Different Country Players : இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா? இத்தனை வீரர்களா?

ஏப்ரல் 7 முதல் 13 வரை கனடா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தங்கள் அணி விளையாடும் என அமெரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில், கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து 2023ல் அமெரிக்க அணிக்காக விளையாட அனுமதிக்கப்பட்ட நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கோரி ஆண்டர்சனும் இந்தத் தொடருக்கான அமெரிக்க அணியில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் இரண்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடிய கிரிக்கெட் வீரர் கோரி ஆண்டர்சன் மட்டுமல்ல. எனவே இரண்டு நாடுகளுக்காக கிரிக்கெட் விளையாடிய வீரர்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

1. கெப்லர் வெசல்ஸ் – தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா

இரண்டு வெவ்வேறு நாடுகளுக்காக சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடிய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் கெப்லர் வெசல்ஸ் ஆவார். இவர் 1982 மற்றும் 1985 க்கு இடையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். அதன்பிறகு, 1985 இல் ஓய்வு பெற்றார். ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தென்னாப்பிரிக்காவுக்காக கிரிக்கெட் விளையாடினார். கெப்லர் 1991 முதல் 1994 வரை தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்து விளையாடினார். கெப்லர் வெசல்ஸ் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,788 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,367 ரன்கள் குவித்துள்ளார்.

2. இயான் மோர்கன்- இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து

2019ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இயோன் மோர்கனின் தலைமையிலான இங்கிலாந்து அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், இங்கிலாந்து அணியில் சேருவதற்கு முன்பு, மோர்கன் சர்வதேச அளவில் அயர்லாந்து அணிக்காக விளையாடினார். மோர்கன் அயர்லாந்தில் பிறந்து, கடந்த 2007 உலகக் கோப்பையில் இந்த அணிக்காக விளையாடினார். இயான் மோர்கன் 2009 இல் இங்கிலாந்துக்காக விளையாடத் தொடங்கி, இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பையையே பெற்று தந்தார்.

3. டிர்க் நான்ஸ் – ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து

டிர்க் நான்ஸ் ஆஸ்திரேலியாவில் பிறந்தவராக இருந்தாலும், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நெதர்லாந்தில் தொடங்கியது. இவர் 2009 டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்காக விளையாடினார். அதில், 2 போட்டிகளில் விளையாடிய அவர் 1 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது. நெதர்லாந்துக்காக அறிமுகமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார் மற்றும் 2010 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உலகக் கோப்பைப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை படைத்தார். 2010 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

4. எட் ஜாய்ஸ் – இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து

இயோன் மோர்கனைப் போலவே, எட் ஜாய்ஸும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். ஜாய்ஸ், 2007 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக விளையாடினார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அவர் அயர்லாந்து அணிக்காக தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றினார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில், ஜாய்ஸ் 78 ஒருநாள் போட்டிகளில் 2,622 ரன்கள் எடுத்தார். இதில், 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கலும் அடங்கும். மேலும், ஜாய்ஸ் 18 டி20 போட்டிகளில் 405 ரன்கள் எடுத்துள்ளார். ஜாய்ஸ் கடைசியாக 2018ம் ஆண்டு அயர்லாந்துக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. கோரி ஆண்டர்சன் – நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா

கோரி ஆண்டர்சன் கடைசியாக 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். அதன்பிறகு, கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவுக்கு மாறிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2023 இல், அவர் அமெரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அனுமதி பெற்றுள்ளார்.  தற்போது கனடாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். ஆண்டர்சன் உள்நாட்டு டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். அவரது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால், அவர் அமெரிக்க அணிக்கு திறம்பட செயல்பட முடியும். ஆண்டர்சன் தனது டி20 வாழ்க்கையில் 31 போட்டிகளில் 485 ரன்கள் எடுத்தது தவிர, 14 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

Source link