Lok Sabha Election 2024: நாம் தமிழர் சின்னம் ஆபாசமாக சித்தரிப்பு – திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ஆரணியில் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தை ஆபாசமாக சித்தரித்தது தொடர்பாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி, ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள் சூடுபிடித்துவிட்ட நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி பெரிய போராட்டத்திற்கு பிறகு  மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக சார்பில் தரணிவேந்தனும், அதிமுக சார்பில் ஜி.வி.கஜேந்திரன் என்பவரும், பாமக சார்பில் அ.கணேஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட 40 வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு

இந்நிலையில் நேற்று இரவு ஆரணி துணைக்காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் இரா.சுமன் தலைமையில் கட்சியினர் மற்றும்  ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட துணை அமைப்பாளர் கதிரவன் மீது புகார் அளித்தனர். இந்த புகாரில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தை ஆபாசமாக வடிவமைத்து தன்னுடைய சமூக வளைதலங்களான முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் பதிவு விட்டுள்ளதாகவும், இது பெண் சமுதாயத்திற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் பாதிப்பு என்பதால் கதிரவன் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் பிரமுகர்கள் புகார் புகார் அளித்தனர்.

திமுக கட்சியின் மீது பொதுமக்களிடையே அதிருப்தி

இந்த புகாரை பெற்ற ஆரணி நகர் காவல்நிலைய காவல் துறையினர்  திமுக பிரமுகர் கதிரவன் மீது அருவருப்பான விஷயம் பகிரதல், மின்னனு வடிவில் ஆபாசமான விஷயங்களை அனுப்புதல் உள்ளிட்ட U/s,292(2), (a) IPC R/W 67 IT ACT 2000 உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான திமுக பிரமுகர் கதிரவன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திமுக பிரமுகர் நாம்தமிழர் கட்சியின் சின்னத்தை ஆபாசமான வடிவில் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை அடுத்து இதனை வைத்து அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உட்பட அனைவரும் இதனை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் பேச உள்ளதாகவும், இந்த சம்பவம் திமுக கட்சியின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தேர்தல் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

Source link