Low Budget Movies : ரிஸ்க் எடுத்த இயக்குநர்கள்.. குறைவான பட்ஜெட்டில் உருவாகி வசூலை குவித்த படங்கள்
தென் இந்திய சினிமாக்களில் குறைவான செலவில் எடுக்கப்பட்டு பெரியளவில் வசூலை ஈட்டிய படங்களைப் பார்க்கலாம்.
சின்ன பட்ஜெட் படங்கள்
ஒரு சிறிய பட்ஜெட் படம் அதன் கதை நன்றாக இருந்து , அது சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டால் நிச்சயம் பெரிய வெற்றி பெருகிறது. சமீப காலங்களில் இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. சின்ன பட்ஜெட்டில் எடுத்து பான் இந்திய ஹிட் அடித்த படங்களும் இருக்கின்றன. சமீபத்தில் வெளியான அனுமன் படம் அதற்கு இன்னொரு சான்று. இப்படி தென் இந்திய சினிமாக்களில் குறைவான செலவில் எடுக்கப்பட்டு பெரியளவில் வசூலை ஈட்டிய படங்களைப் பார்க்கலாம்.
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் சமீபத்திய ஆண்டுகளில்  வெளியான ரொமாண்டிக் காமெடி படங்களில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படம். பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகிபாபு  உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸின் 57 கோடிவரை  வசூல் செய்தது. இந்தப் படத்தை பார்க்க விரும்புபவர்கள் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.
2018
கடந்த் ஆண்டு மலையாளத்தில் வெளியாக ஆஸ்கர் வரை சென்றுள்ள படம் 2018. டொவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சகோ போபன், அபர்ணா பாலமுரளி, வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 2018-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம்  உலகளவில் 177 கோடி வசூல் செய்தது. இப்படத்தின் பட்ஜெட் 26 கோடி.
காந்தாரா
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானப் படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி , சப்தமி கெளடா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கன்னடத்தில் வெளியாகிய இந்தப் படம் பரவலாக பாராட்டுக்களைப் பெற்று பான் இந்திய வெற்றி பெற்றது.  சுமார் 16 கோடி செலவில் உருவான காந்தாரா படம் மொத்தம் 398 கோடி வசூல் செய்தது. தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது, முதல் பாகத்தின் பட்ஜெட்டை விட பலமடங்கு அதிக செலவில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
கார்த்திகேயா 2
தெலுங்கில் வெளியான கார்த்திகேயா படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானப் படம் கார்த்திகேயா. இந்திய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில்  நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன், அனுபம் கெர் உள்ளிட்டவர்கள்  நடித்துள்ளார்கள். இப்படம் 15 கோடி செலவில் உருவாகி உலகளவில் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.
777 சார்லி
Source link