தேசிய அளவில் இத்தனை தொகுதிகளில் போட்டியா? ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்.. சிக்கலாகும் கூட்டணி

கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலை போன்றே, வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

அதே சமயத்தில், மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக, காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் சேர்ந்து INDIA என்ற பெயரில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடிக்க தொடங்கிவிட்டது.

அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

539 மக்களவை தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமனம்:

இந்த நிலையில், தேசிய அளவில் 539 மக்களவை தொகுதிகளுக்கு காங்கிரஸ் பார்வையாளர்களை நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "539 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மேலும், 4 தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியையும் ஆய்வு செய்வோம். அங்கு, INDIA கூட்டணி கட்சி போட்டியிட விரும்பினால், பேச்சுவார்த்தை நடத்தப்படும். தேசிய அளவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது விரைவில் தெரிவிக்கப்படும். ஆனால், அனைத்து இடங்களிலும் முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.

எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றாலும், 255 முதல் 300 தொகுதிகள் வரை போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாள்களில் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

சிக்கல் தரும் 4 மாநிலங்கள்:

இந்த மாத இறுதியில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் வெளியிடப்படும் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. முடிந்தவரையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ஒரே வேட்பாளரை களமிறக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.

ஆனால், மேற்குவங்கம், கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை கடினமாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். பஞ்சாப்பை பொறுத்தவரையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர்கள் தனித்து போட்டியிடவே விரும்புகின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் INDIA கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் மேற்குவங்கத்தில் இரு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாக இருப்பதால், காங்கிரஸ் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும்  இடதுசாரிகளும் தனித்து போட்டியிடுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

Source link