Esha Deol: குழந்தைகளின் நலனுக்காக: விவாகரத்து பெற்ற ஆயுத எழுத்து பட நடிகை ஈஷா தியோல்!

11 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த  நடிகை ஈஷா தியோல் – பரத் தக்தானி தம்பதி பிரிய முடிவு செய்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈஷா தியோல்

மூத்த பாலிவுட் நடிகர்களாக தர்மேந்திரா மற்றும் ஹேமா மாலினி தம்பதியினரின் மகள் ஈஷா தியோல். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்துப் படத்தில் அறிமுகமானார், சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதாஞ்சலி கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்தியில் தூம் , ஷாதி நம்பர் 1, தஸ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு பரத் தக்தானி என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் ஈஷா தியோல். திருமணத்தைத்  தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு படங்களில் நடிப்பதில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். கடந்த 2019ஆம் ஆண்டு ’கேக்வாக்’ என்கிற குறும்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து

ஈஷா மற்றும் பரத் ஆகிய இருவரும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக சில காலமாக தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்று ஈஷா தியோலின் பிறந்த நாள் கொண்டாட்டம் உள்ளிட்ட அவர்களது எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் பரத் கலந்துகொள்ளாதது இந்த சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தத் தகவலை தாங்களாகவே முன்வந்து உறுதிபடுத்தி இருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர்.

திருமணம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தத் தம்பதியினர் விவாகரத்துப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ள தகவல் பாலிவுட் திரைத்துறையினரை கவலையில் உள்ளாகியுள்ளது. கணவன் மனைவி இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இருவரும் ஒருமித்த மனதோடு திருமண உறவை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இந்த முடிவு  தங்களது குழந்தைகளின் நலனைக் கருதி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த முடிவை மதித்து தங்களை தொந்தரவு செய்ய இருக்குமாறும் பரத் தக்தானி கேட்டுக் கொண்டுள்ளார்.

மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் தியோல் குடும்பம்

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருந்தவர் நடிகர் தர்மேந்திரா. மேலும் இவரது இரண்டு மகன்களான நடிகர் சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் இருவரும் 90 களின் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள். இடைப்பட்ட வருடங்களில் குறைவான சினிமா வாய்ப்புகளால் தியோல் குடும்பத்தினர் படங்களில்  நடிப்பதில் இருந்து கிட்டதட்ட காணாமலே போய்விட்டார்கள்.

கடந்த ஆண்டு தியோல் குடும்பத்திற்கு மிக முக்கியமானதாக அமைந்தது. கரன் ஜோகர் இயக்கிய ’ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் தர்மேந்திரா நடித்தார். இதனைத் தொடர்ந்து சன்னி தியோல் நடித்த ‘கதர் 2’ மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிபெற்றது. சமீபத்தில் வெளியான அனிமல் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் பாபி தியோல். தற்போது சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்துள்ளார். மீண்டும் பாலிவுட் சினிமாவில் இவர்கள் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

Source link