Actress Deepa: பெண்கள் என்றால் இளக்காரமா? .. காதலித்தாலே தப்பானவளா? – கொதித்தெழுந்த தீபா!

ஒரு பெண் காதலித்தாலோ அல்லது காதலை மறுத்தாலோ அவரின் கேரக்டரை ஆண்களால் எப்படி வேறுமாதிரி தீர்மானிக்க முடிகிறது என நடிகை தீபா கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “எங்களை யாராவது ஏமாத்திட்டா கூட அவர் இன்னைக்கு வருவான், நாளைக்கு வருவான்னு காத்துகிட்டு இருக்கணுமா?. அப்ப நாங்க மனுசங்க கிடையாதா? எங்களுக்கு உணர்வுகள், உணர்ச்சிகள் கிடையாதா?. ஆண்களுக்கு மட்டும் தான் எல்லாம் இருக்குமா?. கணவர் தாக்கியதை வெளியே சொல்லி விடாதே, போலீஸ் ஸ்டேசனுக்கு போய் விடாதே, அவமானமாக போய் விடும் என சொல்லி சொல்றாங்க. நான் என்னை மாதிரி நடுத்தர வாழ்க்கை வாழும் பெண்களுக்காகவே பேசுகிறேன். இளம் வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு இன்றைக்கு மறுமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அன்றைக்கு அப்படி இல்லை. அந்த பெண்களுக்கு உணர்வுகள் இருப்பது தவறா?

யாருடனாவது போய் விட்டால் அப்பெண்ணுக்கு ஒரு பட்டம் சூட்டி வாழ்க்கையை முடித்து விடுகிறார்கள். நீங்கள் ஒரு 4 பேர் சேர்ந்து அப்பெண்ணுக்கு மறுமணம் செய்து வையுங்களேன். ஏன் அதை செய்ய மாட்டேங்குகிறீர்கள். நாங்க பாட்டு பாடக்கூடாது, ஆடக்கூடாது, ஓடக்கூடாது, சிரிக்கக்கூடாது. இதெல்லாம் உங்களுக்கு கௌரவ குறைச்சல். அப்ப உங்க கௌரவமுன்னு பாக்குறீங்களே, எங்களுக்குன்னு சின்ன சின்ன ஆசைகள் இருக்கும்ன்னு தெரியாதா?

நாங்க தாசின்னே வச்சிக்கிடுவோம். எங்களை அப்படி ஆக்குன நீங்க யாரு? ஊரில் கரகாட்டக்காரியை கூட்டி வந்து ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார்?. நாங்க தாசியே ஆனாலும் நடித்து என் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறேன். உங்களைப் போல குடித்துவிட்டு ஊரை அழிக்கவில்லையே. யார் குடும்பத்தை கவனிக்கவில்லையோ, எவன் பெண்களை இந்த நிலைக்கு தள்ளுகிறானோ அவனைத்தான் குறிப்பிடுகிறேன். இவர்கள் எல்லாம் மனிதர்களே கிடையாது. பிடிக்கவில்லை என்றால் டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினால் இரண்டு பேர் வாழ்க்கையும் நல்லாருக்கும்.

ஒரு பெண் அடிக்கடி மனதை மாற்றினால் அவள் குடும்ப வாழ்க்கைக்கு சரிப்பட்டவள் இல்லை என்பதை நானே சொல்கிறேன். அவளுக்காக என் உன் வாழ்க்கை தொலைக்கணும். அம்மாக்களும் ஆண் மகனுக்கு ஒரு சலுகை, பெண் பிள்ளைகளுக்கு ஒரு சலுகை காட்டுகிறார். இதுவே அவர்களுக்கு எளிதாக போய்விடுகிறது. ட்

பெண்கள் என்றால் இளக்காரமாக போய் விட்டதா?. எவ்வளவு கஷ்டப்பட்டு பெண்களை பாதுகாக்கிறோம். வேலைக்கு போகணும், குழந்தைகளை பாத்துக்கணும். ஒரு பெண்ணுக்கு பையன் மேல் எப்போது வேண்டுமானாலும் காதல் வரும். அது தப்பே இல்லை. அது எனக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் இடையே உள்ள விஷயம். அதை வைத்து என்னுடைய கேரக்டரை எப்படி நீ தீர்மானிக்க முடியும். இது தப்பான விஷயம்.

புருஷன் எப்படி இருந்தாலும் தலையில் தூக்கி சுமக்க வேண்டும் என சொல்லி விடுகிறார்கள். இது எங்கள் மனதில் பதிந்து விடுகிறது. அதனால் நாளைக்கு அவன் எங்களை விட்டு போனால் 4 பேர் எதாவது பேசுவார்கள் என பயந்து அவரை திருத்தி விடலாம் என நினைக்கிறோம். உங்களுக்கு என்னை பிடித்தால் காதல்,நாங்கள் பிடிக்கவில்லை என சொன்னால் அது வேறயா?” என சரமாரியாக நடிகை தீபா கேள்வியெழுப்பியுள்ளார்.

Source link