America Indian Student: அமெரிக்காவில் பயின்று வந்த மேலும் ஒரு இந்திய மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாணவர் கொலை:
இந்தியாவில் இருந்து உயர் கல்விக்காகவும், வேலைகாகவும் மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்பவர்கள் பாதுகாப்பாகவே இருந்தாலும், சமீப காலமாக அங்கு இந்தியர்களுக்கு எதிராக நடக்கும் கொடூர சம்பவங்கள் அனைவரின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியுள்ளது. 2024ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மாணவர் பருச்சுரி அபிஜித் (20). இவர் அமெரிக்காவில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தார்.
அமெரிக்காவில் அதிர்ச்சி:
இந்த நிலையில், மாணவர் பருச்சுரி அபிஜித் அமெரிக்காவில் உள்ள வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் பணம் மற்றும் மடிக்கணினிக்காக அபிஜித்தை கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை எப்படி நடந்தது? யார் செய்தார்? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அபிஜித்தின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவர் அபிஜித்தின் உடல் அவரது சொந்த ஊருக்கு நேற்று மாலை அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, “பருச்சூரி சக்ரதர் மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகியோருக்கு ஒரே மகன் அபிஜித்.
அபிஜித் சிறுவயதிலிருந்தே சிறந்த மாணவராக இருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அபிஜித்தின் தாய் வெளிநாட்டில் படிக்கும் அவரது முடிவை ஆரம்பத்தில் எதிர்த்தாலும், அவரது எதிர்காலத்திற்காக அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். மாணவர் அபிஜித்தின் சடலம் நேற்று மாலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணம்:
பர்டூ பல்கலைக்கழக மாணவர் நீல் ஆச்சார்யா கடந்த ஜனவரி மாதம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஒரு வாரமாக ஆச்சார்யாவை காணவில்லை என கூறப்பட்ட நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அது ஆச்சார்யாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டது.
ஹரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி ஜார்ஜியாவின் லித்தோனியாவில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார். அதேநேரம், அங்குள்ள கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீடற்ற ஜூலியன் ஃபாக்னர் என்பவருக்கு அடைக்கலம் கொடுத்தஉணவு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதியன்று 25 வயதான பால்க்னருக்கு இலவச உணவு வழங்க மறுத்ததாகவும், இதனால் அவர் விவேக் சைனியை அடித்து கொன்றதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண