கூட்டணி பேச்சுவார்த்தை…..பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த சி.வி.சண்முகம்

விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சந்தித்து  நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசியதில் 8 தொகுதிகளை பாமக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், அதிமுக-பாமக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் எத்தனை தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ள நிலையில் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு அதிமுக கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ரகசியமாக தொடங்கி உள்ளது.

இந்நிலையில் பாமக யாருடன் கூட்டணி வைப்பது எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த முடிவு எடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பாமகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளதால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் திடீரென திண்டிவனம் தைலாபுரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் நேற்றிரவு 7 மணிக்கு  அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பில் பாமக போட்டியிட தருமபுரி, அரக்கோணம், மத்திய சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 8 தொகுதிகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பில் அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்காக நேற்றைய தினம் டெல்லியிலிருந்து வருகை புரிந்து ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அவரது இல்லத்தில் உணவருந்துவிட்டு மீண்டும் இரவே டெல்லி சென்றாக தகவல் வெளியாகியுள்ளன. பாமக சார்பில் 8 தொகுதிமற்றும் ஒரு ராஜசபா தொகுதியை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

Source link