<p>பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p>
<p>தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றும் நாளையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த பாஜக முனைப்பு காட்டி வருகிறது. </p>
<p>இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளையும் சந்தித்து மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. </p>