வந்தது.அதன்படி, ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேரு நேரடியாக தொடர்பு இருப்பது நிரூப்பிக்கப்பட்டள்ளது; 3 பேர் கொலைக்கு உதவியாக இருந்ததும் உண்மை. இதன் அடிப்படையில், நைசாம், அஹ்மல், அனூப், முகம்மது அஸ்லாம், சலாம் போனாட், அப்துல் கலாம், சஃப்ரூதீன், முன்ஷாட், ஜசீப் ராஜா, நவாஸ், ஷீமீர், நாசீர், ஜாஹீர் உசைன், ஷாஜி பூவத்துங்கள், சம்னாஸ் அஸ்ரஃப் ஆகிய 15 பேருக்கும் மரண தண்டனை வழங்கி உத்தவிடப்பட்டுள்ளது.