பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்த வேண்டும்அமைச்சர் உதயநிதி..

சேலத்தில் நடைப்பெற்ற மாநாடு திமுகவுக்கான மாநாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கான மாநாடு என இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்காக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்தும் இடத்திற்கும் பயணித்தோம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தள பதிவில், “ சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி இந்தியக் கூட்டணியின் வெற்றியை நமது தலை

சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணியின் மாநில மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கட்டும். பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி – அடிமைகளை வீழ்த்தி #INDIA கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் அவர்களின் கரங்களில் சேர்க்க அயராது… pic.twitter.com/iX4SOi6iQ4
— Udhay (@Udhaystalin) January 23, 2024


வரின் கரங்களில் சேர்க்க அயராது உழைப்போம்!” என குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால்  சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஒருவித எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுகிறார்கள், அந்த எதிர்மறை எண்ணங்களை திமுக இளைஞரணி மாநாடு நேர்மறையாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார். 

Source link