Chennai Traffic Diversion in nungambakam anna bridge and sterling road valluvar kottam for metro work | Chennai Traffic Diversion: வாகன ஓட்டிகளே கவனியுங்க! அண்ணா சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்


Chennai Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
போக்குவரத்து மாற்றம்:
சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், தற்போது அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
எந்தெந்த இடங்கள்?
 மெட்ரோ பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ”GCTP – CMRL பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் & ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
கீழ்கண்ட CMRL நிலையங்களின் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 09.03.2024 மற்றும் 10.03.2024 இரண்டு நாட்கள் மட்டும் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு ஹாடோஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பி விடப்படும். இந்த மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.
இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை டாக்டர் எம்ஜிஆர் சாலை (KH Road) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அமைந்தக்கரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (LeftTurn) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.
வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஸ்டெர்லிங் சாலை, உத்தமர் காந்தி சாலை (NH Road) வழியாகத் திருப்பி விடப்பட்டு தங்கள் இலக்கை அடையலாம்.

மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து மாற்றப்படும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க
Crime: ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல்: சிக்கினார் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் – அதிரடி கைது!

மேலும் காண

Source link