Mysskin about Poorna : அவ சாகுற வரைக்கும் நடிக்கணும்.. பூர்ணாவை கண்கலங்க வைத்த மிஷ்கின் பேச்சு…

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்தை ஆதித்யா இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ, ராயகுரு மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மிஷ்கின், பூர்ணா குறித்து சில நெகிழ்ச்சியாக பேசி அவரை கண்கலங்க வைத்துவிட்டார்.

"ஒரு நூறு வருஷம் வாழுவோம் என்றால் தாய், தங்கை, மகள், மனைவி இப்படி பற்ற உறவுகளை தவிர ஒரு பத்து பெண்களை நாம் சந்தித்தோம் என்றால் அதில் ஒரு பெண் மிகுந்த அன்பை கொடுத்து பார்த்து கொள்வாள். அப்படி என் மீது அளவுக்கு கடந்த அன்பு கொடுத்தவள்தான் பூர்ணா. அடுத்த ஜென்மத்தில் அவள் தான் என்னுடைய அம்மாவாக இருக்க வேண்டும் என நினைத்ததுண்டு. அவ்வளவு நல்லவள். அதனால் என்னுடைய படங்களில் அவள் இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுவேன். பலரும் என்னையும் பூர்ணாவையும் சேர்த்து வைத்து தப்பாக எல்லாம் பேசுவார்கள்.  அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. அவள் மிகவும் மென்மையானவள்.

பூர்ணா கல்யாணம் என சொன்னதும் எனக்கு பயங்கரமா கோபம் வந்துச்சு. எவ்வளவு பெரிய நடிகை இவ, இன்னும் ஒரு நாலு ஐஞ்சு வருஷத்துக்கு நடிச்சுட்டு அப்புறம் கல்யாணம் பண்ணி இருக்கலாம் என தோணுச்சு. துபாய்ல போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இங்க பண்ணி இருந்தாலாவது அப்பப்ப போய் பார்த்து இருக்கலாம். ஒரு அற்புதமான நடிகை.

யாரு ஒருவரால் கற்பனையான உலகத்தில் நிஜமாகவே வாழ முடிகிறதோ அது தான் உண்மையான நடிப்பு. அவர்கள் தான் சிறந்த நடிகர்கள். சிலர் அப்படி நடிக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் அவர்களால் முடியவில்லை. நடிக்கும் போது தன்னுடைய சுயத்தை மறந்து நடிப்பவர்களில் ஒருவர் தான் பூர்ணா.

’சவரக்கத்தி’ படத்திற்கு எழுதும் போது எங்க அம்மாவை வைத்து தான் எழுதினேன். அவங்க மலையாளம் பேசுவாங்க தமிழ் பேச வராது. அவங்களுடைய ஸ்லாங் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும். அதே போல காரைக்குடி ஸ்லாங்கை ஒரு முப்பத்தி ஐந்து நாட்களுக்கு பூர்ணா பேசி ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தா. அதை பார்த்துட்டு அந்த படத்தோட டப்பிங்கை நான் பூர்ணாவையே பேசவைத்துவிட்டேன். அந்த அளவுக்கு சுத்தமா பேசி இருந்தா. அவ லைஃப் புல்லா என் கூடவே இருக்கணும். அவ சாகுற வரைக்கும் நடிக்கணும் என நான் ஆசைப்படுறேன். எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் என்னுடைய படத்தில் அவ நிச்சயம் நடிப்பா. என்னுடைய குழந்தை நல்லா இருக்கணும் என நான் நினைப்பதை விட அவளுடைய குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என ஒரு படி அதிகமாக நான் நினைக்கிறன்" என மிகவும் நெகிழ்ச்சியுடன் உரிமையுடன் பூர்ணாவை பற்றி மேடையில் பேசி இருந்தார் மிஷ்கின்.

மிஷ்கின் பேசியதை கேட்ட பூர்ணவால் தன்னுடைய கண்களில் இருந்து வரும் ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. தன்னை ஒரு சுத்தமான நடிகை என மிஷ்கின் பாராட்டிய அந்த தருணம் பூர்ணாவுக்கு கூஸ் பம்ப்ஸ் மொமெண்ட்டாகவே இருந்தது.

Source link