இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார். புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மரணம். பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இவர் இன்று அதாவது ஜனவரி 25ஆம் தேதி மாலை 5.30 மணிக்கே காலமானதாக கூறப்படுகின்றது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தந்தை இளையராஜா சகோதரர்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோரது இசைகளில் இசையமைத்துள்ளார். இவர் இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.