இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

ரூபாய் 10 கோடியே 48 இலட்ச மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் ரூ.1 கோடியே 23 இலட்ச மதிப்பில் முடிவுற்ற அரசு கட்டிடங்களையும் மற்றும் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய பணிகள் துவக்க விழா திருவண்ணாமலை மாவட்டம் துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு புதிய கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டி முடிவுற்ற அரசு கட்டிடத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்  சி.என். அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  பெ.சு.தி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள் வருவாய் மற்றும் பேரிடர் துறையின் மூலம் 52 பயனாளிகளுக்கு ரூ.3.35 இலட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ 9.10 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் 182 பயனாளிகளுக்கு 11.50 இலட்சம் மதிப்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ 2.50 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ 40 ஆயிரம் மதிப்பில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் ஆயிரத்து 317 நபர்களுக்கு ரூ.8 கோடியே 66 இலட்சத்தி 55 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கும்  தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் சிறப்பாக தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி, மக்கள் திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறார். திராவிட மாடல் ஆட்சியில் பெரிய கிளாம்பாடி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து முடிக்கப்பட்டுருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட் சிப்கோ போன்ற தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த உடன் சிப்கோ தொழிற்சாலைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் கால்நடை மருத்துவ கல்லூரி செங்கம் பகுதியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பெரிய கிளாம்பாடி சிறப்பு என்னவென்றால் தமிழ்நாடு முதலமைச்சர்  2011 ஆம் ஆண்டு நமக்கு நாமே என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு கிராமப்புறங்களில் ஊராட்சி மன்ற தலைவரை சந்திக்க வேண்டும் என்று ஆணையிட்டனர். அதில் இந்த ஊராட்சியை தேர்ந்தெடுத்து தமிழ்நாடு முதலமைச்சர்  தரையிலே அமர்ந்த சிறப்புக்குரிய ஊராட்சி ஆகும்.

தேவைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்லும். எனவே தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின். மேலும் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி எடுத்துகாட்டாக காலை சிற்றுண்டி நமது பகுதியில் பெரும்பாலும் விவசாயிகள் தான் அவர்கள் காலையில் ஆண் பெண் இருவரும் விவசாயத்திற்கு சென்று விடுகின்றனர். அந்த குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் பசியாக இருக்க கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டுவந்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் இல்லை நமது தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகளும் அங்கீகாரமாக மாதம் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக  ஆயிரம் வழங்கி பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் ஆட்சியாக உள்ளது. மேலும் அனைத்து மாணவிகளும் பட்டதாரி பெண்களாக வேண்டுமென்பதால் கல்லூரி செல்லும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டம் என்ற திட்டத்தில் மாத மாதம் ஆயிரம் அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இது பெண்கள் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனப் பேசினார்.

Source link