Lok Sabha Elections 2024: 100% வாக்குப்பதிவவே இலக்கு – விழுப்புரத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு

விழுப்புரம்: கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குப்பதிவு நடந்த இடங்களை அடையாளம் கண்டு நாட்டுப்புற இசை கலைஞர்கள் மூலம் நகராட்சி சார்பில் 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்களிப்பு குறித்த பல்வேறு கட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டர்ருமான பழனி தலைமையில் நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்னகோட்டகுப்பம், கோயில்மேடு, இப்ராஹிம் கார்டன், சோதனைக்குப்பம் மற்றும் பழைய பட்டின சாலை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த தேர்தலில் குறைந்த அளவே வாக்குப்பதிவில் பங்கேற்றனர்.

100% வாக்குப்பதிவவே இலக்கு

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் 100% வாக்குப்பதிவில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோட்டக்குப்பம் நகராட்சி மற்றும் தேர்தல் துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்களைக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புகேந்திரி தலைமையில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஊரகவளர்ச்சித்துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர்ராஜ்குமார் கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் "100% வாக்குப்பதிவவே இலக்கு" என வாக்காளர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நாட்டுப்புற இசை கலைஞர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சி

சின்னக்கோட்டகுப்பம் சிவன்கோயில் திடல், கோயில்மேடு வளைவு, இப்ராஹிம் கார்டன், சோதனைக்குப்பம் பழையபட்டினசாலையில் அன்பு நாட்டுப்புற இசை கலைஞர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர் ஆரோக்கியா, சமுதாய அமைப்பாளர் வள்ளி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ஜாஹிதாபர்வீன், தூய்மை மேற்பார்வையாளர் சங்கர், மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.

Source link