இறந்தவரின் உடலை விட்டுப் பிரியாமல் சுற்றி வந்த வளர்ப்பு நாய்

திருவண்ணாமலை அடுத்த சிம்ம தீர்த்தம் பகுதியில் வசித்து வருபவர் தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தேசப்பிரிவினையின் போது இவர் குஜராத் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்து வந்து அங்கு வசித்து வந்தார். குறிப்பாக இவர் காந்தியடிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்திய போது அந்தப் போராட்டத்தில் இவர் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர போராட்ட தியாகி:
பின்னர் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில்  ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்  திருமணம் செய்யாமல் சேவை பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.  தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா சிறிது காலம் முன்பாக திருவண்ணாமலை பகுதியில் வசித்து வந்த  தனது அண்ணன் மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில்,  தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா உடல் நலக்குறைவால் இருந்துள்ளார். தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலாவை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
 

 
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா  உயிரிழந்தார். இதனை அடுத்து மறைந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா உடலை நல்லடக்கம் செய்ய பணம் இல்லாமல் குடும்பத்தினர் தவித்து வந்துள்ளனர். ஆதரவற்ற நிலையில் மரணம் அடைந்த 2275 உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு, நடிகர் ரஜினிகாந்த் மூலம் சடலங்களை எடுத்துச் செல்ல வாகனத்தைப் பெற்ற சமூக சேவகர் மணிமாறன் இன்று இறந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் உடலை அடக்கம் செய்யமுடியாமல் தவிப்பதை அறிந்த  சமூக சேவகர் மணிமாறன் அவர்களிடம் தொடர்புகொண்டு நான் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் உடலை அடக்கம் செய்கிறேன். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் என கூறி  உடனடியாக அங்கு சென்றுள்ளார்.

 
இறந்தவரின் முறைப்படி நல்லடக்கம் செய்தார். இந்த நிகழ்வின்போது, மறைந்த சுதந்திர போராட்ட வீராங்கனை தாரா கௌரி பிரேம்ஜி ஜோராபிலா தான் பல மாதங்களாக வளர்த்த வளர்ப்பு நாய் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் இறந்த வீட்டில் அவரது உடலை சுற்றி சுற்றி வந்ததும், அவரது உடலை நல்லடக்கம் செய்ய வாகனத்தில் ஏற்றும் போது வளர்ப்பு நாய் வாகனத்தில் ஏறியது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களிடையே மிகப் பெரும் சோகத்தையும் பார்ப்போர்களின் கண்களில் கண்ணீரை வரவைத்துள்ளது. 
மேலும் படிக்க ;Cinema Headlines:பிரம்மாண்டமாக உருவாகும் அயலான்2! விளையாட்டில் அசத்திய நிவேதா பெத்துராஜ் – இன்றைய சினிமா ரவுண்டப்

Source link