எதிர்நீச்சல் முதல் கயல் வரை: ஜனவரி மாதத்தில் தலைகீழாக மாறிப்போன சன் டிவி சீரியல் கேரக்டர்கள்!

அன்று முதல் இன்று வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன் டி.ஆர்.பி ரேட்டிங் ரீதியிலும் முன்னணி இடத்தையே தக்க வைத்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் மிகவும் பிரபலமான சில தொடர்களில் அதிரடியாக பல ட்விஸ்ட்கள் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்துள்ளது. மிகவும் கலகலகலப்பாக இருந்த இந்தக் கதாபாத்திரங்களின் நிலை தலைகீழாக மாறி ஒரு விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் எந்தெந்த சன் டிவி தொடரில் எந்தெந்த கதாபாத்திரங்களின் நிலை மிக மோசமாக சேஞ் ஓவர் ஆகியுள்ளது என்பதன் சிறு தொகுப்பு :

எதிர்நீச்சல்  - சக்தி :

எதிர்நீச்சல் தொடரில் அதிக அளவிலான வசனங்கள் எதுவும் இல்லாமல் மிகவும் அமைதியான ஒரு கேரக்டரான ஜனனியின் கணவன் சக்தி சமீபத்தில் தான் வாய் திறந்து பேச ஆரம்பித்தது போல கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. அண்ணன்களை துணிச்சலாக எதிர்ப்பது, நியாயத்திற்காக பேசுவது, பல முயற்சிகளை செய்வது என சமீபத்தில் இருந்து தான் அந்த கேரக்டருக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டது. அதற்குள் காணாமல் போன தர்ஷினியை தேடும் வேலையில்  ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டு இப்போது மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

எதிர்நீச்சல் – தர்ஷினி :

ஜூடோ பயிற்சியில் டாப் பிளேயராக கலக்கிய தர்ஷினி, குணசேகரன் எடுத்த அதிரடியான முடிவால் மனதளவில் பாதிக்கப்பட்டாள். பயிற்சியாளரே இனி உனக்கு பயிற்சி கொடுக்க முடியாது என சொல்லிவிட மனம் நொந்துபோய் திரும்பிய தர்ஷினியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றுவிட்டனர். அவளை யார் கடத்தி இருப்பார்கள் என்பது தெரியாமல் அவளை தேடி அவளின் அம்மாவும் உறவினர்களும் சுற்றி திரிகிறார்கள். துணிச்சலாக இருந்த பெண் இப்போது கடத்தல்காரர்களின் பிடியில் தவிக்கிறாள். அவளின் தற்காப்பு பயிற்சியை கூட அவளால் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருக்கிறாள் தர்ஷினி.

கயல் – கயல் :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடரான கயல் சீரியலில் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு விதமான ட்விஸ்ட்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. மிகவும் துணிச்சலான பெண்ணாக கயல் இருக்க விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறாள். அவளை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என சில சதி வேலைகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

ஆனந்த ராகம் – ஈஸ்வரி :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் கதையின் நாயகி ஈஸ்வரி மீது வீண் பழி ஒன்று விழுந்துள்ளது. புல்லட் குமாரை, ஈஸ்வரி தான் கொலை செய்ததாக சொல்லி போலீஸ் அவளை கைது செய்துள்ளது. இந்த சதி வேலையில் சிக்கிக்கொண்டு இருந்தாலும் மிகவும் தைரியமாகவே இருக்கிறாள் ஈஸ்வரி. மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி  வருகிறது ஆனந்த ராகம் சீரியல்.

அருவி – அருவி :

சன் டிவியில் ஒளிபரப்பாகும் அருவி சீரியலில், அருவியை கடத்தி வைத்து ஒருவன் மிரட்டுகிறான். அருவியை காப்பாற்ற புகழ் தன்னால் முடிந்த  முயற்சிகளை செய்து கொண்டு வருகிறான். 20 லட்சம் பணத்தை கொடுத்தால் அருவியை உயிருடன் விட்டுவிடுகிறோம் என கடத்தல்காரர்கள் மிரட்டுகிறார்கள். ஆனால் பணத்தை கொடுத்தாலும் அருவியை உயிருடன் விடுவார்களா என்பது சந்தேகம் தான். அருவியை நினைத்து சிவசங்கரி மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறாள்.

ஜனவரி மாதத்திலேயே இத்தனை சீரியல்களில் இத்தனை மாற்றங்களா? இது என்ன புது ட்ரெண்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Source link