அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ சூல ரூபத்திற்கு தாமரை குளத்தில்  தீர்த்தவாரி

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் என்றும், தெற்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை தட்சிணாயன புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் 6 மாத காலத்தினை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள். மகாபாரத கதையின்படி அம்பு படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் மகரதமாதம் என்று அழைக்கப்படும். தைமாதம் பிறந்து தான் உயிர்நீத்தார் என்று கூறுகிறது. மேலும் தைமாதம் முதல் நாள் மகர மாதபிறப்பின் போதுதான் தமிழ்நாட்டில் தைபொங்கல் கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் மகரஜோதியை பக்தர்கள் தரிசிக்கின்றனர். மேலும் இந்த காலத்தில் தான் சூரியன் உக்கிரம் ( வெயில் தாக்கம் ) தொடங்குகின்றது.

இந்தநிலையில் தான்  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தட்சிணாயன புண்ணிய காலம், உத்தராயண புண்ணிய காலம், திருக்கார்த்திகை தீபம் ஆகிய 3 திருவிழாக்களுக்கு அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூரத்தில் உண்ணாமுலையம்மன் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்திலும் கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் அண்ணாலையார் சன்னதி அருகே உள்ள தங்க கொடி மரம் அருகே விநாயகர் மற்றும் சமேத உண்ணமுலை அம்மனுடன் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளி,சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் காலை 6.20 மணிக்கு தனூர் லக்கினத்தில்  உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றும் விழா நடைபெற்றது. விழா நாட்களில் காலையும், மாலையும் மாட வீதியில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் உற்சவ உலா நடைபெற்றது.

உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ நிறைவு நாள் என்பதால் அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் சுவாமி வலம் வந்து திருவண்ணாமலை நகரில்  உள்ள தாமரை குளத்தின் அருகே  எழுந்தருளினார். அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு தாமரை குளத்தில்  தீர்த்தவாரி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமங்கல மந்திரங்கள் முழுங்க வேத வாத்தியங்களுடன் சூலத்திற்கு சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், மூலிகை அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பிறகு சூலத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமாண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Source link