தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் நினைத்தேன் வந்தாய்.

இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் குழந்தைகள் மூவரும் ராமையாவுடன் சேர்ந்து பார்க்குக்கு சென்று விளையாடிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…

அதாவது குழந்தைகள் எல்லோரும் பலூன் உட்பட விளையாட்டு பொருட்களுடன் வீட்டிற்கு வர எழிலின் கார் வெளியே நிற்பதை பார்த்து ஷாக்காகின்றனர். உடனே அபி எல்லாரும் ஸ்கூலுக்கு தான் போயிட்டு வந்ததாக பொய் சொல்லணும் அழுது மாட்டிக்க கூடாது என்று சொல்லி வீட்டிற்குள் கூட்டிச்செல்கிறாள்.

பிறகு எழில் இடம் சாதாரணமாக பேசிவிட்டு மேலே செல்லும் போது எனில் மூன்று பேரையும் கூப்பிட்டு எங்க போயிட்டு வர்றீங்க என்று கேட்க ஸ்கூலுக்கு தான் போயிட்டுவரும் டாடி என கோரசாக பொய் சொல்கின்றனர். டிரஸ் எல்லாம் எதுக்கு அழுக்கா இருக்கு என்று கேட்க ஸ்போர்ட்ஸ் டே அதனால பிராக்டிஸ் போயிருந்தோம் என்று பொய் சொல்கின்றனர்.

நான் 100 மீட்டர் ரன்னிங் போயிருந்தேன் ஆயிரம் மீட்டர் ரன்னிங் போய் இருந்தேன் என்று அளந்து விட எழில் அப்படின்னா ஒரு சப்ரைஸ் என்று சொல்லி மூவரையும் கூட்டிக்கொண்டு ஒரு கிரவுண்டுக்கு வந்து அவர்களை ஓடவிட்டு பனிஷ்மென்ட் கொடுக்கிறான்.

மறுபக்கம் ஊரிலிருந்து தப்பிய சுடர் ஒரு பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது பக்கத்தில் உட்கார்ந்து இருந்த பெண் தனது பேக்கை பஸ்லையே வைத்துவிட்டு பாதியில் இறங்கி விடுகிறாள். சுடர் அந்த பேக்கை எடுத்து பார்க்கையில் அதற்குள் சர்டிபிகேட் உள்ளிட்டவை இருக்கிறது.

இந்த நேரத்தில் அந்த பெண்ணின் போன் ரிங்காக இந்த பக்கம் சுடரும் அந்த பக்கம் எழிலும் பேசுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.