Edappadi Palaniswamy: ”தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை” – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்கதையாகி வருவதாகவும்,  தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை:

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை விடியா அரசின் காவல் துறை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

நாள்தோறும் செய்தித் தாள்களில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே அலங்கரித்த வண்ணம் உள்ளன. "தினசரி நாளிதழ்களைப் படியுங்கள்" என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சர், தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தவிர்த்து எந்த நாளிதழையும் படிப்பதாகத் தெரியவில்லை. படித்திருந்தால், தனது அலங்கோல விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் இருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்.

தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் !

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/dai1DRQngN

— AIADMK (@AIADMKOfficial) January 27, 2024

பட்டியலிடட்ட ஈபிஎஸ்:

அந்த வகையில், இந்த வாரம் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளில் முக்கியமான சிலவற்றை நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகில் உள்ள கல்லுக்குழி கிராமத்தில் முதியோர், பெண், 15 வயது சிறுமி, 12 வயது சிறுவன் என்றுகூடப் பாராமல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களுடைய வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிப்பு

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே, சாணாரப்பட்டி பகுதியில் தனியாக இருந்த பெண் கொடூரமாகக் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு 10 சவரன் நகை கொள்ளையடிப்பு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் NEWS 7 தமிழ் செய்தியாளர், மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை இருப்பதாக, தொடர்ச்சியாக காவல் துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணி நேரங்களுக்கு முன்பே தெரிவித்து பாதுகாப்பு கேட்டும் காவல் துறை மெத்தனப் போக்கோடு இருந்ததன் விளைவாக கொலைவெறித் தாக்குதல்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே முதியவர் கை துண்டாக வெட்டிப் படுகொலை

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மூதாட்டி ஒருவர் மீது கொடூரமான முறையில் தலையில் கல்லைப் போட்டுப் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகை கொள்ளையடிப்பு

Source link