TN Fishermen: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறப்படும் 6 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 30 மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.