பொங்கல் பரிசு தொகுப்பு; விழுப்புரத்தில் முதன்மைச் செயலர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நெசல் கிராமம், ஒழுந்தியாம்பட்டு கிராமம் மற்றும் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14-இல் உள்ள நியாயவிலைக்கடை ஆகிய நியாய விலைக்கடைகளில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருவதை முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா,  மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 01 கிலோ பச்சரிசி, 01 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணத்துடன் வேட்டி, சேலை வழங்கிட உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர், சென்னையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகள் மூலமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசித்தொகுப்பு வழங்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், வானூர் வட்டம், நெசல் கிராமம், ஒழுந்தியாம்பட்டு கிராமம் மற்றும் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14-இல் உள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, டோக்கனில் குறிப்பிட்ட வரிசை எண் அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறதா, பொங்கல் பரிசுத்தொகுப்பில் உள்ள அரிசி, சர்க்கரையின் அளவு மற்றும் தரம், கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா தெரிவித்தார்.

மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்களில், துறை வாரியாக கிடைக்கப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை விவரம், துறை வாரியாக தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை விவரம், துறை வாரியாக நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை விவரம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், முதல்வரின் முகவரித் திட்டத்தின்கீழ், பெறப்பட்ட மனுக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தீர்வுகள் குறித்து கேட்டறியப்பட்டது.

மேலும், வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதிச்சான்று, விதவைச் சான்று, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் உடனடி தீர்வு காண்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல், மனுக்களின் நிலை குறித்து மனுதாரருக்கு தெரியப்படுத்திட வேண்டும். மேலும், மனுக்கள் தீர்வு காண்பதற்கான இடர்பாடுகள் மற்றும் சிக்கல் குறித்தும் உரிய அறிக்கையினை சமர்ப்பித்திட வேண்டும். எனவே, அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் உடனடி தீர்வு காண வேண்டும் என முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா தெரிவித்தார்.

Source link