Sun tv ethirneechal serial today episode March 1 promo | Ethirneechal: ஜீவானந்தத்துக்கு ஸ்கெட்ச் போடும் குணசேகரன்: ஜனனி கொடுத்த க்ளூ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி.29) எபிசோடில் வீட்டுக்கு வந்த ரேணுகாவை விசாலாட்சி அம்மா நக்கலாக விசாரிக்கிறார். ஆச்சி ரேணுகாவின் அம்மாவை பயங்கரமாக திட்ட ரேணுகா ஆச்சிக்கு சரியான பதிலடி கொடுக்கிறாள்.
ஞானத்தை பார்க்கச் சென்ற ரேணுகாவிடம் ஞானம் கோபத்தைக் காட்டுகிறான். ரேணுகாவுக்கு எதுவுமே புரியவில்லை. நந்தினி பேசியது பற்றி சொல்கிறான். மிகவும் வருத்தப்பட்டு “அடுத்த குணசேகரன் போல மாறிடுவ” என நந்தினி சொன்னதாக சொல்லி அழுகிறான். அவனை ஐஸ்வர்யாவும் ரேணுகாவும் சமாதானம் செய்கிறார்கள்.

கல்யாணத்தைப் பற்றி ஜான்சியும் கரிகாலனும் குணசேகரனிடம் போய் கேட்க அவர் கோபத்தில் கையில் கிடப்பதை எல்லாம் தூக்கி விசிறடிக்கிறார். மறுபக்கம் பலத்த காயங்களுடன் மயக்கத்தில் புலம்பிக் கொண்டே இருக்கிறாள் தர்ஷினி.
அப்போது குணசேகரன் வீரசங்கிலிக்கு போன் செய்கிறார். போன் அடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தர்ஷினி போனை எடுக்க குணசேகரன் அவர் தான் தர்ஷினியை கடத்தி வைக்க சொன்னதை சொல்லி விடுகிறார். மேலும் அவளுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்வதாகவும், இரண்டு நாளில் வந்து கூட்டிட்டு போறேன் என சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் தர்ஷினி.ஞானம் பேசியதைக் கேட்டு நந்தினியை தப்பாகப் புரிந்து கொண்டு அவளை பேச விடாமல் அங்கிருந்து சென்று விடுகிறாள் ரேணுகா. நந்தினிக்கும் ரேணுகாவுக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள் விசாலாட்சி அம்மாவும் ஆச்சியும். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.நந்தினி மனது பொறுக்காமல் ரேணுகாவை புரிய வைக்க முயற்சிக்கிறாள். அந்த நேரத்தில் ஞானம் அங்கே வர “எதுக்கு மாமா இல்லாத விஷயத்தை எல்லாம் இப்ப அக்காகிட்ட சொல்லி சண்டையை மூட்டி விட்டீங்க. தெரியாம தான் கேக்குறேன்” என சத்தம் போடுகிறாள் நந்தினி. அவள் சத்தத்தை கேட்டு கதிர் அங்கே வருகிறான். விசாலாட்சி அம்மாவும் இதை வேடிக்கை பார்க்கிறார்.

ஸ்பெஷல் அதிகாரி ஒரு இடத்தில் நின்று தர்ஷினி கேஸ் குறித்து அடுத்து என்ன செய்வது எனப் பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது அந்த வழியாக தர்ஷினியைத் தேடி பன்றி மலைக்கு சென்ற சமயத்தில் ஒரு ஆள் வந்து ஜீவானந்தத்திடம் ஒரு பேப்பரைக் காட்டி விசாரித்தான். அவன் அந்த வழியாக வந்ததைப் பார்த்த ஜனனி, ஆபீஸரிடம் “ஜீவானந்தம் சாரும், நாங்களும் தர்ஷினியை தேடி வந்த போது இந்த ஆளை பார்த்தோம்” என சொல்கிறாள்.

குணசேகரன், வீர சங்கிலிக்கு போன் செய்து பேசுகிறார். “ஜீவானந்தம் என்னோட பொண்ணை தேடி கண்டிப்பா வருவான். அப்படி வந்தான்னா” என சொல்லி ஏதோ பிளான் பற்றி சொல்கிறார். தர்ஷினி எழுந்து தப்பிக்க முயற்சி செய்கிறாள் ஆனால் அவளால் முடியவில்லை. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

மேலும் காண

Source link

Nam Tamilar party symbol case cant assign said by delhi high court | கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க கோர முடியாது; உங்களுக்கு லக்கி இல்லை

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்கமுடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உங்களது கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை, இந்த நிலையில் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும் என நீதிபதி மன்மோகன் கேள்வி எழுப்பினார். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் , தேர்தல் ஆணையத்தை பரிசீலிக்க அறிவுறுத்த முடியாது என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் தெரிவித்தார்.
கரும்பு விவசாயி சின்னம்:

நாம் தமிழர் கட்சியின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இப்படியிருக்க, கட்சி சின்னத்தை பறிகொடுக்கும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பொதுவாக, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் தங்களுக்கு எந்த சின்னம் வேண்டுமோ, அதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவிக்க வேண்டுமானால், தேர்தல் ஆணையம் விதிக்கும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது, கடந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவிகிதம் அல்லது தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். அப்படி வெற்றி பெற்றால், அதற்கு சில தனிச் சலுகைகள் தரப்படும். கட்சி சின்னம் கிடைப்பது தொடங்கி அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்வது வரை பல சலுகைகள் கிடைக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்றால் என்ன?:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்றால், மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும். அல்லது அம்மாநிலத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 மக்களவை தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும். அல்லது மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
வழக்கு ஒத்திவைப்பு:
இந்நிலையில், கரும்பு விவ்சாயி சின்னத்தை ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உங்களது கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை, இந்த நிலையில் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும் என நீதிபதி மன்மோகன் கேள்வி எழுப்பினார். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் , தேர்தல் ஆணையத்தை பரிசீலிக்க அறிவுறுத்த முடியாது என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் தெரிவித்தார்.
உங்களுக்கு இந்த சின்னம், லக்  இல்லை என்பது போல் தெரிகிறது; எனவே மாற்றிவிடுங்கள் என தெரிவித்த நீதிபதி, வழக்கை ஒத்திவைத்தார்

Source link

Helicopter Exam Papers : ஹெலிகாப்டரில் எடுத்துவரப்பட்ட பொதுத்தேர்வு வினாத்தாள்கள்.. அவ்ளோ பாதுகாப்பு எதுக்கு?

சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், அங்கும் இங்குமாய் நக்சல்கள் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட, பிஜாப்பூர் – சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

பொதுத்தேர்வுகள் தொடக்கம்:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், நக்சல் தாக்கம் அதிகமுள்ள சத்தீஸ்கரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. நாளை +2 பொதுத்தேர்வுகள், அங்கு தொடங்கப்பட உள்ளது.

இதற்காக, சத்தீஸ்கர் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது. சத்தீஸ்கரில் நக்சல்களின் தாக்கம் அதிகமுள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவரப்பட்டன.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் என்பதால் பாதுகாப்பு நலன் கருதி வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலம் சுக்மா மாவட்டத்தின் ஜகர்குண்டா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டன. நக்சலைட்டுகள் ஆதிக்கம் காரணமாக கடந்த ஆண்டும் இதேபோல் ஹெலிகாப்டர் மூலமாக வினாத்தாள்கள் கொண்டுவரப்பட்டன.

ஹெலிகாப்டரில் எடுத்துவரப்பட்ட பொதுத்தேர்வு வினாத்தாள்கள்:

சத்தீஸ்கரை பொறுத்தவரையில், கடந்த 9 ஆண்டுகளில், (நக்சல்) வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளது. இறப்புகள் (மாவோயிஸ்ட் வன்முறையில்) 70 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட (எண்ணிக்கை) மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், சில பகுதிகளில் அவ்வப்போது நக்சல் தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில், நக்சல்களின் கோட்டை என கருதப்படும் சுக்மா மாவட்டத்தின் வனப்பகுதியில் இரண்டு போலீஸ் முகாம்களை பாதுகாப்புப் படையினர் அமைத்தனர். இதை தொடர்ந்து, குடியரசு தினத்தன்று, சுக்மா-பிஜப்பூர் பகுதியில் முதன்முறையாக இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் இடதுசாரி தீவிரவாதம் (LWE) தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதில் பேசிய அவர், "இடதுசாரி தீவிரவாதம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும்.

கடந்த நாற்பது ஆண்டுகளிலேயே 2022ஆம் ஆண்டுதான், நக்சல்களால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மிகக் குறைவான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இறப்புகள் பதிவாகியுள்ளது. நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

Source link

Putin On Nuclear War: "அணு ஆயுதப்போர் வெடிக்கும்" உலக நாடுகளை மிரள வைத்த ரஷிய அதிபர் புதின்!

கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, தொடங்கிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர், உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. போரின் நடுவே, பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றதாகவும் அது தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

தாக்கத்தை ஏற்படுத்தும் உக்ரைன் போர்:

போரில் உக்ரைனுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த மாத தொடக்கத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "வரும் காலங்களில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் துருப்புகள் அனுப்புவதை நிராகரித்து விட முடியாது" என்றார்.

உலக நாடுகள் மிரண்டு போகும் வகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இதற்கு பதிலடி அளித்துள்ளார். உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் துருப்புகளை அனுப்பினால் உலகளாவிய அணு ஆயுத போர் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.

ரஷியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஆண்டு உரை நிகழ்த்திய புதின், "உக்ரைனில் ரஷியாவின் லட்சியங்களை நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகிறேன். துருப்புகளை அனுப்பும் முடிவுகளை எடுக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

உலக நாடுகளை மிரட்டும் ரஷிய அதிபர்:

ஐரோப்பியாவில் நேட்டோவின் கூட்டாளிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த திட்டமிடுகிறது என குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், எங்கள் எல்லையில் தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் இடங்களை தேர்வு செய்து வருகிறது. உக்ரைனுக்கு நேட்டோ துருப்புகளை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகிறது" என்றார்.

ரஷியா மீது படையெடுக்க முயன்று தோல்வி அடைந்த பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் மற்றும் ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் குறித்து பேசிய புதின், "எங்கள் நாட்டு எல்லையில் துருப்புகளை அனுப்பியவர்களுக்கு என்ன நடந்தது என்பது நினைக்க தோன்றுகிறது. படையெடுக்க நினைப்பவர்களுக்கு அதை விட மோசமான விளைவுகள் ஏற்படும்.

தங்கள் பிராந்தியத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன என்பதையும், அவர்கள் இப்போது உலகை பயமுறுத்துவதும், அணுசக்தி மோதலின் உண்மையான அச்சுறுத்தலை எழுப்புவதும் நமது நாகரிகத்தை அழிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

அணு ஆயுத போர் வெடிக்கும் என ரஷிய அதிபர் புதின் கூறுவது இதுமுறை அல்ல. உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து அவர் பல முறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Top celebrities worldwide attends Anant Ambani Radhika Merchant Pre- wedding celebration | Anant Ambani

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவுக்கு திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், சர்வதேச அளவிலான தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் முகமது அல் அப்பார், பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் பல விவிஐபிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாலிவுட் பிரபலங்கள் நடிகர் சல்மான் கான், ரன்பீர் கபூர் – ஆலியா பட் ,  ராணி முகர்ஜி, ரன்வீர் கபூர், தீபிகா படுகோன், சோனாலி பிந்த்ரே, நடிகர் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், சூரியகுமார் யாதவ், ஹிர்திக் பாண்டியா மற்றும் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மும்பை விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.

ஹாலிவுட்டின் பிரபலமான பாடகி ரிஹானாவின் நடன நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முன்பான இந்த நிகழ்ச்சிகளில் நடனமாட அவருக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் காண

Source link

மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டிய திமுக எம்எல்ஏக்கு குவியும் பாராட்டு..!

திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று எதிர்க்கட்சியினரால் பரப்புரை செய்யப்பட்டு வரும் நிலையில், மும்மத பிரார்த்தனையுடன் கீழக்கரையில் அரசு நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தின் செயல் அனைத்து தரப்பினரிடையே பாராட்டு பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டினார். மேலும் ‘இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இது இந்து மத நிகழ்ச்சியா? மற்ற மதத்தினா் எங்கே? கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி.’ என அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் இந்துமத பற்றாளர்கள் இடையே எதிர்ப்பை கிளப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கீழக்கரையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டியுள்ளார் ராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத போதகர்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து  பிரார்த்தனையுன் அடிக்கல் நாட்டப்பட்டது. இது கட்சி, மதம் தாண்டி அனைத்து தரப்பு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர்  ஜவாஹிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுகையில், தரம் உயர்த்தப்பட்ட தாலுகா அரசு மருத்துவமனை ஒன்பது கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்  கீழக்கரை உரக்கடங்கில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் அயலக அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் ஒன்றிய பெருந்தலைவர் கே டி பிரபாகரன் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Source link

பெங்களூரில் அதிர்ச்சி; சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்லும் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்து 4 பேர் காயம்

பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆண்கள் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகம் பெங்களூரு 80 அடி சாலையில் அமைந்துள்ளது. இந்த கஃபேவில் வெடித்தது மர்மப் பொருளா அல்லது உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

Source link

டாக்கா கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலி

வங்கதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில சிக்கி, காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
44 பேர் பலி:
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நேற்று உள்ளூர் நேரப்படி சுமார் 10 மணியளவில் உணவகம் ஒன்றில் தீப்பிடித்தது. 7 மாடிகளை கொண்ட அந்த கட்டடத்தில் பல உணவகங்கள், துணி மற்றும் செல்போன் விற்பனை தொடர்பான பல கடைகள் உள்ளன. இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, அடுத்தடுத்த தளங்களும் முழுவதும் பற்றி எரிந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில்,  75 பேர் மீட்கப்பட்டனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரம், 33 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 11 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  பலியானவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர். உள்ளூர் நேரப்படி, நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

At least 44 people were killed in a massive fire that engulfed a building in #Bangladesh’s capital #Dhaka. pic.twitter.com/PDTgeiI0Gf
— Pooja Mehta (@pooja_news) March 1, 2024

விபத்து நேர்ந்தது எப்படி?
பெய்லே சாலையில் உள்ள கிரீன் கோசி காட்டேஜ் எனப்படும் கட்டிடத்தில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் உள்ள கச்சி பாய்” உணவகத்தில் ஏற்பட்ட தீ மேலே இருந்த மற்ற தளங்களுக்கும் அதிவேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால் அச்சமடைந்த உள்ளே இருந்த நபர்கள், உடனடியாக வெளியேறுவதற்காக ஜன்னல்கள் வழியாக மல்வேறு தளங்களில் இருந்து கீழே குதித்துள்ளனர். பலர் புகைமூட்டத்தால் மயங்கி கட்டிடத்திற்குள்ளேயே சுருண்டு விழுந்துள்ளனர். அப்படி கட்டிடத்தில் இருந்து குதித்ததால் ஏற்பட்ட காயங்கள் அல்லது தீக்காயங்கள் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தான் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வேகமாக பரவ காரணம் என்ன?
விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் வங்கதேச எல்லைக் காவலர் படை,  ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (ஆர்ஏபி), ஜெனரல் அன்சார் மற்றும் அன்சார் காவலர் பட்டாலியன் (ஏஜிபி) ஆகியவற்றின் ஆதரவுடன் பதிமூன்று தீயணைப்பு சேவை பிரிவுகள் கடுமையாக போராடி தீயை அணைத்தன. எரிவாயு கசிவு அல்லது அடுப்பில் இருந்து பற்றிய தீ காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். பல தளங்களில் உள்ள உணவக சமையலறைகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தீ வேகமாக பரவுவதற்கு காரணம் என்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர் . அதேநேரம், உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் காண

Source link

IND Vs ENG 5th Test Team India Squad Announced KL Rahul Ruled Out Jasprit Bumrah Returns For Dharamsala Test

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இந்தியா முன்னிலை:
இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.  இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி  வென்றுள்ளது. கடைசி மற்றும் 5 வது டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் விவரம் இன்று (பிப்ரவரி 29) வெளியாகியுள்ளது.

🚨 NEWS 🚨#TeamIndia’s squad for the 5th @IDFCFIRSTBank Test against England in Dharamsala announced.Details 🔽 #INDvENG https://t.co/SO0RXjS2dK
— BCCI (@BCCI) February 29, 2024

அதன்படி பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடைசி டெஸ்ட் போட்டியில் உடற்தகுதியை கருத்தில் கொண்டு கே.எல்.ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் ராஞ்சியில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 5 வது போட்டியில் இணைந்துள்ளார். வாசிங்டன் சுந்தர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று மீண்டும் பயிற்சியை தொடங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.
5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), தேவ்தத் படிக்கல், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

Source link

director Santhana Bharathi talks about making of kanmani anbodu song Manjummel Boys Video Trending | Manjummel Boys: இணையத்தை கலக்கும் “கண்மணி அன்போடு” பாடல்

கண்மணி அன்போடு காதலன் பாட்டு உருவான விதத்தை குணா படத்தின் இயக்குநர் சந்தான பாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எதனுள் சென்றாலும் குணா படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் தான் ரீல்ஸ் வீடியோவாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் தமிழ் சினிமா ரசிகர்களின் காதல் கீதம் என்றாலும் தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் (Manjummel Boys) படத்தால் இன்றைய தலைமுறையினருக்கும் அப்பாடல் சென்றடைந்துள்ளது.
சிதம்பரம் இயக்கியுள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா கூட்டம் போல இளைஞர்கள் இப்படத்தை காண படையெடுத்து வருகின்றனர். இப்படத்தில் சௌபின் ஷாஹிர் , ஸ்ரீநாத் பாசி , பாலு வர்கீஸ் , கணபதி எஸ். பொதுவால் , லால் ஜூனியர் , தீபக் பரம்போல் , அபிராம் ராதாகிருஷ்ணன் , அருண் குரியன் , காலித் ரஹ்மான் , சந்து சலீம்குமார், மற்றும் விஷ்ணு ரெகு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் குணா படம் மீண்டும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் உருவான விதத்தை அப்படத்தின் இயக்குநர் சந்தான பாரதி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அதில், “கண்மணி அன்போடு காதலன் மாதிரியான பாட்டு முன்னரே வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கமலுக்கு அமைந்திருக்கும். அதை விட இந்த பாடல் மிகச்சிறப்பாக வந்தது என சொல்லலாம். கதைப்படி மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் காதலிக்காக லெட்டர் எழுத வேண்டும். இவருக்கு எழுத தெரியாத நிலையில், காதலியிடம் நீயே எழுதி படிச்சிக்க என சொல்லும் படி காட்சி இருந்தது.

#ManjummelBoys❤‍🔥One of the best movie InMalayalam Cinema this years💯🌏 pic.twitter.com/RejBQcLHFg
— Mohmmead Ali (@MohmmeadAl56740) February 29, 2024

இளையராஜாவிடம் இந்த காட்சிக்கான சிச்சுவேஷன் சொன்னோம். எந்த மாதிரி வேணும் என கேட்டார். அப்போது யாரோ, ‘அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்’ பாடல் மாதிரி, ஆனால் வேற மாதிரி இருக்க வேண்டும் என சொன்னோம். உடனே ராஜா ட்யூன் போட, அங்கே இருந்த கவிஞர் வாலி உடனடியாக வரிகளை எழுதிக் கொடுத்தார். பாட்டில் வரும் வசனத்தை கமல் முன்னரே எழுதிய நிலையில் வரிகளை மட்டும் மட்டும் வாலி எழுதினார். கமல்தான் பாட வேண்டும் என்பது முன்னரே முடிவாகி விட்டது. மேலும் இந்த படத்துக்கான மொத்த இசையையும் இளையராஜா 2 மணி நேரத்தில் முடித்து விட்டார்” என சந்தான பாரதி கூறியிருப்பார்.

மேலும் காண

Source link

cm mk stalin will be celebrated his 71st birthday today

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை பற்றி முந்தைய தலைமுறையினர் முதல் இன்றைய தலைமுறையினர் வரை சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தில் பிறந்த அவர் இளமை காலம் தொட்டே அரசியலிலும், மக்களுக்கான போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரது அப்பாவும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பேர் சொல்லும் பிள்ளையாக தனது செயல்பாடுகளில் திகழும் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர், சென்னை மேயர், துணை முதலமைச்சர் படிப்படியாக தனது உழைப்பால் உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
கடந்த 2021 ஆம்  ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதல்முறையாக பதவியேற்றார். இதனிடையே அவர் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை சிறப்பாக கொண்டாட திமுக தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Our Loveable Leader and Chief Minister Honorable Thiru. @mkstalin is the one who knows the right way, goes the right way and shows the right way for the people. #HBDCMMKStalin | #HBDMKStalin pic.twitter.com/Pn5h4GeuGb
— Trends DMK (@TrendsDmk) February 29, 2024

இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் அவர், காலை 8.30 மணியளவில் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் நேராக அண்ணா அறிவாலயம் செல்லும் அவர், அங்குள்ள கலைஞர் அரங்கில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. தொண்டர்கள் கேக் வெட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். மேலும் அன்னதானம், இரத்ததானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கான அடிப்படை உதவிகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் போஸ்டர்கள், பேனர்கள் என அனைத்தும் மூலமாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளை தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் #HBDCMMKStalin   #HBDMKStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஏபிபி நாடு சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

மேலும் காண

Source link

7 Am Headlines today 2024 1st March headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா – சென்னை அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார்
தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம் – 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் இன்று சென்னை வருகை
கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தல் – கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைப்பு
வண்டலூர் அருகே திமுக பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை
12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
போலி ஆபாச வீடியோ விவகாரம் – தருமபுர ஆதீனத்தை மிரட்டிய நபர்கள் கைது
கீழடி அகழாய்வு பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
பிரதமர் முகத்தில் தோல்வி பயம் – திமுக பற்றி பேச எந்த தகுதியும் இல்லை – முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த  வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் – அரசியல் தலைவர்கள் வரவேற்பு
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு

இந்தியா:

இந்தியாவில் பெண் விமானிகள் தான் அதிகம் உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல்
3.2 டன் கோடி கோதுமையை 2024-2025 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு
டிரைவர் இல்லாமல் ரயில் ஓடிய சம்பவம் – இஞ்ஜின் டிரைவர் சஸ்பெண்ட்
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவு – முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்
இமாச்சலப் பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் தகுதி நீக்கம் – சபாநாயகர் அதிரடி முடிவு
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 14 பேர் பலியான பரிதாபம்

உலகம்:

பாகிஸ்தானில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் 6 ஆயுதப்போராட்ட குழுவினர் உயிரிழப்பு
மாலத்தீவில் இந்திய ராணுவத்தினரை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்
அதிபர் பதவிக்கான முழு உடற்தகுதியுடன் ஜோ பைடன் இருப்பதாக அவரது மருத்துவர் தகவல்
இஸ்ரேல் -ஹமாஸ் போர்; பாலஸ்தீனியர்கள் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

விளையாட்டு

Published at : 01 Mar 2024 06:51 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link

netflix reveals vijay 69 updates yrf to produce anupam kher movie

‘விஜய் 69’ (Vijay 69) படத்தை பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
தளபதி 69
தமிழக வெற்றிக் கழகம் என்கிற தனது அரசியல் கட்சியின் பெயரை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசியல் களத்திலும் மற்றும் திரைப்படத் துறையிலும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஜய் அரசியலுக்கு வந்தால் எந்த9க் கட்சியோடு கூட்டணி வைப்பார் என்கிற கேள்வி அனைவரது மனதிலும் இருக்கிறது. பல்வேறு அரசியல் பிரமுகர்கள் அவரது அரசியல் வருகையை ஆதரித்தும் மேலும் பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.
விஜய்யின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒருபக்கம் அவரை அரசியல் தலைவராக பார்க்கும ஆசை இருந்தாலும் இனிமேல் அவரை நடிகராக திரையில் பார்க்க முடியாத வருத்தம் இருக்கதான் செய்கிறது. தங்களது சிறு வயது முதல் பார்த்து வளர்ந்த ஒரு நடிகரை இனிமேல் மீண்டும் திரையில் பார்க்க முடியாதது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்நிலையில் விஜயின் 69ஆவது படமே அவரது கடைசிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் ஒரே கேள்வியாக இருக்கிறது.
வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம், என பல இயக்குநர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்படியான நிலையில் விஜய் 69 என்கிற படத்தின் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை குழப்பியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
விஜய் 69

After the success of ‘The Romantics’ and ‘The Railway Men’, @NetflixIndia and YRF Entertainment bring you a quirky slice-of-life film with #Vijay69.Here is the poster of the film headlined by #AkshayRoy and starring #AnupamKher is gearing up to tuck your hearts soon on… pic.twitter.com/DN1mIEV3JU
— Ramesh Bala (@rameshlaus) February 29, 2024

பிரபல பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் விஜய் 69. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை  தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெட்ஃப்ளிக்ஸ் “ வாழ்க்கை என்பது ஒரு ரேஸ்” என்று கேப்ஷன் கொடுத்துள்ளது. மேலும் இந்தப் போஸ்டரில் அக்‌ஷய் ராய் மற்றும் சைக்கிள் ஓட்டியபடி பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டவர்கள் காணப்படுகிறார்கள்.
இப்படத்திற்கு ‘விஜய் 69’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இதனை தளபதி விஜய்யின் 69ஆவது படத்துடன் குழப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தப் படத்திற்கான ப்ரோமோஷனுக்காக இந்தப் படத்திற்கு இப்படி டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

மேலும் காண

Source link

12 people lost their lives in a train accident in Jharkhand last night pm and cm condolence

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்தில்  12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் பாகல்பூரில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூர் செல்லும் அங்கா விரைவு ரயில் நேற்று இரவு ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கல்ஜாரியா, பகுதி அருகே வந்த போது ரயிலில் தீ பிடித்ததாக பயணிகளிடையே வதந்தி பரவியது.
இதனால் பதற்றமடைந்த பயணிகள் ஓடும் ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். பின் அந்த ரயிலில் இருந்து பயணிகள் அவசரமாக இறங்கியுள்ளனர். தீ விபத்தில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்கள் அருகே இருக்கும் தண்டவாளத்தின் குறுக்கே ஓட முயற்சித்துள்ளனர். அப்போது அந்த வழியாக சுமார் 140 கி.மீ வேகத்தில் வந்த மற்றொரு விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் 12 பேர் சமப்வ இடத்திலேயே உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என என ஜம்தாரா துணைப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pained by the mishap in Jamtara, Jharkhand. My thoughts are with all those who have lost their loved ones. May the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 28, 2024

ஆனால் அந்த ரயிலில் தீ விபத்து ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த ரயில்வே துறை இந்த கோர விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்டில் நடைபெற்ற விபத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், “ ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நடைபெற்ற கோர விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

जामताड़ा के कलझारिया स्टेशन के पास हुई ट्रेन दुर्घटना की दुखद खबर से मन व्यथित है।ईश्वर दिवगंत आत्माओं को शांति प्रदान कर शोकाकुल परिजनों को दुःख की यह विकट घड़ी सहन करने की शक्ति दें।प्रशासन की टीम मौके पर राहत एवं बचाव कार्य में जुटी हुई है। दुर्घटना में घायल हुए लोगों के…
— Champai Soren (@ChampaiSoren) February 28, 2024

இந்த விபத்து தொடர்பாக ஜார்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், “ஜம்தாராவின் கல்ஜாரியா ஸ்டேஷன் அருகே ரயில் விபத்துக்குள்ளான செய்தியால் மனம் வருந்துகிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், இக்கட்டான காலக்கட்டத்தை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தாருக்கு வழங்கவும் வேண்டுகிறேன். நிர்வாக குழுவினர் சம்பவ இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

Karthigai Deepam: ஆவலின் உச்சத்தில் தீபா: உறைந்து போன ஆனந்த்: கார்த்திகை தீபம் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியா ஆனந்தை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய, மீனாட்சி சுமங்கலி பூஜைக்கு கூப்பிட அவளைத் திட்டி விட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, மீனாட்சி போனை வைத்ததும் அபிராமி "என்ன மீனாட்சி ஆனந்த் கிட்ட சுமங்கலி பூஜைக்கு வர சொல்லி சொல்லிட்டியா?" என்று கேட்க, "சொல்லிட்டேன் அத்தை, ஆனால் அவர் திட்டுறாரு" என்று சொல்ல அபிராமி ஆனந்துக்கு போன் போட்டு "என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது, ஆனால் நீ சுமங்கலி பூஜைக்கு இங்க இருக்கணும்" என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடுகிறாள்.

அதன் பிறகு ஆனந்த் "பூஜை நடக்கும்போது அங்க இருப்பேன், முடிந்ததும் கிளம்பிடுவேன்" என்று வாக்கு கொடுத்து விட்டு கிளம்பி வருகிறான். அதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் அபிராமி வீடே அலங்காரங்களுடன் திருவிழா கோலத்தில் காட்சி அளிக்க தீபா துளசி மாடத்தைச் சுற்றி வருகிறாள். மீனாட்சி அங்கு வந்து என்ன தீபா காலையிலேயே பக்தி பலமா இருக்கு என்று கேட்கிறாள்.

“முதல் முறை கார்த்திக் சார் என் கழுத்தில் தாலி கட்டும்போது அவருடைய முகத்தை பார்க்கல, ஆனால் இந்த முறை அவர் தாலி கட்டும் போது அவருடைய முகத்தை பார்க்கப் போறேன், அதை நினைத்தாலே சந்தோசமாக இருக்கு” என்று சொல்கிறாள். பிறகு அய்யர் வருகை தர, அவர் ஏற்பாடுகளை பார்த்து நான் மந்திரம் சொன்னா மட்டும் போதும் போலயே, எல்லா ஏற்பாடும் பக்காவா இருக்கு” என்று பாராட்டுகிறார்.

அதன் பிறகு சுமங்கலி பூஜை தொடங்க மறுபக்கம் ரியா மாலை மற்றும் தாலியுடன் கோயிலுக்கு வந்து ஐயரை எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொல்கிறாள். இங்கே பூஜையில் ஆனந்த் கையில் தாலியைக் கொடுத்து மீனாட்சி கழுத்தில் கட்ட சொல்ல, அவன் ரியா சொன்னதை நினைத்து உறைந்து நிற்கிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

Source link

IND Vs ENG 5th Test Yashasvi Jaiswal Needs 38 Runs To Break Virat Kohli Record Most Runs Against England

டெஸ்ட் தொடர்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்த வகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி  வென்றுள்ளது. கடைசி மற்றும் 5 வது டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி, இந்த போட்டி தர்மசாலவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஜெய்ஸ்வால் படைக்கவிருக்கும் சாதனை:
இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க உள்ளார். அதாவது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு சீரிஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்து இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் இந்த சாதனையை படைத்தார். அந்த தொடரில் அவர் 655 ரன்களை எடுத்திருந்தார். இச்சூழலில் தான் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான சீரிஸில் ஜெய்ஸ்வால் 655 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட்டில் அவர் 1 ரன்களை பெற்றால் இந்த சாதனையை முறியடிப்பார். அதேபோல்,  இந்த தொடரில் 693 ரன்கள்  எடுத்தால் 21 ஆம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி ( 692 ரன்கள்) வசமே உள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

Source link

Lok Sabha Election 2024 admk calls congress to make alliance over dmk

Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக ஒரு புறம், அதிமுக ஒருபுறம் என கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வர, மறுபுறம் பாஜகவும் தனது தலைமையில் புதிய கூட்டணியை கட்டமைத்து வருகிறது. இதனால், தேர்தல் நேரத்தில் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி:
ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் பலதரப்பட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், கொங்குநாடு மக்கள் தேசிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் உடனான கூட்டணி இறுதியாக, தொகுதி ஒதுக்கீடும் முடிவடைந்துள்ளது. அதேநேரம், திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு பெரிய கட்சி ஆன, காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவடையவில்லை. கடந்த தேர்தலில் கொடுத்ததை காட்டிலும், இம்முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்துவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
காங்கிரசுக்கு அதிமுக அழைப்பு:
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க் கொண்டு இருக்கிறது. சுமுகமான ஒன்றை எட்டிய பிறகு அறிவிப்பை வெளியிடுவோம். காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்கும் கசப்பு வெளிப்பட்டுள்ளது. அந்த கசப்பிற்கான நல்ல மருந்து அதிமுகவிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல பதில் கிடைக்கும்.
பிரதமர் மோடி எம்ஜிஆர் குறித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். எம்ஜிஆர் குறித்துப் பேசி இருக்கிறார் என்றார் அது ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் உள்ளடக்கம் தான். எனவே, இதை நீங்கள் வரவேற்கவே செய்கிறோம்” என பதிலளித்தார்.
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைந்தால் நேரடியாக இந்தியா கூட்டணியில் அதிமுக இடம்பெறுவது தொடர்பான கேள்விக்கு, “அது குறித்து எல்லாம் இன்னும் 2,3 நாட்களில் நல்ல பதில் கிடைக்கும். கூட்டணி குறித்து வெளிப்படையான பதிலை 2,3 நாட்களில் நிச்சயம் நாங்களே தருவோம். வரும் நாட்களில் எங்கள் பொதுச்செயலாளர் நல்ல செய்திகளை வரிசையாக அறிவிப்பார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வியூகங்களைத் திட்டமிட்டுள்ளோம்” என்று வைகை செல்வன் தெரிவித்தார்.

மேலும் காண

Source link

ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் – சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் திட்டத்தை அமல்படுத்தும் ஒரு கோடி குடும்பங்களுக்கு 75,000 கோடி ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

300 யூனிட் மின்சாரம் இலவசம்:

இந்த திட்டத்தின் மூலம் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் அமைப்பை உருவாக்க நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவையின் முடிவுகள் குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ‘பி.எம். சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா’ திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி குடும்பங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.

இந்த திட்டமானது சோலார் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிக்கு உத்வேகம் அளித்து 17 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும். பிப்ரவரி 13ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குடும்பமும் 1 கிலோவாட் அமைப்புக்கு 30,000 ரூபாயும், 2 கிலோவாட் அமைப்புக்கு 60,000 ரூபாயும் மானியமாகப் பெறலாம்.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

இதனால் மக்கள் தங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க முடியும். உபரி மின்சாரத்தை டிஸ்காம்களுக்கு (மின்சார விநியோக நிறுவனம்)  விற்பதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். 3 கிலோவாட் மின்சார அமைப்பின் மூலம் ஒரு குடும்பம், சராசரியாக ஒரு மாதத்திற்கு 300 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்" என்றார்.

உரங்களுக்கான மானியம் அளிப்பது குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "வரவிருக்கும் காரிஃப் பருவத்தில் பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் (P&K) உரங்களுக்கு 24,420 கோடி மானியம் வழங்கப்படும். விவசாயிகளுக்கு டை அமோனியம் பாஸ்பேட் உரம் குவிண்டாலுக்கு 1,350 ரூபாய்க்கு தொடர்ந்து வழங்கப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான காரிஃப் பருவத்தில் பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் 24,420 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2024 காரிஃப் பருவத்தில் நைட்ரஜன் (N) மானியம் ஒரு கிலோவுக்கு 47.02 ரூபாயாகவும், பாஸ்பேடிக் (P) ஒரு கிராம் 28.72 ரூபாயாகவும், பொட்டாசிக் (K) 2.38 ரூபாயாகவும், சல்பர் (S) ஒரு கிலோவுக்கு 1.89 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "1.26 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் குஜராத் மற்றும் அசாமில் மூன்று செமிகண்டக்டர் அலகுகளை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 100 நாட்களுக்குள் மூன்று அலகுகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்" என்றார்.

Source link

Kamal Haasan personally invited the Manjumel Boys crew and took a photo with them video viral | Manjummel Boys: ”நண்பர்களுக்கும் காதல் பொருந்தும்”

Manjummel Boys: மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்த உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்டி, அவர்களுடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
மஞ்சுமெல் பாய்ஸ்
மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்தப் படம் குறித்துதான் பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளன. சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய் மலையாள மொழியில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானது.
2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசனின் குணா படமும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலும் மிகச்சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் படம்  நான்கு நாட்களில் ரூ.14.75 கோடி வசூல் செய்துள்ளது.  இப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்ற நிலையில் படம் வசூலை அள்ளியது.  இந்தப் படத்தின் நிகழ்விடமாக உள்ள குணா படத்தில் வரும் குகைதான் உள்ளது.  குறிப்பாக படத்தின் க்ளைமக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரசிகர்களை தியேட்டரில் இருந்து நகரவிடவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
”காதல் என்பது நண்பர்களுக்கும் பொருந்தும்”
அந்த அளவிற்கு படத்தின் கதையோடும் குணா குகையுடனும் ரசிகர்கள் ஐக்கியமாகிவிட்டனர் எனலாம். குணா குகை கொடைக்கானலில் அமைந்திருந்தாலும், உலக நாயகன் கமல்ஹாசனின் படத்திற்குப் பின்னர்தான் இந்த இடத்திற்கான அடையாளம் குணா குகை என அழைக்கப்பட்டது. இன்று வரை அந்த இடம் குணா குகை என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்த உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். மேலும், மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.   அந்த வீடியோவில், கமல்ஹாசன், மஞ்சுமெல் பாய்ஸ் உடன் கலகலப்பாக பேசுகிறார்.

The BOYS with Ulaganayagan #KamalHaasan#ManjummelBoyspic.twitter.com/GI8cfSSQeZ
— AB George (@AbGeorge_) February 29, 2024

மேலும், “எனக்கு இந்தப் படம் ரொம்ப பிடித்திருக்கிறது. என்னுடைய பெயர்  படத்தில் வந்ததற்காக மட்டும் இல்லை. எனக்கு படம் ரொம்ப பிடித்திருக்கு. காதல் என்பது நண்பர்களுக்கும் பொருந்தும். நண்பர்களுக்குள்ளும் காதல் என்பது இருக்கும். குணா படத்தில் ஒரிஜினல் க்ளைமேக்ஸ் படத்தில் காண்பித்தது அல்ல. வேறொரு முடிவு இந்தப் படத்தில் உள்ளது” என்றார்.

மேலும் படிக்க
Anant Ambani-Radhika Wedding: முகேஷ் அம்பானி வீட்டில் டும் டும் டும்: பங்கேற்க போகும் முக்கிய பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

மேலும் காண

Source link

tn govt mtc bus app new facility pay rs40 to go anywhere from Kilambakkam

Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
கிளாம்பாக்கத்தில் புதிய சேவை:
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , இன்று (29.02.2024)  தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து 1/2 pic.twitter.com/4xizJllLI7
— TN DIPR (@TNDIPRNEWS) February 29, 2024

திட்டத்தின் விவரங்கள்:
மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும்,  சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள் 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் 01.03.2024 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்விழாவின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆங்பி ஜான் வர்கீஸ் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. மோகன், மாபோக இணை மேலாண் இயக்குநர் குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய சலுகை பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் காண

Source link

Anna Serial: சண்முகத்தை ஏமாற்றும் வைகுண்டம்: பாண்டியம்மா காலை முறித்த இசக்கி: அண்ணா சீரியல் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் இசக்கிக்கு தாலி பிரித்து போட முடிவெடுத்து சௌந்தரபாண்டியை சம்மதிக்க வைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, இசக்கி எதுக்கு இதெல்லாம் என்று கேட்க, எல்லாம் “உன்னையும் ஷண்முகத்தையும் சேர்த்து வைக்க தான் இப்படி பண்றேன், வேற எதுக்கும் இல்ல” என்று சொல்ல, “அண்ணனை பார்க்க போகிறோம்” என்று இசக்கி சந்தோசப்படுகிறாள்.

அதனைத் தொடர்ந்து வைகுண்டம் சிவபாலனை பார்க்க, இசக்கியும் “நீயும் எப்படியெல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டீங்க, ஆனால் அது நடக்காமல் போய்டுச்சே” என்று வருத்தப்பட, அவன்“அதெல்லாம் எனக்கு கவலை இல்ல மாமா, இசக்கி என்னுடைய மதினி அவங்க சந்தோசமாக இருந்தா போதும்” என்று சொல்கிறான்.

இதனைத் தொடர்ந்து இங்கே வீட்டில் வைகுண்டம் “நாளைக்கு கோயிலுக்கு போகணும், மாலை போட்டு பாத யாத்திரையா கோயிலுக்கு போகப் போறேன்” என்று சொல்லும் போதே தடுமாற, சண்முகத்துக்கு சின்னதாக சந்தேகம் வருகிறது.

இதனைத் தொடர்ந்து இங்கே பாண்டியம்மா இசக்கியை கூப்பிட்டு காலை அமுக்க சொல்ல, அவளும் அமைதியாக காலை அமுக்கி விட்டு கொண்டிருக்கிறாள். பாண்டியம்மா “உங்க அம்மா ஓடிப்போனவர் தானே” என்று சொன்னதும் கடுப்பாகி பாண்டியம்மா காலை பிடித்து முறித்து விடுகிறாள். இதனைத் தொடர்ந்து மறுநாள் பாக்கியம் எல்லாரையும் கூப்பிட்டு கொண்டு கோயிலுக்கு வந்து விடுகிறாள்.

இங்கே ஷண்முகம் குடும்பமும் கோயிலுக்கு வருகின்றனர். ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்களா? அடுத்து நடக்க போவது என்ன என்ற சுவாரஸ்ய முடிச்சுடன் அண்ணா சீரியல் இன்று நிறைவடைகிறது.

Source link

Pothys: போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார் காலமானார்!

போத்தீஸ் நிறுவனர் காலமானார்

ஶ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து ஜவுளித் தொழிலைத் தன் தோளில் சுமந்து ஆரம்பித்து, திருநெல்வேலியில் போத்தீஸ் எனும் ஜவுளிக்கடையைத் தொடங்கி பின்னர் 2000களில் சென்னையில் தடம்பதித்து இன்று தமி்ழ்நாட்டின் பல ஊர்களிலும் அண்டை மாநிலங்களிலும் ஜவுளி சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்க அடித்தளமிட்ட போத்தீஸ் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பனார் (84)  இன்று காலை சென்னையில் காலமானார்.

இவரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஶ்ரீவில்லிப்புத்தூரில் நாளை நடைபெறுகிறது. சடையாண்டி மூப்பனார் மறைவால் இழந்து வாடும் மகன்களும், போத்தீஸ் நிறுவன உரிமையாளர்களான எஸ்.ரமேஷ், எஸ்.போத்திராஜ், எஸ்.முருகேஷ், எஸ்.மகேஷ், எஸ்.கந்தசாமி, எஸ்.அசோக் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த கே.வி.பி.சடையாண்டி மூப்பனார்?

சாதாரண ஏழை நெசவு தொழில் செய்த சாலியர் இனத்தில் பிறந்த K.V. போத்திமூப்பனார் சுமார்  1946 ஆம் ஆண்டு முதல் சைக்கிளில் தெருத்தெருவாக ஜவுளி வியாபாரம் செய்தவர். இவர் கலசலிங்க மூப்பனாரின் பேரனும், வைத்திலிங்க மூப்பனாரின் மகனாவார். போத்தி மூப்பனார் சன் அன் கோ என்ற பெயரில் தனது ஜவுளித் தொழிலை ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகில் 1949ல் கடை வைத்து ஆரம்பித்தார்.

அவரின் ஒரே மகன் சடையாண்டி மூலம் 2வது தலை முறையாகவும், 6 பேரன்களான ரமேஷ்,  போத்திராஜ், முருகேஷ், கந்தசாமி, மகேஷ், அசோக் மூலம் மூன்றாம் தலைமுறையாகவும் இந்த 6 பேரன்களின் வாரிசுகளான கொள்ளு பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் மூலம் நான்காவது தலைமுறையாகவும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் கொடி கட்டி பறக்கிறது.

முதல் தலைமுறையால் சுமார் 1949ல் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட்டில் முதல் கடை, மகன் சடையாண்டி மூப்பனார் 1977ல் ஆண்டாள் கோயில் அருகில்  இரண்டாவது கடை, ரமேஷ் மற்றும் சகோதர்களால் 1986 ல் திருநெல்வேலியில் 3வது கடை, படிப்படியாக படர்ந்து சென்னை,மதுரை, கோவை, திருவனந்தபுரம், பாண்டிச்சேரி, நாகர்கோயில், திருச்சி, பெங்களூர், சேலம் என 11 ஊர்களில் 16 கடைகளாக விரிவடைந்துள்ளது.

அடுத்த 17 வது கடை கொச்சினில் ( எர்ணாகுளம்).  இந்த வளர்ச்சி என்பது ஈடுபாடு கொண்ட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி, உறவுகளின் விசுவாச உழைப்பும் ,பணியாளர்களின் உழைப்பும், இந்த இமாலய வெற்றிக்கு பங்கு உண்டு.  போத்தீஸ் சாம்ராஜ்யத்தின் முதல் மன்னர் போத்தி மூப்பனாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டித்தெரு தான் சொந்த தெரு. அந்த தெருவில் இவரது பூர் வீக வீடு உள்ளது.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் எந்த ஊழியர் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்தாலும் கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்து கொள்வது வாடிக்கை. ஸ்ரீவில்லிபுத்தூரில்  திருமணம் என்றால் கண்டிப்பாக சடையாண்டி -வேலம்மாள் இருவரும் இணைந்து கலந்து கொள்வார்கள். இப்படி தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து எண்ணற்ற குடும்பங்களுக்கு வாழ்வு கொடுத்தார் சடையாண்டி மூப்பனார்.

Source link

Crime News Uttar Pradesh Two Girls Found Hanging From Tree UP Kanpur Allegedly Molested | கொடூரம்! உ.பி.யில் தூக்கில் தொங்கிய 2 சிறுமிகள்

Crime: உத்தரபிரதேசத்தில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு:
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள, ஒரு கிராமத்தில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் மது அருந்த வற்புறுத்தப்பட்டதாகவும், பின்னர் உள்ளூர் ஒப்பந்ததாரரின் 18 வயது மகன் மற்றும் 19 வயது மருமகனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்பந்ததாரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுமிகள் மரணம்:
சம்பவம் தொடர்பாக பேசும் குடும்பத்தினர், “புதன்கிழமை மாலையில் சிறுமிகள் விளையாடுவதற்காக வயல்வெளிக்கு சென்றனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவர்களை தேடி சென்றனர். அப்போது, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், இருவரும் மீட்கப்பட்டனர்.
சிறுமிகளை வலுக்கட்டாயமாக மது அருந்தச் செய்து, பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ பதிவுகளை எடுத்து வைத்துக் கொண்டு, சிறுமிகளை மிரட்டியுள்ளனர். இதனால், ஏற்பட்ட அவமானம் மற்றும் காயங்கள் காரணமாகவே சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என  காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

#WATCH | Kanpur,UP | Bodies of two girls found hanging from a tree in a village in GhatampurDCP Ravindra Kumar says, “On 28th Feb, information was received at Ghatampur PS that bodies of two girls were found hanging in village Baroli. On this information, police reached the… pic.twitter.com/XeT8g2VKhN
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 29, 2024

உறவினர்களால் நேர்ந்த கொடூரம்:
சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறையினர், “இரண்டு சிறுமிகளும் அவர்களது குடும்பத்தினரும் ஒப்பந்ததாரரால் நடத்தப்படும் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில்தான் தூரத்து உறவினர்களான செங்கல் சூளை ஒப்பந்ததாரர் ராம்ரூப் நிஷாத் (48), அவரது மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19) ஆகியோரால் அந்த சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களின் உடல்கள் அந்த சூளையிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறியவும், கூட்டு பலாத்கார குற்றச்சாட்டுகளை சரிபார்க்கவும் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.  குற்றம் சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீட்கப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

மேலும் காண

Source link

WPL 2024 Points Table Womens Premier League Points Table Team Standings RCB MI DC UPW GG

மகளிர் பிரீமியர் லீக் 2024:
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது.
டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயனட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2-வது சீசன் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், யு.பி.  ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இச்சூழலில், மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. அதன்படி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி மற்றும் 1 போட்டியில் தோல்வி என மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
அதேபோல், 2 போட்டிகள் விளையாடி 1 வெற்றி 1 தோல்வி என 2 புள்ளிகள் பெற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மூன்று போட்டிகள் விளையாடியுள்ள யுபி வாரியர்ஸ் அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்து 4 வது இடத்திலும், இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த குஜராத் ஜெயன்ட்ஸ் கடைசி இடத்தில் இருக்கிறது.
புள்ளிப்பட்டியல்:

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

புள்ளிகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2
2
0
4

மும்பை இந்தியன்ஸ்
3
2
1
4

டெல்லி கேப்பிட்டல்ஸ்
2
1
1
2

யுபி வாரியர்ஸ்
3
1
2
2

குஜராத் ஜெயன்ட்ஸ்
2
0
2
0

மேலும் காண

Source link

Banupriya quitted her school education because of bhagyaraj shares her old memories

நடிப்பும், நடனமும், அழகும், திறமையும் ஒன்று சேர்ந்த தென்னிந்திய நடிகைகளில் 80, 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை பானுப்ரியா. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பானுப்ரியா தன்னுடைய 17 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். தமிழில் அவர் அறிமுகமான படம் 1983ம் ஆண்டு வெளியான ‘மெல்ல பேசுங்கள்’ திரைப்படம்.
பானுப்ரியா:
தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் பானுப்ரியா தன்னுடைய நினைவாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் குறித்து பானுப்ரியா தன்னுடைய அனுபவம் ஒன்றை பகிர்ந்து இந்திருந்தார். இந்த தகவல் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பறிபோன பள்ளிப்படிப்பு:
நடிகர் பாக்யராஜ், பானுப்ரியாவின் நடனத்தை பார்த்து அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ளார். அப்போது பானுப்ரியா பள்ளியில் படித்து கொண்டு இருந்தார். பானுப்ரியாவை போட்டோ ஷூட் செய்து பார்த்த பாக்யராஜ், அவர் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்தை விட பானுப்ரியா  இளமையாக இருப்பதாக உணர்ந்ததால் அவரை அப்படத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
அதற்கு முன்னரே பள்ளி முழுவதும் தான் பாக்யராஜ் படத்தில் நடிக்க போவதாக சொல்லி இருந்த பானுப்ரியாவுக்கு அவர் படத்தில் இருந்து வெளியேற்றபட்டது மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவல் பள்ளியில் உள்ள அனைவருக்கும் தெரிய வரவே பானுப்ரியாவின் நண்பர்கள் அனைவரும் அவரை பயங்கரமாக கிண்டல் கேலி செய்துள்ளனர். அதனால் பானுப்ரியா பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டாராம். பெரும் போராட்டங்களுக்கு பிறகு தான் 1983ம் ஆண்டு அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

காதல் திருமணம்:
1998ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்காததால் கலிபோர்னியாவுக்கு சென்று திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கணவன் மனைவி இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பானுப்ரியா தன்னுடைய மகளுடன் வசித்து வருவதாகவும் வதந்திகள் பரவி வந்தன.
ஆனால் அவரின் குடும்ப வாழ்க்கை பற்றி பரவிய செய்திகள் அனைத்தும் உண்மையில்லை என தெரிவித்து இருந்தார் பானுப்ரியா. அவரின் கணவர் 2018ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது பானுப்ரியா தன்னுடைய தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். அவரின் மகள் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.  கணவர் இறந்த பிறகு மனதளவிலும் உடல் அளவிலும் வலிமை இழந்த பானுப்ரியாவுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆர்வம் கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்து இருந்தார். மீண்டும் பானுப்ரியாவை திரையில் பார்க்க அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் காண

Source link

Karur Corporation ordinary meeting and budget meeting was held today – TNN

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் வாயில் கறுப்பு துணி கட்டி, கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் சாதாரண கூட்டம் முடிந்தபின், பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. மாநகராட்சி வரவு, செலவு அறிக்கையை மேயர் கவிதா கணேசன் உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் தண்டபாணி மாநகராட்சி உட்பட்ட பேருந்து நிலையத்தில் சொந்த வசூலை மாநகராட்சியே செய்யலாம் என ஆலோசனை வழங்கினார். அதற்கு மாநகராட்சியில் போதிய ஆட்கள் இல்லாததால் தற்போது சுங்க வசூலை மற்றவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சியின் மேயர் கவிதா கணேசன் தெரிவித்தார். அதை தொடர்ந்து சில மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கையை முன்வைத்து பேசத் தொடங்கினர். அனைத்திற்கும் மாநகராட்சி மேயர், துணைமேயர், ஆணையர் உள்ளிட்டோர் தகுந்த பதிலை அளித்தனர்.

அதை தொடர்ந்து மாநகராட்சியின் துணை மேயர் பேசுகையில், தற்போது திருமாநிலையூர் முதல் t.செல்லாண்டிபாளையம் பகுதிகளில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருவதால் குடி தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பத்து நாட்களாக பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக ஆணையரிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து ஆணையர் விரைவாக அனைத்து இணைப்புகளும் சரி செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தார். அதை தொடர்ந்து மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் நாளை பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மாவட்டத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறிய நிலையில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கூட்டணி கட்சி மற்றும் திமுக  மாமன்ற உறுப்பினர், ஆணையர் உள்ளிட்ட இடையே மாதந்தோறும் காரசார விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த மாத நடைபெற்ற கூட்டத்தில் அது போல் ஏதும் நடைபெறவில்லை. அதேபோல் அனைத்து மாமன்ற உறுப்பினருக்கும் 2023- 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் புத்தகம் வழங்கப்பட்டது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டு உள்ளடக்கிய மாநகராட்சியாகும். இதில் இரண்டு மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் அவர்கள் இருவரும் இன்று மாமன்ற கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து, வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாமன்ற அதிமுக உறுப்பினர்கள் எந்த ஒரு கேள்வியோ, புகாரையோ எழுப்பவில்லை. மாறாக கருப்புத் துணியை வாயில் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அதேபோல் கூட்டம் முடிந்த பிறகு விறு விறு என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் வெளியேறினர். பின்னர் மாவட்ட நுழைவாயிலில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேலும் காண

Source link

Netflix seals vijay starrer venkat prabhu goat movie ott rights

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் கைபற்றியுள்ளது.
கோட்
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்‌ஷி செளதரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தந்தை மகன் என இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மேலும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக இப்படத்தின் டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

Our Thalapathy is the Greatest Of All Time 🔥🔥🔥🔥#GreatestOfAllTime #Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @thisisysr @actorprashanth… pic.twitter.com/SOgQSGHXEF
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023

கோட் படத்தின் முதல் இரண்டு ஷெட்யூல் முடிந்துள்ள நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. முன்னதாக தாய்லாந்து, இலங்கை, இஸ்தான்புல் , சென்னை , ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில்  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்தகட்டமாக ரஷ்யா மாஸ்கோவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதலாக கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
ஓடிடி ரிலீஸ்
கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்கில் வெளியாவதைத் தொடர்ந்து கோட் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும். இப்படத்தினை பெரும் தொகைக்கு நெட்ஃப்ளிக்ஸ் தளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தளபதி 69
கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். ஏற்கனவே தான் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக இருப்பதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார். கோட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் , ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. விஜய் அரசியலுக்கு வருவதால் இந்தப் படம் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க : Manjummel Boys: கண்மணி அன்போடு.. மஞ்சுமெல் பாய்ஸ் பார்த்து சிலிர்த்துப் போன கமல்ஹாசன்!
Thalapathy 69: விஜய்யை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? – தளபதி 69 படம் பற்றி வெளியான அப்டேட்!

மேலும் காண

Source link

Chennai Subhub Bomb attack: சென்னை அருகே பயங்கரம் – நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் திமுக பிரமுகர் மரணம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மேம்பாலத்தின் அடியில் சென்று கொண்டிருந்த திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் என்பவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அதோடு அவரது கை ஒன்றையும் துண்டாக வெட்டியுள்ளனர். இதில் அவரது இடது தோள்பட்டை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசியல் முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு போன்ற சம்பவங்களால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரே, வெடிகுண்டு வீசி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

வண்டலூர் மேம்பாலம் கீழ்பகுதியில் ஆராவமுதன் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.  இது நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பேருந்து நிலையத்தை பார்ப்பதற்காக தனது காரில் ஆராவமுதன் வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம  நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர். இதில் காரின் முன் பக்கம் முழுவதும் கண்ணாடி உடைந்தது . இதை பார்த்த ஆராவமுதன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது,  மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டியதில் கைதுண்டாக போனது . மேலும் தலை கை, கால் என பல்வேறு பகுதிகளில் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை  மீட்டு குரோம்பேட்டையில்  உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஆராவமுதன் உயிரிழந்தார். இதையறிந்த திமுகவினர் பலரும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Source link

இனி யாராலயும் தடுக்க முடியாது! மாநிலங்களவையிலும் மாஸ் காட்டப்போகும் பா.ஜ.க.!

இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று கீழ் சபை என அழைக்கப்படும் மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் மாநிலங்களவை தேர்தல் முடிவுகள்:

இரண்டாவது மேல் சபை என அழைக்கப்படும் மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.

கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவையில் பெரும் பங்காற்றிய 12 பேர், குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மாநிலங்களவையில் தற்போது, 5 இடங்கள் காலியாக உள்ளது. குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள ஜம்மு காஷ்மிரில் 4 இடங்களும் ஒரு நியமன இடமும் காலியாக உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களவை உறுப்பினர்களில் 68 பேரின் பதவிக்காலம் இந்தாண்டு நிறைவடைய உள்ளது. அதில், 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதம் நிறைவு பெறுகிறது.

56 மாநிலங்களவை இடங்களில் 41 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள முடிவுகள் தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

அசுர பலத்துடன் பாஜக:

240 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் ஐந்து நியமன உறுப்பினர்கள் உள்பட பாஜகவின் பலம் 97ஆக உயர்ந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 117ஆக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள சூழலில், மாநிலங்களவையில் பெரும்பான்மையை பெற 121 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே, பெரும்பான்மையை பெற பாஜக கூட்டணிக்கு இன்னும் 4 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல், மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் இருந்து வரும் பாஜகவுக்கு, மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்றுவது பாஜகவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

குறிப்பாக, ஊழல் மற்றும் கருப்பு பணம் தொடர்பான குடியரசு தலைவர் உரையானது எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. 2019ஆம் ஆண்டு வரை, நில சீர்திருத்தம் மற்றும் முத்தலாக் போன்ற சட்டங்களை மத்திய பாஜக அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இரண்டாவது ஆட்சி காலத்தில்தான், பாஜகவால் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற முடிந்தது.

மாநிலங்களவையிலும் பெரும்பான்மை:

2019ஆம் ஆண்டுக்கு பிறகும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் ரத்து போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாஜகவின் பலம் கூடுகிறது. மாநிலங்களவை தேர்தலின்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கலும் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால் இரண்டு மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் கூடுதலாக வென்றுள்ளது.

மாநிலங்களவையில் பாஜகவுக்கு மொத்தமாக 97 உறுப்பினர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சிக்கு 29 உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 உறுப்பினர்களும் திமுக, ஆம் ஆத்மி கட்சிக்கு தலா 10 உறுப்பினர்களும் உள்ளனர். பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தலா 9 உறுப்பினர்கள் உள்ளனர். பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கு 7 மாநிலங்களவை உறுப்பினர்களும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு 6 மாநிலங்களவை உறுப்பினர்களும் உள்ளனர்.

Source link

Madras High Court canceled the temporary selection list for the vacant posts of 245 Civil Judges in Tamil Nadu | Madras High Court: அதிர்ச்சி! சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தேர்வு பட்டியல் ரத்து

Civil Judge Exam: தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிவில் நீதிபதி தேர்வு:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12 ஆயிரத்து 037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்  நிலை தேர்வு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், தஞ்சை, வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்தது.
இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 4,5ஆம் தேதிகளில் மெயின் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற 472 பேருக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடந்தது.
இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் 245 பேர் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. இந்த நிலையில், 245 சிவில் நீதிபதிகளுக்கான தேர்ச்சி பட்டியலை ரத்து செய்ய கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
தேர்வு பட்டியலை ரத்து செய்த நீதிமன்றம்:
இந்தத் தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை, பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை பொது பிரிவில் சேர்த்தும், மீதமுள்ள விண்ணப்பதாரர்களை இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, காலிப் பின்னடைவுப் பணியிடங்களிலும், தற்போதைய காலியிடங்களிலும் சேர்த்து திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் என அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், கே.ராஜசேகர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க
Chennai Bomb attack: சென்னையில் பயங்கரம் – வெடிகுண்டு தாக்குதலில் திமுக பிரமுகர் படுகாயம்

ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் – சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

மேலும் காண

Source link

avm production reveals superstar rajinikanth riding vintage bike used paayum puli movie

பாயும் புலி படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய பைக்குடன் சூபபர்ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம்.
ஏ.வி. எம் அருங்காட்சியகம்
தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் ஏ.வி.எம் ஸ்டூடியோ பண்பாட்டு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வைத்தது . இதன்  தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக  உலக நாயகன் கமலஹாசன்,வைரமுத்து, நடிகர் சிவக்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய திரைப் பிரபலங்கள் மற்றும்  ஏ.வி.எம் குடும்பத்தின் உறுப்பினர்களும்  கலந்துகொண்டார்கள்.
பழமையான பொருட்கள்
இந்த அருங்காட்சியகத்தில் எம்.ஜி.ஆர்  திரைப்படங்களில் அணிந்த ஆடைகள், நடிகர் கமலஹாசன் அணிந்த ஆடைகள் முதலிய பொருட்கள்  பராமரிக்கப் பட்டுள்ளன. மேலும் பல்வேறு படங்களில் படத்தொகுப்பு ஒளிப்பதிவுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள்,கலைப்பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.
இது மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படங்களில் வெவ்வேறு  நடிகர்களால் பயன்படுத்தப்பட்ட 40 கார்கள், 20 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நீங்கே பார்க்கலாம். ஏ.வி.எம் ஸ்டுடியோவை நிறுவிய ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாயும் புலி படத்தில் ஓட்டிய பைக்

A treasured moment in time… one that you can relive @avmmuseum. Come visit the famed bike used by Superstar @rajinikanth in #PaayumPuli✨Video conceptualisation: @_iarjun#AVMProductions #AVMStudios #SuperstarRajinikanth #Paayumpuli pic.twitter.com/XBM28TGJ6B
— AVM Productions (@avmproductions) February 29, 2024

மேலும் ரஜினிகாந்த் 1983 ஆம் ஆண்ட் வெளியான பாயும்புலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் திரைப்படத்தில் அவர் ஓட்டிய சுஸுகி ஆர்.வி.90 ரக இருசக்கர வாகணம்  மற்றும் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியின் உருவத்தில் பயன்படுத்தியிருந்த சிலையும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிரமித்துப் போனார். தற்போது ரஜினிகாந்த் பாயும்புலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் திரைப்படத்தில் அவர் ஓட்டிய சுஸுகி ஆர்.வி.90 ரக இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது ஏ.வி.எம் நிறுவனம். இந்த புகைப்படத்தில் உள்ள பைக்கை ரஜினிகாந்த் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டியிருந்தார்.
வேட்டையன்
லைகா ப்ரோடக்‌ஷ்ன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ ஞானவேல் இந்தப் படத்தை இயக்குகிறார். அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர், ரானா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருநெவேலி, தூத்துகுடி , சென்னை , பாண்டிச்சேரி , மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தொடர்ந்து தற்போது ஆந்திரா கடப்பாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மேலும் காண

Source link

CM MK Stalin: நாளை முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை (01.03.2024) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள் என 7.772 லட்சம் பேர் தேர்வெடுத உள்ளனர்.  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.  “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்த கட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.

பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Indian Economy India GDP grows at 8.4 Percent Q3 FY 24 Growth 7.6 Percent Govt Data | India GDP Growth: எதிர்பார்ப்புகளை தாண்டி..! 3வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.4% எட்டி அசத்தல்

India GDP Growth: நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட, அதிக வளர்ச்சி கண்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஜிடிபி 8.4% வளர்ச்சி:
இந்தியாவின் பொருளாதாரத்தை குறிக்கும் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4 சதவிகிதமாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி ஆனது,  4.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “2023-24 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிலையான (2011-12) விலையில் ஜிடிபி ரூ 43.72 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ 40.35 லட்சம் கோடியாக இருந்தது. இதன்மூலம் 8.4 சதவிகித வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புகளை தாண்டி..!
கட்டுமானத் துறையின் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம் (10.7 சதவிகிதம்), அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் நல்ல வளர்ச்சி விகிதம் (8.5 சதவிகிதம்) ஆகியவை நடப்பு நிதியாண்டில் GDP வளர்ச்சியை உயர்த்தியுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருந்த நிலையில்,  இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக விரிவடைந்து வருவதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகள் காட்டுகின்றன. 2022-23 இல் 7.0 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில், 2023-24 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மதிப்பீடான 6.5 சதவிகிதத்தை விட அதிகமாகும். முந்தைய காலாண்டில் இது 7.6 சதவிகிதமாகவும், ஜூலை காலாண்டில் 7.8 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புதன்கிழமை, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) பொருளாதார நிபுணர் ஒருவர் பேசுகையில், 2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7-6.9 சதவீதத்திற்குள் விரிவடையும் என கணித்ததும் தவறாகியுள்ளது.
வளரும் பொருளாதாரம்:
அரசின் அறிக்கையின்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சியை முந்தைய மதிப்பீட்டான 7.2 சதவிகிதத்திற்கு எதிராக 7 சதவிகிதமாக மாற்றியது. 2023-24 ஆம் ஆண்டில் தற்போதைய விலையில் பெயரளவு ஜிடிபி அல்லது ஜிடிபி ரூ.293.90 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2022-23ல் ரூ.269.50 லட்சம் கோடியாக இருந்தது, இதன் மூலம் வளர்ச்சியானது 9.1 சதவிகிதத்தை காட்டுகிறது. மறுபுறம், ஜனவரி 2023 இன் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, ​​ஜனவரி 2024 இல் எட்டு முக்கிய தொழில்களின் (ஐசிஐ) ஒருங்கிணைந்த குறியீடு 3.6 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. அதன்படி, நிலக்கரி, எஃகு, சிமெண்ட், இயற்கை எரிவாயு, மின்சாரம் மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி ஜனவரி 2024 இல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும் காண

Source link

UN warns of Imminent famine in northern gaza as death toll nears 30000

பாலஸ்தீன பகுதியான காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறதா இஸ்ரேல்?
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்க உள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
போரால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றவும் காசாவில் அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்லவும் இடைக்கால போர் நிறுத்தம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்னும் ஒரு சில நாள்களில் அடுத்தகட்ட தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்:
5 மாதங்களாக நீடித்து வரும் போரில் 5 வார காலத்திற்கு இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், ஒரே நாள் இரவில் காசாவில் இஸ்ரேல் வீசிய குண்டுகளால் 91 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்தியஸ்தர்கள் தரப்பில் பேசுகையில், “ஒப்பந்தத்தை இறுதி செய்யும் தருவாயில் உள்ளோம். இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களையும் காசாவில் பிடித்துவைக்கப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளையும் விடுவிக்கவும் பேசி வருகிறோம்” என்றார்.
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி இதுகுறித்து கூறுகையில், “இன்றுக்குள் இடைக்கால போர் நிறுத்தம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கத்தார் நம்புகிறது” என்றார்.
ஏற்கனவே, போரால் நிலைகுலைந்துள்ள காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. குறிப்பாக, உணவு பொருள் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய உலக உணவு திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், “எதுவும் மாறவில்லை என்றால் வடக்கு காசாவில் பஞ்சம் ஏற்படுவது நிச்சயம்” என்றார்.
இதையும் படிக்க: பாலஸ்தீன விடுதலைக்காக உயிரைவிட்ட அமெரிக்க விமானப்படை வீரர்… இஸ்ரேல் தூதரகம் முன்பு பரபரப்பு!

மேலும் காண

Source link

individual most matches career indian premier league ms dhoni csk

ஐ.பி.எல் தொடர்:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் யார்? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
அதிக போட்டிகளில் விளையாடிய தல தோனி:
இந்திய அணிக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியிலும், கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளிலும் அறிமுகமானவர் எம்.எஸ்.தோனி. அந்தவகையில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார். அதன்படி தோனி தான் இதுவரை நடைபெற்றுள்ள ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
அதேபோல் ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தோனி இதுவரை 250 போட்டிகளில் விளையாடி ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரர் ரோகித் சர்மா.
அதாவது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் விளையாடி உள்ளார். அதன்படி, இதுவரை 243 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் ரோகித் சர்மா. மூன்றாவது இடத்தில் இருப்பவர் தினேஷ் கார்த்திக். கிங்ஸ் 11 பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளில் விளையாடியுள்ளார். அதன்படி, 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடிய வரும் இவர் 242 போட்டிகள் ஆடியிருக்கிறார்.
கோலிக்கு எந்த இடம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக  விளையாடி வரும் விராட் கோலி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதன்படி விராட் கோலி இதுவரை 237 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடிய இவர் இதுவரை 226 போட்டிகள் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

மேலும் காண

Source link

hollywood stand up comedian and comedy actor Richard Lewis passes away due to cardiac arrest | Richard Lewis: மாரடைப்பால் காலமான பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர்

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ரிச்சர்ட் லூயிஸ் உயிரிழந்துள்ளார்.
ரிச்சர்ட் லூயிஸ் (Richard Lewis)
1947 ஆம் ஆண்டு ப்ரூக்லினில் பிறந்தவர் ரிச்சர்ட் லூயிஸ். நியூயார்க்கில் இருக்கும் பல்வேறு கிளப்களில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்திய ரிச்சர்ட் லூயிஸ் காமெடி நிகழ்ச்சிகளின் வழியாக திரையில் அறிமுகமானார். பின் திரைப்படங்களில்  நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கிய இவர் ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக மாறினார்.

We are heartbroken to learn that Richard Lewis has passed away. His comedic brilliance, wit and talent were unmatched. Richard will always be a cherished member of the HBO and Curb Your Enthusiasm families. Our heartfelt condolences go out to his family, friends and all the fans… pic.twitter.com/tNaQEqzhF1
— HBO (@HBO) February 28, 2024

வயது மூப்பின் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரிச்சர்ட் இன்று லாஸ் எஞ்சல்ஸில் இருக்கும் தனது வீட்டில் காலமானார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.  ரிச்சர்ட் லூயிஸின் இறப்பு தொடர்பாக அவரது  விளம்பரதாரர் ஜெஃப் ஆபிரகாம் அறிக்கையில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். ரிச்சர்ட் லூயிஸின் இறப்புக்கு ஹாலிவுட் திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் காண

Source link

Tamil Nadu Sharvanika Gold medal and Raghav Silver medal in commonwealth Chess Championship game

2023-24ஆம் ஆண்டு காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் ஷர்வானிகா (தங்கம்) மற்றும் ராகவ் (வெள்ளி) பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி:
ஹட்சன் செஸ் அகாடமியைச் சேர்ந்த 8 வயது ஷர்வானிகா மற்றும் 14 வயது ராகவ் ஆகியோர் மலேசியா செஸ் ஃபெடரேஷன் (MCF) சமீபத்தில் நடத்திய காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் 2023-24ல் வெற்றி பெற்றுள்ளனர். 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஷர்வானிகா தங்கப் பதக்கத்தையும், ராகவ் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 5 கூட்டமைப்புகளைச் சேர்ந்த 18 வீரர்கள் பங்கேற்ற போட்டியில் ஷர்வானிகா 2 டிராவுடன் 9 புள்ளிகளுக்கு 8 புள்ளிகளைப் பெற்றார் , ராகவ் 6 கூட்டமைப்புகளைச் சேர்ந்த 19 வீரர்களில் 4 டிராக்களுடன் 9 க்கு 7 புள்ளிகளைப் பெற்றார்.
சாதனை படைத்த வெற்றியாளர்களை பாராட்டிய ஹட்சன் செஸ் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட்மாஸ்டர் வி விஷ்ணு பிரசன்னா, “எங்கள் மாணவர்களான ஷர்வானிகா மற்றும் ராகவ் மனதைக் கவரும் செயல்திறனால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எங்கள் அகாடமிக்கு இது ஒரு முக்கியமான சந்தர்ப்பம். இது எங்கள் மாணவர்களின் திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமல்ல, எங்கள் பயிற்சியாளர்களின் திறமையையும் பிரதிபலிக்கிறது. இந்த சாதனையை சாத்தியமாக்கிய அமைப்பாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு Hatsun Sports Academy தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அகாடமி இளம் திறமைகளை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது மற்றும் எதிர்கால போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை நோக்கி செயல்படும். காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் பல்வேறு வயது பிரிவுகளில் வீரர்களின் பங்கேற்பை மலேசியா  செஸ் ஃபெடரேஷன் (MCF) ஏற்பாடு செய்தது.
மலேசியாவின் வரலாற்று நகரமான மெலகாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மதிப்புமிக்க பட்டங்களுக்காக ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி பிப்ரவரி 28 ஆம் தேதி முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Kilambakkam Bus Stand: ஹாப்பி! ரூ.40 இருந்தால் போதும் சென்னையில் எங்கும் பயணிக்கலாம்! கிளாம்பாக்கத்தில் புதிய சேவை!

மேலும் காண

Source link

Dhrishyam Remake: ஹாலிவுட்டில் கலக்கப்போகும் த்ரிஷ்யம்: மோகன்லால், கமல் வரிசையில் நடிக்கப்போவது யார்?

முன்னதாக கொரிய மொழியில் ரீமேக் செய்வதற்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஆங்கிலத்தில் இப்படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

த்ரிஷ்யம்

கடந்த 2013ஆம் ஆண்டு  மலையாள மொழியில் வெளியான படம் த்ரிஷ்யம். ஜீது ஜோஸஃப் இயக்கி மோகன்லால் மீனா ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்தார்கள். ஒரு சாமானியன் எதிர்பாராத ஒரு நிகழ்வில் இருந்து தனது குடும்பத்தைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே த்ரிஷ்யம் படத்தின் கதை.

மலையாளத்தின் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதனால் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. கமல்ஹாசன், கெளதமி, நிவேதா தாமஸ் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியில் அஜய் தேவ்கன் – ஷ்ரேயா நடிப்பில்  த்ரிஷ்யம் வெளியானது. கிட்டத்தட்ட ஐந்து மொழிகளிலுமே ஜீது ஜோசப் இப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

கொரிய ரீமேக்

த்ரிஷ்யம் படத்தின் உரிமத்தை வைகாம் நிறுவனத்தின் உரிமையாளரான குமார் மங்கத் பாதக் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இந்தப் படத்தை கொரிய மொழியில் ரீமேக் செய்வதற்கான ஒப்பந்தம் நடந்து முடிந்தது. கொரியத் திரைப்பட இயக்குநரான கிம் ஜீ வுன் மற்றும் பாரசைட் திரைப்பட நடிகரான சாங் காங் ஹோ ஆகியவர்களால் தொடங்கப்பட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் ஆந்தலாஜி ஸ்டுடியோ இந்தப் படத்தை கொரிய மொழியில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தைப் பெற்றது. கொரிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் படம் த்ரிஷ்யம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மொழியில் ரீமேக்

இப்படியான நிலையில் த்ரிஷ்யம் படம் ஆங்கில மொழியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கல்ஃப் ஸ்ட்ரீம் என்கிற தயாரிப்பு நிறுவனம் வெளியிட இருக்கிறது.

Source link

Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே”

CM MK Stalin on Sterlite Case: ”ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே”  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!” என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து… pic.twitter.com/NqHOGWcTVQ
— M.K.Stalin (@mkstalin) February 29, 2024

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை:
கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்திய நாதன் எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால், “20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சுழல் மாசை ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
“ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது”
இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு உள்ளது என்ற ஆலையின் வாதத்தை ஏற்க முடியாது. உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆலையால் செய்யப்பட விதிமுறை மீறல்கள் அடிப்படையில் உயர்நீதிமன்றம் மற்றும் அரசால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது கடைமையை செய்ய தவறி விட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காப்பர் கழிவுகளை கையாண்ட முறை மிகவும் கவலைக்குரியது. 2013 முதல் உச்ச நீதிமன்றம் பல வாய்ப்புகளை கொடுத்தும் கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் தவறிவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மக்களுடைய சுகாதாரம் மிக முக்கியமானது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி மேற்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..

மேலும் காண

Source link

கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரி! ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கமாண்டோக்கள் போராட்டம்!

மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்தாண்டு மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.

மணிப்பூரில் தொடரும் வன்முறை சம்பவங்கள்:

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் நடந்த இனக்கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், இங்கும், அங்குமாய் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் காவல்துறை உயர் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரம்பை தெங்கோல் என்ற மெய்தி அமைப்பு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம், இம்பால் கிழக்கில் உள்ள கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மொய்ரங்தம் அமித்தின் வீட்டுக்குள் ஆயுதம் ஏந்திய பெரும் கும்பல் சென்றது.

பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை திருடி சென்றதாக செக்மாய் பகுதி அரம்பை தெங்கோல் அமைப்பின் தலைவர் ராபினை காவல்துறை கைது செய்தது. இவரை விடுவிக்க கோரிதான், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வீட்டில் 200க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர்.

ஆயுதங்களை துறந்து கமாண்டோக்கள் போராட்டம்:

அப்போது, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மொய்ரங்தம் அமித்தையும் அவரது பாதுகாவலர் ஒருவரையும் ஆயுதம் ஏந்தியவர்கள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர், குவாகீதெல் கோன்ஜெங் லைகை பகுதியில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ராஜ் மெடிசிட்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரி கடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணிப்பூர் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகள், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "காவல்துறை அதிகாரிகளின் மன உறுதி பாதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசு சாரா அமைப்பும் எங்களுக்கு ஆதரவாக வரவில்லை. எங்களின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளது. விஷமிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எங்களுடைய அதிகாரிகளே எங்களை ஆதரிக்க மறுக்கிறார்கள். தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரியும் மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்தான்" என்றார்.

இதையும் படிக்க: Bill Gates: ஒரு சாயா போடுங்க: இந்தியாவின் புதுமையில் ‘டீ’ -யை ரசித்த பில்கேட்ஸ் – வீடியோ வைரல்

Source link

TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. தவிக்கும் மக்கள்..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :

இன்றும் நாளையும் (பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் தேதி) தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரொட்டில் 38.4 டிகிரி செல்சியஸும் மதுரையிலும் 37 டிகிரி செல்சியஸும்  பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.3  டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

29.02.2024:  மன்னார்    வளைகுடா மற்றும்   அதனை   ஒட்டிய  குமரிக்கடல்  பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Source link

“மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது”

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

மேலும் காண

Source link

Team India Test Performance In Asia Last 12 Years India Won 20 Consecutive Test Series

இந்திய கிரிக்கெட் அணி:
இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டிற்குத்தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியையும் பெரும் ரசிகர்கூட்டம் மைதானத்திற்கு சென்று பார்த்தது. அதேபோல் தொலைக்காட்சி மற்றும் செல்போன் மூலமாக கிரிக்கெட் போட்டிகளை பார்த்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
அதற்கான காரணம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பதால் தான். அதற்கு ஏற்றார் போல் இந்திய கிரிக்கெட் அணியும் தங்களின் செயல்பாடுகள் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கோப்பையை தவறவிட்டாலும் எல்லா தொடர்களிலும் சிறப்பாகவே விளையாடி வருகிறது.
ஆசியாவில் இந்திய அணியின் ஆதிக்கம்:
இந்நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னதாகவே தொடரை கைப்பற்றிவிட்டது. அதன்படி கடந்த 12 வருடங்களாக உள்நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையாத அணி என்ற பெருமையை தக்கவைத்தது. இதனிடையே, மார்ச் 7 ஆம் தேதி இந்தியா  மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

India in the Test series in Asia in the last 12 years:- 59 Tests – 46 Wins.- 8 Draw.- 5 Losses.India won 20 consecutive series without losing any…!!! 🤯🇮🇳 pic.twitter.com/tyKq8GidQJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 29, 2024

அதாவது கடந்த 12 வருடங்களாக ஆசியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 20 முறை தொடரை வென்று இந்திய அணி அசத்தியிருக்கிறது. அதாவது கடந்த 12 வருடங்களில் இந்திய கிரிக்கெட் அணி ஆசியாவில் மட்டும் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 46 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோல், 8 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது. 5 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

Source link

actress vadivukkarasi remembers when rajinikanth fans blocked train and forced her to apologize for her dialogue in arunachalam movie

வடிவுக்கரசி
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கதநாயகியாக அறிமுகமாகி, பின் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மூத்த நடிகையாக வருபவர் நடிகை வடிவுக்கரசி. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. திரைப்படங்களில் மட்டுமில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவர்  நடித்த நெகட்டிவ் ரோல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை. எந்த ஒரு ஆண் வில்லனுக்கு நிகராகவும் இவரது கதாபாத்திரங்கள் நம்மை மிரள வைத்திருக்கின்றன. ஆனால் அப்படி அவர் வில்லியாக வடிவுக்கரசி நடித்த ஒரு படம், அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அருணாச்சலம் படத்தால் நடந்த விபரீதம்
ரஜினிகாந்த் நடித்த மிஸ்டர் பாரத், வீரா, அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. அருணாச்சலம் படத்தில் கூன் விழுந்த 85 வயது கிழவியாக பார்வையிலேயே மிரள வைக்கும் கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினிகாந்தை வெறுத்து ஒதுக்கும் ஒரு கதாபாத்திரமாக இவரது கதாபாத்திரம் இருந்தது.
இந்நிலையில் முன்னதாக தனியார் ஊடகத்துக்கு தான் அளித்த நேர்க்காணலில் பேசிய வடிவுக்கரசி, அருணாச்சலம் படத்தின்போது தனக்கு நிகழ்ந்த தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
கைதட்டி பாராட்டி ரஜினிகாந்த்
”அருணாச்சலம் படத்தில் நான் படியில் இறங்கியபடியே ரஜினியை பார்த்து ஒரு வசனம் பேச வேண்டும். 85 வயது கிழவி என்பதால் என்னுடைய தலையும் நடுங்க வேண்டும், அதே போல் நான் கையில் வைத்திருக்கும் கோலும் நடுங்கியபடி இந்த வசனத்தை பேச வேண்டும். இதற்கு முன்பாக படத்தின் வசனகர்த்தா கிரேஸி மோகன் என்னிடம் வந்து வசனத்தை சொன்னார்.
‘அனாதைப் பயலே’ என்று நான் ரஜினியை பார்த்து சொல்ல வேண்டும் என்று அவர் சொன்னதும், நான் அதிர்ந்து போய் யாரை ரஜினியவா என்று கேட்டேன். “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, அது அனுமதிக்கப்பட்ட வசனம் தான்” என்று அவர் என்னிடம் சொன்னார். நான் “அது இல்லை சூப்பர் ஸ்டாரைப் பார்த்து எப்படி அப்படி சொல்வது?” என்று தயங்கினேன். அதற்கு அவர் “அதெல்லாம் அவர் ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டார்” என்று என்னை வசனம் பேசச் சொன்னார்.
அதன் பிறகு நான் படிகளில் இறங்கியபடியே ’அனாதைப் பயலே’ என்று வசனத்தை பேசி முடித்தேன். பேசி முடித்ததும் என்னுடைய கைகள்  நடுங்கத் தொடங்கின. ஆனால் நான் பேசி முடித்த அடுத்த நொடி ஓரத்தில் இருந்து சத்தமாக கைத்தட்டல் கேட்டது. திரும்பி பார்த்தபோது ரஜினிகாந்த் கைதட்டிக் கொண்டிருந்தார். அவர் கைதட்டியதும் செட்டில் இருந்த அத்தனை பேரும் கைதட்டத் தொடங்கினார்கள்.
ரஜினிகாந்த் என்னிடம் வந்து என் தோளைப் பிடித்து “எப்படி இவ்வளவு எதார்த்தமா நடிக்கிறீங்க?” என்று கேட்டார். நான் “அது இல்லை.. அந்த வசனம்” என்று தயங்கினேன். “வசனம் எல்லாம் பிரச்சனை இல்லை.. எப்படி இவ்வளவு அருமையா நடிக்கிறீங்க?” என்று ரஜினி கேட்டார். மனோரமா ஆச்சி, கவுண்டமணி ஆகியவர்கள் சிங்கிள் ஷாட்டில் நடிக்கும்போது மக்கள் கைதட்டி பாராட்டுவதைப் பார்த்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்று நான் ஏங்கி இருக்கிறேன். ஆனால் எனக்கு மக்களின் பாராட்டைவிட சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாராட்டு கிடைத்தது மிகப்பெரிய விஷயம்” என்று கூறினார்.
ரயிலை மறித்து மன்னிப்பு கேட்கவைத்த ரசிகரகள்

ரஜினியிடம் பாராட்டுக்களைப் பெற்ற வடிவுக்கரசிக்கு அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றொரு அனுபவத்தை ரஜினி ரசிகர்கள் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து பேசிய வடிவுக்கரசி  “அதன் பிறகு படம் வெளிவந்த பின் ஒருநாள் திண்டுக்கல்லில் இருந்து சென்னை திரும்ப காலை 11 மணி ரயிலில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் டிடிஆர் வந்து என்னை கொஞ்சம் வெளியே வரச் சொன்னார். ஒருவேளை சீட் நம்பர் மாறி ஏறிவிட்டேனா என்கிற குழப்பத்தில் நான் அவருடன் சென்றேன்.
டிடிஆரிடம் கேட்டபோது அவர் “வெளியே ரஜினி ரசிகர்கள் எல்லாம் நிக்குறாங்க, நீங்க அவரை ஏதோ திட்டினீங்களாம், அவங்ககிட்ட வந்து மன்னிப்பு கேட்கனும்னு சொல்றாங்க” என்றார். நான் வெளியே சென்று பார்த்தபோது பெரிய கும்பல் நின்றிருந்தது. நான் பேசியது வசனம் என்று சொல்லி புரியவைக்க முயற்சித்தேன் .ஆனால் அதைக் கேட்கும் நிலை யாரும் இல்லை.
நான் டிடிஆர் பின்னால் நின்றபடி அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். என் வாய் சும்மா இல்லாமல் “ரகுவரன் மட்டும் ரஜினியை திட்டுகிறார், அதற்கெல்லாம் மன்னிப்பு கேட்கச் சொல்லாமல் என்னை மட்டும் கேட்க சொல்கிறீர்கள்” என்றுவிட்டேன். “அதுதான் அவரை தலைவர் போட்டுத் தாக்குவாரே” என்று கூட்டத்தில் இருந்து பதில் வந்தது. சரி என்று சமாளித்துவிட்டு நான் உள்ளே வந்தேன், நான் மன்னிப்பு கேட்டபின் ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் எழுந்து வழிவிட்டார்கள். இந்த நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்று அவர் கூறினார்.
சிவாஜியில் சாந்தமான ரசிகர்கள்

இந்த சம்பத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் ரஜினி தாயாக நடித்தார் வடிவுக்கரசி. அருணாச்சலம் படத்தில் ரஜினியை திட்டியதற்காக ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த கோபம் இந்த படத்திற்கு பிறகு கொஞ்சம் தணிந்தது என்று சொல்லலாம்.

மேலும் காண

Source link

Adavalleeswarar Temple Villupuram Munnur Guru Peyarchi Sthalam Marriage Problems Solution TNN

முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில்
தமிழக வரலாற்றில் தடம்பதித்தது இந்த முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில். மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைக் காண, குரு பெயர்ச்சி அன்று செல்ல வேண்டிய மிக சிறந்த கோவில் இது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர் திருத்தலம்.

நவக்கிரகங்களில் சுபகிரகமாகத் திகழ்பவர் பிருகஸ்பதி என்று வணங்கப்படும் குருபகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆச்சார்யனாக விளங்கும் குரு பகவான் நான்கு வேதங்களிலும் கரை கண்டவர். சீலத்தினாலும் கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர். முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம் குரு பகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது. தேவர்களேயானாலும் கர்வம்கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும் தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார் எனச் சொல்லப்படுகிறது

குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவவலிமைகளை மீண்டும் பெறலாம் என உபாயம் கூறி அருளினார். பிரம்மதேவனின் ஆலோசனையை ஏற்ற குருபகவான் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தாராம். நவக்கிரகங்களில் முழுமையான சுப பலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து தென் திருக்கயிலாயம் என்றும் பூவுலகின் கயிலை என்றும் ஈரேழு பதினான்கு உலகத்தவராலும் பக்தியோடு பூஜிக்கப்பட்டு வருவதாக தலபுராணம் தெரிவிக்கின்றது.

சங்க கால இலக்கியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் பத்துப்பாட்டில் நான்காவதாகக் குறிக்கப்படுவது சிறுபாணாற்றுப் படை என்னும் இலக்கியமாகும். இது ஒய்மா நாட்டை ‘கிடங்கல்’ என்னும் கோட்டையிலிருந்து செங்கோல் தவறாமல் அரசாண்ட மன்னன் நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நல்லூர் நத்தத்தனார் என்பவரால் பாடப்பட்ட இலக்கியமாகும். இந்நூலில் அண்ணல் யானை அருவிதுகள் அவிப்ப நீறடங்கு தெருவின் அவன் சாறயர் மூதூர் (சிறுபாணாற்றுப்படை பா.200-1) என்று பாடப்பெற்ற மூதூரில் (தற்போதைய முன்னூர்) உள்ள ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் தனிச்சந்நிதியாக ஆறு திருமுகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசிவசுப்ரமணியராக மயில் மீது அமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகப் பெருமான். நல்லியக்கோடன் மீது எதிரிகள் போர் தொடுத்தபோது இம்முருகப் பெருமானின் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த தாமரை மொட்டுக்கள் முருகனின் திருவருளால் வேலாக மாறி எதிரிகளின் சேனை வெள்ளத்தை வதைத்து மீண்டது. இதனால் மன்னன் நல்லியக்கோடன் முன்னூர் முருகப் பெருமானுக்கு தினசரி வழிபாடுகள் செய்யக் கொடைகள் அளித்து வெற்றிவேல் பரமனுக்கு நன்றி செலுத்தியுள்ளார்.

சம்புவராயர் காலத்து வரலாற்றுத் தொடர்பு
நல்லியக்கோடன் பெற்ற வெற்றியின் நினைவாக இன்றும் இத்தலத்தில் செவ்வேள்பரமனுக்கு வேல் பூஜைத் திருவிழா, சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது. சங்க காலத்துத் தொன்மையும், பல்லவர் காலத்துச் சமயச் சிறப்பும், சோழர் காலத்து கலைச் சிறப்பும், சம்புவராயர் காலத்து வரலாற்றுத் தொடர்பும், காடவராயர் காலத்து கல்வெட்டுத் தொடர்பும் கொண்ட மிகவும் புராதனமான திருத்தலம் முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருத்தலமாகும். சோழ மன்னன் குலோத்துங்கன் எம்பெருமானுக்கு அன்பு பணிவிடைகள் செய்து வழிபட்டபோது ஈசன் தில்லையம்பலத்தில் ஆடிய ஆனந்த நடனத்தைக் காண வேண்டும் என்று பக்தியோடு வேள்வி செய்ததினால் அரசனை மகிழ்விக்க எம்பெருமானே அற்புதக் காட்சி தந்து தன் தேவியுடன் ஆனந்த நடனமாடியதால் இத்தலத்தின் ஈசனுக்கு ஆடவல்லீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதாகத் தல வரலாறு தெரிவிக்கின்றன. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை பிரகன்நாயகியின் அருள் ததும்பும் திருமுக தரிசனம் இங்கு வழிபடும் பக்தர்களின் விழிகளில் நீங்காமல் நிலைத்து விடுகிறது.

இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தலத்தின் வரலாறு
புராதன காலத்தில் முன்னூற்று மங்கலம் எனப் புகழ்பெற்ற இத்தலம் காலப்போக்கில் மருவி தற்போது முன்னூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் உள்ள மிகப் பழமையான கல்வெட்டுகளில் இத்தலத்தின் ஈசன் ஆடவல்ல நாயனார், திருமூலத்தானமுடைய மகாதேவர், விஸ்வேஸ்வரர் என்னும் திருநாமங்களுடன் மன்னர்களின் காலத்தில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. பிறந்தால் முக்தி என்று போற்றப்படும் திருவாரூர் தியாகேசர் திருச்சன்னிதி பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இத்தலத்தின் கல்வெட்டுகளிலும் உள்ளன. இத்திருக்கோயிலில் உள்ள இரண்டு புடைப்புச் சிற்பத் தொடர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் துறையினரால் 1966-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப் புராதனமான இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென் திசை நோக்கி எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் எளிதில் காண முடியாத அரிய தரிசனம் ஆகும். ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷமிருப்பவர்களுக்கும் கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும் அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது.

அரிய திருக்காட்சியாக மேற்குத் திசை நோக்கி எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி
திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை
சனகாதி முனிவர்களுக்கு மௌன யோக நிலையில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவவலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்புலத்தை நோக்கியிருப்பதாலும் மிகச் சிறந்த குருதோஷப் பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது. இத்தலத்தில் அரிய திருக்காட்சியாக மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி யுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது. காஞ்சி மகாபெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் திருவலம் சிவானந்த மௌனகுரு சுவாமிகளும் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி ஸ்ரீ ஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீ பிருகன்நாயகியையும் தரிசித்துள்ளனர்.ஆன்மீகப் பொக்கிஷமான இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈசன் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீபிரகன் நாயகியையும் தரிசிக்க குருவருளோடு திருவருளும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெறலாம் என கூறப்படுகிறது.

மேலும் காண

Source link

Tamil Nadu BJP constitutes team to negotiate and coordinate alliance parties in the state

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
ஆனால், பா.ஜ.க.வுக்கு தமிழ்நாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியிருப்பது பா.ஜ.க.வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், அது தோல்வியில் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
புது கட்சிகளை குறிவைக்கும் தமிழ்நாடு பாஜக:
இருப்பினும், எப்படியாவது கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்கும் முனைப்பில் பா.ஜ.க. இருந்து வருகிறது. ஆனால், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இரு கட்சிகளை தவிர்த்து பாஜக கூட்டணியில் புதிதாக யாரும் இணையவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு அரசியல் கட்சிகளை கூட்டணிக்காக இணைத்து பேச்சுவார்த்தை நடத்தவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  மாநில அளவிலான இந்த குழுவில் 6 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவில், பாஜக முன்னாள் மாநில தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பரபரக்கும் அரசியல் களம்:
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், திமுக தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவை தொகுதியும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த தொகுதிகள் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில், பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: திமுக காணாமல் போகும் என்றவர்கள் தான் காணாமல் போய் உள்ளார்கள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

மேலும் காண

Source link

CM MK Stalin: எந்தத் திட்டத்தை கொண்டு வந்தீங்க; எதை தடுத்தோம் – பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் போதுமான அளவு ஒத்துழைப்பு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவது,  ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது “தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசிடம் ஒத்துழைப்பு இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளை தாண்டி தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்.” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியில் இந்தக் கருத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,” தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர். அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டித் திறப்பதற்குத் தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்குத் தடையாக இருந்தோமா? ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களுக்கு நிலம் ஒதுக்காமல் இருந்தோம் என்பதைச் சொல்லட்டும். பொத்தாம் பொதுவாகக் குற்றம் சாட்டுகிறார் பிரதமர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பில்லாத பேச்சு

”நீட் தேர்வை எதிர்க்கிறோம். ஏழை மக்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைக்கும் பலிபீடம் அது. அதனால் அதை எதிர்க்கத்தான் செய்வோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்விச் சாலையில் தடைக்கல் எழுப்புகிறார்கள். அதை எதிர்க்கத்தான் செய்வோம். மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தோம். உழவர்களை, நிலத்தில் இருந்து விரட்டுவது அது. குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மையினர்க்கும் இலங்கைத் தமிழர்க்கும் எதிரானது. எதிர்க்கிறோம். எதை எதிர்க்கிறோமோ, அதை வெளிப்படையாகச் சொல்லி விட்டுத்தான் எதிர்க்கிறோம். ஆனால், ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியையும் தராமல், கடன் வாங்க நினைத்தால் அதையும் தடுத்து, வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடி அவர்களுக்கு தி.மு.க.வைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர். தி.மு.க.வை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் தமிழ்நாட்டு அரசியல் வரலாறு.

அவரது பாணியில் பா.ஜ.க.வே இருக்காது என நான் சொல்ல மாட்டேன். எங்களைத் தலைவர் கலைஞர் அப்படி வளர்க்கவில்லை. ஜனநாயகக் களத்தில் நின்று ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்படும் உரிமை பா.ஜ.க.வுக்கு உண்டு. கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்கத் தெரியாத பா.ஜ.க., வருங்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாகவாவது இருக்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்.” என்று பிரதமரின் செயலுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், “பா.ஜ.க. அரசின் வஞ்சகச் செயல்களைப் பட்டியலிட்டு மக்களிடம் பரப்புங்கள். மக்களுக்கு அனைத்தும் தெரியும். அவர்களுக்கு நினைவூட்டும் கடமைதான் நமக்கு உண்டு. புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்று சொல்லத்தக்க வகையில் அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கட்சித் தலைவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகத் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிக் கட்சிகளை பா.ஜ.க. தொல்லை செய்து வருவதைப் பார்க்கும்போது நம்முடைய அணியின் வெற்றி அகில இந்தியா முழுமைக்கும் உறுதியானதாகவே உணர முடிகிறது. ” என்று கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுத்தியுள்ளார்.

Source link

Former PM Morarji Desai: வாழ்நாளில் 24 முறை மட்டுமே பிறந்தநாள் கொண்டாடிய மொரார்ஜி தேசாய்.. ஓர் அலசல்..

காந்திஜியின் தீவிர தொண்டர் என்று பெயர் எடுத்தவர் மொரார்ஜி தேசாய். அவர் நமது நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் ஆணையை நேரடியாகப் பிறப்பித்து, அகில இந்தியாவையே அதிர வைத்தவர்.

1975 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது, நமது நாட்டில் அவசர நிலைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார்.  வரலாறு இந்த அவசரநிலைத் தருணங்களை இருண்ட காலம் என்று பதிவு செய்திருக்கிறது.

1977 ஆம் ஆண்டு அவசரநிலைச் சட்டம் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. அவசர நிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் (மெயின்டனன்ஸ் ஆப் இன்டெர்னல் செக்யூரிட்டி ஆக்ட் ) பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன் பரபரப்பான அரசியல் களம் கண்டு வந்த இவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு தலைவருக்கும் என தனித்தனியே குணாதிசயங்களும் அடையாளங்களும் உண்டு. ஒரே அமைப்புக்குள் தனித்தனி சித்தாந்தங்களோடு ஒற்றுமைப்படாமல் முட்டி மோதிக் கொள்ளும் பண்பு நலன் படைத்தவர்கள் அவர்கள்.

ஆனால் அவசரநிலைக் காலத்து அதிரடிகளும், சிறைவாசத்துச் சிந்தனைகளும் அவர்களுடைய அனைத்து வேற்றுமையும் வெறுத்து ஒதுக்கி விட்டு, ஓரணியில் திரளக் கூடிய வாய்ப்பை உண்டாக்கி தந்து விட்டன.

முழுப் புரட்சி இயக்கம் என்ற பெயரில் பெரும் போராட்டத்தை பீகாரில் இருந்தபடி நடத்தி வந்தவர் முதுபெரும் காந்தியவாதியான ஜெயப்ரகாஷ் நாராயணன். இந்திய ராணுவத்தையே இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டவர் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன்  என்கிற ஜே பி. அவரும் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அந்த காலகட்டத்தில் இருந்த காந்தியவாதிகளில் மூத்தவர்.எந்தவித தன்னலமும் இல்லாதவர்கள். எனவே விடுதலையான அனைவரும் திரண்டு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்தனர். அவசரம் அவசரமாக காங்கிரசுக்கு எதிரான அனைத்து கட்சிகளும்  ஒன்றிணைந்தனர். ஜனதா என்ற பெயரில் ஒருங்கிணைந்த அந்தக் கட்சிகளுடன், அப்போதைய ஜன சங்கம் கட்சியும் இரண்டரை கலந்து விட்டது தான் ஆச்சரியம். ஆனாலும் அது தாமரை இலைத் தண்ணீர் போன்றே இயங்கியது.

கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சியுடன் உடன்பாடு கொண்டிருந்தாலும் கூட அவை கட்சிக்குள் இணையாமல் ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணிக்குள் ஓரங்கம் என்று தங்களை பிரகடனப்படுத்திக் கொண்டன.

1977 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி நாடெங்கும் பரபரப்பாகக் களமாடியது. வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கான சாதனையை எட்டியது. தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வென்றது. அதற்குக் காரணம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த எம்ஜிஆர் என்ற  மந்திர சக்தி தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

டில்லியில் ஆட்சியமைக்க இருந்த நிலையில் கட்சியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் நெருங்கியது. அதற்குப் பலத்த போட்டி நிலவியது.

மொரார்ஜி தேசாய் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு, முட்டி மோதினார். ஜெகஜீவன் ராம் ஒருபுறம் சரண்சிங் மறுபுறம் என வெளிப்படையாகக் களமாடினர். மற்றவர்களுக்கும் இந்த ஆசை இருந்தாலும் கூட இந்த மூன்று பேரின் போட்டி -பூசல் காரணமாக, மனக்கணக்கை மறைத்து வைத்துக் கொண்டனர்.

மிகப் பெரும் சர்ச்சைகள் எழுந்த பின்னர், ஒருவழியாக அனைவரையும் அமைதிப்படுத்திய ஜெயப்பிரகாஷ் நாராயணன், முடிவாக  மொரார்ஜி தேசாயை அறிவித்தார். கனத்த மனத்தோடு அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். தேசாய் பிரதமர் ஆனார். நாடெங்கும் காந்தியவாதிகள் கொண்டாடித் தீர்த்தனர்.

நாட்டின் உச்சபட்ச நிர்வாகப் பொறுப்பில் இருந்த மொரார்ஜி தேசாயை விழாக்கள்  வாயிலாக நாடெங்கும் தொண்டர்கள் களைகட்டினர்.

இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்தது. நாடெங்கும் இருந்த ஜனதா கட்சித் தொண்டர்களுக்கு ஒரே குழப்பம். மொரார்ஜி தேசாய் பிறந்ததோ பிப்ரவரி 29ஆம் தேதி. அவரின் பிறந்த நாளை, பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடுவதா…மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடுவதா என்பதில் ஏகப்பட்ட சர்ச்சை. லீப் வருடத்தில் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி தேசாய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பல பேர் பிப்ரவரி 28ஆம் தேதி மற்றும் மார்ச் ஒன்றாம் தேதி என இரு நாட்களிலும் விழாக்கள் எடுத்து, தங்கள் கடமையைக் காட்சிப்படுத்திக் காட்டினர். நாடெங்கும் இருந்த தலைவர்கள் தங்கள் பிறந்த நாட்களை ஆண்டுதோறும் கொண்டாடிக் களித்து வருகின்ற சூழ்நிலையில், மொரார்ஜி தேசாய் மட்டும் ஏக்கத்தோடு பார்த்துச் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இருந்தார்.

Source link