Kilambakkam temple : கிளாம்பாக்கத்தில் இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்..! காரணம் என்ன ?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த இரண்டு வாரத்திற்கு முன் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 400 கோடி ரூபாயில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒப்பந்ததாரர் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சிவசக்தி விநாயகர் ஆலயம் சிறிய அளவில்  புனரமைக்கப்பட்டது . இந்தநிலையில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் வழிபாடு தளங்கள் இருக்கக் கூடாது என கோயில் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்தநிலையில் இரவோடு இரவாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த இடத்தை ஏற்கனவே தனியார் நிறுவனம் ஒன்று சொந்தம் கொண்டாடி வந்தது.  இந்த நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த பொழுது, இந்த இடம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏற்கனவே இந்த இடத்தில் அந்த தனியார் நிறுவனம் சார்பில் மாதா கோயில் மற்றும் மணிமண்டபம் உள்ளிட்ட கட்டுமானங்கள் பேருந்து நிலையத்திற்காக அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்:

6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.

28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன

கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.

கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும்

இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன.

தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது

ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2025 இல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது.

கூடுதல் வசதிகள் என்னென்ன ?

இப்பேருந்து முனையத்தில் பயணிகளின் குடிநீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் நாளொன்றுக்கு 0.5 மில்லியன் லிட்டருடன் கூடுதலாக நிலத்தடி நீரை சுத்திகரிக்கும், 300 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள எதிர் சவ்வூடுபரவல் (RO) முறையிலான நீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) / தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் (MTC) செயல்பாட்டிற்காக தனியாக பேருந்து பராமரிப்புப் பணிமனை /பராமரிப்பிடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்,  மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 5 மின்கல ஊர்தி (Battery Operated Vehicles) வசதி செய்யப்பட்டுள்ளது.

முனையத்தின் முகப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுகளுடைய  நடைபாதைகள் கொண்ட பூங்கா, பயணிகளின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் முனையத்தின் முகப்பில் ஆட்டோ / டாக்ஸி நிறுத்தத்திற்கு தனியாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Source link