பெரம்பலூரில் சக ஆசிரியை எரித்துக் கொலை செய்த ஆசிரியர் – கொடூரத்தின் பின்னணி என்ன?

பெரம்பலூர் அருகே சக ஆசிரியை தீபாவை கொலை செய்த, ஆசிரியர் வெங்கடேசன் என்பவரை காவல் துறையினர் வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர் எரித்து கொலை:

பெரம்பலூர் மாவட்டம் அருகே வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், தீபா ஆகிய இருவரையும் கடந்த நவம்பர் 15- முதல் காணவில்லை என காவல் துறையினர் தேடி வந்தனர். தனிப்படைஅமைத்து கோவை, மதுரை, தேனி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே தீபாவின் கார் மட்டும் கோவையில் ஒரு பகுதியில் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில் வெங்கடேசனை சென்னையில் சுற்றி வளைத்து தனிப்படை போலீஸார் பிடித்து பெரம்பலூர் அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆசிரியை தீபாவை பெரம்பலூர் அருகே உள்ள முருக்கன்குடி பாரஸ்டில் கொலை செய்துள்ளார். தீபாவின் உடலை காரில் ஏற்றிச்சென்று புதுக்கோட்டை அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?

வெங்கடேசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது, தீபாவிடம் வெங்கடேசன் கடனாக நிறைய பணம் பெற்றிருந்தார். பணத்தை தீபா திருப்பிக் கேட்டு பல முறை வெங்கடேசனை வற்புறுத்தி வந்தார். மேலும், வெங்கடேசனுக்கு மேலும் சில பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடுமாறு, தீபா வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஆசிரியர் வெங்கடேசன், நவ.15ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம், முருக்கன்குடி வனப்பகுதிக்கு தீபாவை அவரது காரில் அழைத்துச் சென்றார். காரில் வைத்து அவரை அடித்து கொலை செய்து, புதுக்கோட்டை வனப்பகுதியில் எரித்து விட்டார். அந்த காருடன் கோவை திரும்பிய போது, அங்கு விட்டு சென்றார். என வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், வெங்கடேசனை வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் நீதிபதி பர்வதராஜ் ஆறுமுகம் முன்பு  ஆஜர்படுத்தினர். வரும் 23-ம் தேதி வரை வெங்கடேசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Source link