Nasar: எம் மகன் படத்தில் அந்த கேரக்டர்களில் நடித்ததை பார்த்தவர்கள் என்னிடம் அப்படி தான் சொன்னார்கள் என நடிகர் நாசர் கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான மெட்டி ஒலி சீரியலை இயக்கியவர் திருமுருகன். அவர், முதன் முதலில் நாசர், பரத் நடித்த எம்.மகன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். படத்தில் நாசருடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், வடிவேலு எனப் பலர் நடித்திருந்தனர். படத்தில் அப்பாவுக்கு பயந்து நடுங்கும் மகனாக பரத் நடித்திருப்பார். மகனை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கும் நாசரின் கேரக்டர் அதிகமாக பேசப்பட்டது.

தந்தை – மகனுக்கு இருக்கும் உறவை எதார்த்தமாக எம் மகன் படத்தில் காட்டி இருப்பார் நாசர். இந்த நிலையில், எம்மகன் படத்தில் நடித்தது குறித்து நாசர் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசி உள்ளார். அதில், “பல படங்களில் நான் நல்லா நடித்து இருப்பதாக பாராட்டி இருக்காங்க. ஆனால், எம் மகன் படத்தை பார்த்த 100 பேரில் 90 பேர் “எங்க அப்பாவை போல நீங்க நடித்து இருக்கிறீங்க சார்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளனர். எமோஷனலாக கனெக்ட் ஆன படங்களில் எனக்கு ரொம்ப நெருக்கமான படம் எம்டன் மகன் படம். அந்த அளவுக்கு படத்தை எதார்த்தமாக திருமுருகன் வடிவமைத்து இருப்பார். அதுதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது” என்றார்.

அதேபோல், பம்பாய் படத்தில் நடித்தது குறித்து பேசிய நாசர், “நான் நடித்த 700 பங்களில் ரொம்பவும் முக்கியமான படம் பம்பாய். இந்தப் படத்தில் நடிக்க வைத்த மணி சார்க்கு தான் நன்றி சொல்லனும்” என்றார். மேலும், ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடம் குறித்து பேசிய நாசர், “ எனக்கு விளையாட்டுத்தனம் கிடைத்த ஒரு படமாக ஜீன்ஸ் இருந்தது. எனது குருமார்கள் கற்றுக் கொடுத்த பல விஷயங்களை இதில் பயன்படுத்தி இருப்பேன். இந்த படத்தில் நாச்சியப்பன், பேச்சியப்பன் மாறுப்பட்டவர்களாக இருப்பார்கள். அதற்கு ஏற்றார்போல் நடித்திருப்பேன். படத்தில் எனக்கு நடிக்க ஷங்கர் சார் நல்ல சுதந்திரம் கொடுத்திருந்தார். அதேபோல், எனக்கு ஏற்றார்போல் ராதிகா மேடம் நன்றாக நடித்திருந்தார்” எனப் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: Shoba Chandrasekhar: ”வாகை சூடு விஜய்” – நெகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறிய தாய் ஷோபா!

Vijay Political Party: அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்! எப்போது போட்டி?