ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை! சூடுபிடிக்கும் ஜார்க்கண்ட் அரசியல்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், வட இந்தியாவில் அரசியல் நிகழ்வுகள் மாற்றம் கண்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.

ஹேமந்த் சோரன் மனு மீது இன்று விசாரணை:

இதையடுத்து, அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பாய் சோரன் இன்று பதவியேற்கிறார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து தன்னுடைய முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறையால் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பரிதிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

அமலாக்கத்துறை நடவடிக்கை:

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு, அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்க முறைகேடு, நிலமோசடி மூலம் சட்டவிரோதமாக பணிப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அமலாக்கத்துறை அவருக்கு பல முறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் அவர், ஆஜராகவில்லை. பின்னர், கடந்த மாதம் 20ம் தேதி நேரில் ஆஜரானார். பின்னர், டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 36 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்டில் பரபரப்பு:

ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் முதலில் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால், இந்த வழக்கில் நேரடியாக உச்சநீதிமன்றத்தையே அணுகலாம் என்று முடிவு செய்த ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றனர். சம்பாய் சோரன் தலைமையில் புதிய ஆட்சியை அமைக்கும் வரை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஹைதரபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Nitish Kumar: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கொண்டாடும் நிதிஷ்குமார் – இத்தனை நல்ல விஷயங்களா?

மேலும் படிக்க: கடனில் தள்ளாடுகிறதா இந்தியா? மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Source link