ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!


Actor Govinda: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா இணைந்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் அவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
 
 

மேலும் காண

Source link