7 Am Headlines today 2024 March 16th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: இன்று வெளியாகிறது மக்களவை தேர்தல் தேதி.. கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் – ஓ. பன்னீர்செல்வம்.
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்.
தமிழ்நாட்டில் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
மழையால் பாதிக்கப்பட்ட 7- கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை மறுசீரமைப்பு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை.
சர்வதேச கருத்தரங்கு, நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க புதிய நிபந்தனை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.சேகர் மீதான தண்டனை நிறுத்தி வைப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் மோடி தேர்தல் முடிந்தவுடன் விவசாயிகளை அடிமைகள் போல் பார்க்கிறார் – அய்யாக்கண்ணு

இந்தியா: 

மக்களவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
பாஜக மூத்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு.
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது.
உலகை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி வழிநடத்தி வருவதாக ராகுல் காந்தி காட்டம்.
இலங்கை சிறையிலுள்ள காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – புதுச்சேரி முதலமைச்சர்.
மத்திய பிரதேசம் சிங்ரவ்லி என்ற இடத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.1 ஆக பதிவு.
தேர்தல் பத்திரம் முறைகேடு அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும் – கார்கே.
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம்.
அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஆளுங்கட்சி பெற்ற தேர்தல் நிதிக்கும் சம்பந்தமில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்தனர். 

உலகம்: 

சிஏஏவை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் புகழாரம்.
காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் – 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; டிக்-டாக் செயலிக்கு எதிராக அமெரிக்காவில் சட்டம்.
ஜப்பானில் ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம்.
அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது. 

விளையாட்டு: 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இறுதிப்போட்டிக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நுழைந்துள்ளது. 
என்னுடைய வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் நான் கேட்டரிங் வேலைக்குச் சென்றேன் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பேசியுள்ளார்.
பதும் நிசங்கா அசத்தல் சதம்; 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி. 
இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி நிச்சயம் வேண்டும் – ஸ்ரீகாந்த்

Published at : 16 Mar 2024 07:07 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link